Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1854

Words, words, words

$
0
0

 Polonius :What do you read, My Lord?


Hamlet : Words, words, words. 


'பூச்சி டயலாக் 'ஜானகிராமன் கதை. 


ஒரு கரப்பான் பூச்சி ஒரு கறுப்பு எறும்பிடம்

'என்சைக்ளோப்பிடியா பிரிட்டானிக்கா வாசிச்சதுண்டா? 

புக் ஆஃப் நாலெட்ஜ் படிச்சிருக்கியா? 'ன்னு கேட்கும். 


கறுப்பு எறும்பு பீற்றலாக "எங்களை என்ன வேலை மெனக்கெட்ட ஜாதின்னு நெனச்சியா, இப்படிப் புஸ்தகம் புஸ்தகம்னு அலையறதுக்கு? 

நாங்க என்ன கரையானா, ஒன்ன மாதிரி கரப்பானா? இல்ல மனுஷனா?" 


கரப்பு பதிலடி "ஞானசூன்யத்தைக் கௌரவமாச் சொல்லிக்கிற"


.. 


1972ல் டெல்லியில் 

தி. ஜானகிராமனை சந்திக்க வேண்டி செ.ரவீந்திரனை அழைத்துக்கொண்டு போனவர் பொன் ராஜாராம். 


தி. ஜானகிராமன் அப்போது 

ரவீந்திரனை

 கூர்ந்து பார்த்து கேட்டிருக்கிறார்.

 "உங்கள் வயதென்ன?" 


ரவி : "இருபத்தெட்டு" 


தி. ஜா : "முப்பத்தைந்து வயதிற்குள்ள நீங்க

 உலக இலக்கியம் படிச்சி முடிங்க."


..


இந்த புகைப்படம் இந்த 2020 ஜனவரியில். 

என்னுடைய நூல் 'சினிமா எனும் பூதம்' 


2019 புக்ஃபேர்ல சாரு நிவேதிதாவை 

ஏதோ ஒரு சேனலுக்காக காயத்ரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். 


சாரு : பெண்கள் இருந்தாலும் 

உளவியல் நெருக்கடி. 

இல்லாவிட்டாலும் உளவியல் நெருக்கடி. 


காயத்ரி : அது Likewise. 

ஆண்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. 

Likewise.




Viewing all articles
Browse latest Browse all 1854


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>