Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1851 articles
Browse latest View live

ரெண்டு கால் ஓநாய்

$
0
0

புதுமைப்பித்தன் சொல் திறன்.

மனித ஜென்மத்தை குறிப்பிடும்போது சுருக்கமாக ’இந்த இரண்டு கால் ஓநாய்’ என்பார்.
 
(ஜி.நாகராஜன் தீர்மானம் – மனுசன் மகத்தான சல்லிப்பயல்.)
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி எனும் ரெண்டு கால் ஓநாயாக வரும் நாகேஷ் ஆசுவாசம்
“ அப்பாடா, மைனர் போயிட்டாரேன்னு பக்குன்னு ஆயிடுச்சு, மிட்டாதார் கெடச்சவுன்னே ஜில்லுன்னு ஆயிடுச்சு.”
மகாராஜா நம்பியாரை பார்த்து விட்டு நாகேஷ்
“பெரிய தலப்பாவா கிடச்சிருக்கான்”

வைத்தி கேரக்டர் நாகேஷின் நகாசு வேலையில் நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தது. Vaithi planned ruthlessly to cope with his clumsy world.
(மாமாக்காரப்பயன்னு போட்டு உடைச்சிற வேண்டியது தானேய்யா)
எச்சிக்கலை வைத்தி கேரக்டர் பற்றி விளக்கமா சொல்ல கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும். கழுதை பொச்சுல வடியிற தேன கூட நக்குறவன் தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி.
                                                   காலேஜில படிக்கிற காலத்தில ஒரு ரெண்டு கால் ஓநாய் கூடப்படிக்கிறவர்களை பேர சொல்லி கூப்பிடவே மாட்டான். திறம்பாக ’டேய், டையப்பா’ என்றே கூப்பிடுவான். நண்பர்கள் மனசு ’புண்’படக்கூடாதே என்ற அக்கறை காரணமாக டையப்பாவுக்கு முன்னால் உள்ள ’புண்’ணை நீக்கி விட்டு கண்ணியமாக சத்தமிடுவான் “டேய், ஒன்னத்தாண்டா டேய், டையப்பா”.

http://rprajanayahem.blogspot.com/2018/03/blog-post_26.html




அது மனிதருக்கு தோழனடி

$
0
0

பேச்சு வழக்கில் ’நாய் மாதிரி ஒழைச்சேன்’ என்பதற்கு கவுண்டமணி காண்டு ஆகி சொன்னது “ நாய் எங்கடா ஒழச்சது. எப்பயும் கொலச்சது, கடிச்சது, இன்னும் எவ்வளவு காலம்டா நாய் மாதிரி ஒழைச்சேன்னு சொல்வீங்க”
ஒரு நாடகத்தில் நாயை பார்த்து நாகேஷ் பதற்றமாகும் போது பிரமீளா “ நாய் பாவம் சார், வாயில்லா ஜீவன்” எனும் போது நாகேஷ் பயந்து நடுங்கி சொல்வது “ வாயில்லா ஜீவன். ஆனா கடிக்கும், குதறும்.”


சென்னை காவேரி ஹாஸ்பிடலில்
பணியாற்றும் என் நண்பர் டாக்டர் ராஜாவின் நாய் கவிதை கீழே:

’எவரேனும் விரட்டியிருக்கலாம்
படியேறி நடக்கையில்
பாய்ந்து வருகிறது அந்த நாய்
வெல மீன் வருவலை
மதியம் உண்டிருந்தாலும்
மனதளவில் நான் விஜிடேரியன்
என்பதை நாயின் மோப்ப சக்தி அறியுமா?
நாலு கால் பாய்ச்சலில் குதிரை ஒன்று கிளம்ப
சுவரொட்டி நடுங்குகிறது
ஓர் பல்லி
நெருங்கி வருகையில்
ஒதுங்கிச் சென்று
தெறித்தோடியதைக்கண்டு
சிரிப்பு வந்து விட்டது எனக்கு
நாயும் சிரித்திருக்குமா என்பதை நானறியேன் பராபரமே’


நெகிழ்ச்சியான புத்தக சமர்ப்பணம் ஒன்று

$
0
0


”லே ஒன் வெர்த்திற்கு

இந்தப் புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர்.
மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட.
மூன்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை.
இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்).
ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:
லேஒன் வெர்த்திற்கு
அவர் சிறு பையனாக இருந்தபோது.”
புத்தகத்தை யாருக்காவது சமர்ப்பணம் செய்வது எல்லாருக்கும் வழக்கம். 1981ல் க்ரியா வெளியிட்ட குட்டி இளவரசன். பிரஞ்சு மொழியிருந்து வெ.ஸ்ரீராமும் மதன கல்யாணியும் நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருந்தார்கள்.
இதை வாங்கி அப்போது முதல் ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த குட்டி இளவரசன் புத்தகத்தை ஆசிரியர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி லெஒன் வெர்த் என்ற அவருடைய நண்பருக்கு எவ்வளவு அற்புதமாக சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இன்று படிக்கும்போது கூட கண் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வரியுமே தான் எவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு வரியில் இருந்து அடுத்த வரிக்கு சுலபமாக போக முடிவதில்லை.
Eyes are blind. You have to look with heart. Anything essential is invisible to the eyes.
Only the children know what they are looking for.
அந்த்வான் து செந்த்- எக்சுபரியின் நாவல் ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன் க்ரியா வெளியீடு. வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு. இரண்டு செவாலியெ விருது பெற்றிருக்கிறார்.

ஆஹா.. இந்த புத்தக வாசிப்பு எனும் சுகானுபவம் பற்றி எப்படி சொல்வது? ’சுகி எவ்வரோ’ என்ற தியாகப்பிரும்மத்தின் கானடா ராக பாடல் தான் நினைவு வருகிறது. Wind, Sand and Stars.
அந்த்வான் ஒரு பைலட். இவருடைய ஆகாய பயணங்கள் பற்றியது தான் இந்த நாவல். இவர் பைலட்டாக இருக்கும்போது இரு பெரு விபத்துக்களை எதிர் கொண்டு மீண்ட சாகசத்தை தான் எழுதிச்சென்றிருக்கிறார். அந்தக்கால விமானங்களை இயக்குவதில் இருந்த கடும் அதிர்ச்சிகரமான துயர சவால்கள். பாலைவனத்தொடுவானத்தில் மரணதை எதிர்நோக்கி இருப்பவரின் மனக்கிலேசம், யாரும் செவி மடுக்காத பிரார்த்தனை.
Man finds his supreme joy in adventure and creative action.
இந்த நாவல் தான் குட்டி இளவரசன் படைப்புக்கு ஊற்றுக்கண்.
அந்த்வான் வாழ்வு விமான பயணத்தில் தான் கடைசியில் முடிந்தது. அவர் சென்ற விமானம் என்ன ஆயிற்று என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை. மறைந்தே போனார்.
Nothing in truth, can ever replace a lost companion. Old comrades cannot be manufactured.
ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளை கௌரவைக்கும் விதமாக பிரஞ்சு அரசு ஐம்பது ஃப்ராங்க் நோட்டில் அவருடைய உருவப்படம், குட்டி இளவரசன் காட்சிகள் சிலவற்றுடன் வெளியிட்டது.


Aesthetic and artistic panorama

$
0
0

’முதியோர் இல்லத்துக்கு முன்புறம் வாகனங்கள் தடை செய்யப்பட்டிருந்த சிறிய சதுக்கத்தில் குழந்தைகளின் கூட்டம் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் ஆறு குழந்தைகள், எல்லாம் சீனக்குழந்தைகள்..
இந்தக்குழந்தைகளின் வயது ஐந்து முதல் பன்னிரெண்டு வரை. கீறல் போன்ற கண்கள், பாதி நெற்றி வரை நேர்கோடாக வெட்டப்பட்ட கருகருவென்ற முடி. பெரியவர்கள், அதாவது இவர்களில் மூத்த ஐந்து பேரும் சைக்கிள் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு சைக்கிள். ஆனால் சைக்கிளில் ஒரே சமயத்தில் மூன்று பேர் மட்டும் போகலாம், மற்ற இருவரும் பக்கத்தில் ஓடி வருவார்கள், பிறகு உடனே மாறிக்கொள்வார்கள். அந்தக் கடைசிக் குட்டிப் பையன் மட்டும் தனியாக விடப்பட்டு இருப்பான். இவன் சைக்கிளின் மேல் ஏறுவதும் இல்லை, அதன் பக்கத்தில் கூடவே ஓடுவதும் இல்லை. என்ன பயன்?’
வெ.ஸ்ரீராம் பிரஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துள்ள ”சின்ன சின்ன வாக்கியங்கள்’ என்ற நாவல் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் இன்னும் ஆங்கிலத்தில் கூட மொழிபெயர்க்கப்படவில்லை என தெரிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அற்புதமான பிரஞ்சு படைப்புகளை நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் வெ.ஸ்ரீராம்.

க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். நாவலின் 101ம் பக்கத்தில் மேற்கண்ட காட்சியின்பம்.

Perfection, thy name is Crea Ramakrishnan!
நாற்பத்தைந்து ஆண்டுகளாக இருக்கலாம் என நினைக்கிறேன். பதிப்புத்துறையில்   க்ரியா ராமகிருஷ்ணனின் தனித்துவ மிக்க சாதனை உயர்ந்த அளவில் கௌரவிக்கப்படவேண்டியது அவசியம்.







ஆகவே

$
0
0

’கயல்’ பிரபு சாலமோன் படம். பெண்ணை காணாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தில், நிலவரம் புரியாமல் ஒரு பெரிசு ’ஜமிந்தார் பவுசு’ காட்டி படத்தில் செம ரவுசு பண்ணும்.
அக்னி புத்திரன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்ததுண்டும்.
இவருடைய கவிதையொன்றில் ”பெண்களே, உங்கள் கண்களில் என்ன? சிறுநீர்ப் பைகளா?” என கேட்டதுண்டும்.
Women piss on your male chauvinism.


அந்த கால இலக்கிய அரசியலின் பொறி சிந்தும் வெங்கனல்

ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன் பாக்கறியா?

ந.முத்துசாமி : இவருக்கு மட்டும் என்ன தங்கத்துலயா தொங்குது.


விகடன் தடம்இந்த மாத இதழில் மறைந்தவே.பாபுவின் இந்தக் கவிதை காணக்கிடைத்தது.
‘கட்டிங்கைத் தண்ணீரில்லாமல்
ஒரே மடக்கில் குடிப்பவருக்கு
இரண்டு வெள்ளரித் துண்டுகள்
கொடுங்கள் தோழர்
ஏழு வருடங்களுக்கு முன்
5 லாரிகளுக்கு
ஓனர் அவர்.”

குமுதம் தீராநதிஇந்த டிசம்பர் இதழில் அபராஜிதாவின் “ஆயுசைக் கடத்திவிட” என்ற கவிதையொன்று
’என்னதான்
கவலையிருக்கட்டுமே
மருதகாசி வரிகளைக் கேட்கையில்
மறந்துவிடும் இயல்பு மாறிவிடவில்லை
எப்பேர்ப்பட்ட
துன்பமென்றாலும்
ஏ.எம்.ராஜா – ஜிக்கி குரல் ஒலிக்கும்போது
மறைந்து போகும் தன்மை
தொலைந்து போய்விடவில்லை.
எவ்வளவு
சோகமானாலும்
ஜி.ராமனாதன் இசை காற்றினில் வந்தால்
மாறிவிடும் மாயம் நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது.
நடிப்பது
சிவாஜி – பத்மினி
ஜெமினி – சாவித்ரி
எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி
எம்.ஜி.ஆர் – பானுமதியாக
இருந்து விட்டாலோ
பேரானந்தம் தான்.
முன்னமுள்ள
திரை இசைப்பாடல்கள் மட்டுமே
போதுமானவை தாம்
ஆயுசைக் கடத்தி விட’
சிற்றேடுகாலாண்டிதழில் ( அக்டோபர் - டிசெம்பர் 2018)
கிடைத்த
றாம் சந்தோஷ் கவிதை
’தலைவனும் நானும்
ஒரு பார்க்கிடையே
பார்த்துக்கொண்ட போது
மெல்லிய பூவாசம்
ஒருவித போதையைத் தந்தது
மலர் மொய்க்கும் வண்டென அவனான போது
குறிகளைக் கழற்றி நிலத்திடை வீசினோம்
அவை தனித்து
ஏதேதோ செய்துகொண்டிருந்தன
அவன் கொக்காகவும் நான் மீனாகவும் மாறி
விளையாடத் தொடங்குகிறோம்’

The chief guest

மொட்டயனும, சப்பக்காலனும்

$
0
0

'மால்'வாங்கப்போன மொட்டயன் வரணுமே என்று தவிப்பில் குருவி மண்டயன், மண்ட மூக்கன், ஆட்டு மூக்கன், ஒத்தக்காதன், முட்டாள் தாசு.
சப்பக்காலன் கஞ்சா, கலக்குமுட்டி எதுவும் வேண்டாதவன். ஆனால் அந்தக்கூட்டத்தோடு இருப்பான். அவனுக்கு பாஸிங்ஷோ சிகரெட்டும் டீயும் தான். வேறு எதுவும் தேவையில்லை.
மற்றவர்களுக்கோ மொட்டயன் எப்பயும் பொட்டலத்திலிருந்து ஒரு கள்ளி, சடைய ஆட்ட போட்டுடுவான் என்ற கவலை நிரந்தரமானது.
’திருந்தவே மாட்டானேடா’.
மீனாட்சி தியேட்டர் பள்ளத்தில் கஞ்சா வாங்கி வந்த மொட்டையனிடமிருந்து அவன் சுதாரிப்பதற்குள் பொட்டலத்தை பிடுங்கி அந்த காக்கி பேப்பரை பிரித்தான் மண்ட மூக்கன். அதிர்ச்சியாகி மற்றவர்கள் பார்க்கும்படி காட்டினான். பிரித்த பொட்டலத்தில் கஞ்சாவின் மேல் பகுதி குழியாக. ஒரு சடைய மொட்டயன் ஏற்கனவே அதிலிருந்து எடுத்து விட்டான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மண்டமூக்கன் உள்ளங்கை பொட்டலம்.
பாஸிங் ஷோ சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விட்டு கிணற்றிற்கு எட்டிப்பார்க்கும் தோரணையில் சப்பைக்காலன் விரிக்கப்பட்ட பொட்டலத்தின் உள்ளே பார்த்து விட்டு அடுத்த வினாடியே மொட்டயன நிமிர்ந்து பார்த்து உச்சஸ்தாயியில் பாடினான்: சபாஷ் தம்பி, உன் ”செய்கை”யை போற்றுகிறேன். நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன். சபாஷ் தம்பி…”
மதுரையில் தொர்ரி, ஆட்ட என்ற வட்டார வழக்கு வார்த்தைகளை தூய தமிழில் ’திருட்டு’ என பகராமல் ‘செய்கை’ என்றும் சொல்வது மரபு.
- நியு சினிமா தியேட்டருக்கு ”You can’t win them all” படம் பார்க்க போயிருந்த போது இடைவேளையில் அங்கே யாரோ ஒரு முகந்தெரியாதவன் “ஐயோ, என் மோதிரத்த காணோம்” என அலறினான். கதறினான் என்ற வார்த்தை தான் பொருந்தும். மொட்டயன் தான் அந்த ஆள கூடவே சேர்ந்து ரொம்ப தேடினான். ’அழாதய்யா…இந்தாளு பாவம்யா’ ம்ஹூம். மோதிரம் கிடைக்கவில்லை. பறி கொடுத்தவன் இடைவேளக்கி பிறகு ஏங்கி ஏங்கி விசும்பிக்கொண்டே ”என் மோதரம்”னு அரற்றிக்கொண்டே தான் படம் பார்த்தான். ‘பாவம்யா இந்தாளு..அழாம படத்த பாருய்யா..” டோனி கர்ட்டிசும் சார்லன் பிரான்சனும் நடித்த படம் அது.
மறு நாள் மொட்டயன் சிவப்பு பேண்டுக்குள்ள கிளிப்பச்ச கலர் சட்டய இன் பண்ணி, மூஞ்சில பவுடர அப்பி, கூலிங்க்ளாஸ மாட்டிக்கொண்டு ஏ.ஏ. ரோட்டில பந்தாவா நடந்து வந்தான்.
மொட்டயன் எப்போதும் ஒரு தொர்ரி பண்ணா, ஆட்டய போட்டா, அந்த செழிம்பில (செழிப்பு என்பதற்கு வட்டார வழக்கு செழிம்பு) உடனே மறு நாள் பேண்ட் உள்ளே சட்டய இன் பண்ணி, மூஞ்சில பவுடர அப்பி, கூலிங்க்ளாஸ் போட்டு வந்து நிக்கறத பார்த்தா, சுருக்கமா அந்த அழகு, நேர்த்தி பற்றி சொல்லணும்னா ’சூத்தாம்பட்டக்கி மை போட்ட கத’ தான். கண்ணுக்குத் தான மை?
(Dissolve)
ஆண்டுகள் பல கடந்தன.
மொட்டையன் ஃபுல் போதையில அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் உள்ள டீக்கடையொன்றை பார்த்தான். அங்கே சப்பக்காலன் டீ குடித்து விட்டு ஒரு பாஸிங் ஷோ சிகரெட் பற்ற வைத்து சுகமாக வாயில் வைத்து உள்ளிழுத்து ஊதுவதைப்பார்த்தான். தள்ளாடி அவனிடம் வந்தான்.
’டேய் சப்பக்காலா, டேய்’
சப்பக்காலன் சட்டையே பண்ணாமல் வெற்றுப்பார்வை பார்த்தான்.
டீக்கடை ரேடியோவில் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்” பாட்டு.
மொட்டையன் “டேய் என்ன நினைச்சே இந்தப்பாட்ட எழுதியிருக்கான். என் வாழ்க்க தான்டா இந்தப் பாட்டு.”
ரேடியோ ”பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது? பொல்லாத மனமென்று பேர் வந்தது”
”டேய் சப்பக்காலா, என்னடா இது அப்படியே என் மனசுல உள்ளத பாட்டா எழுதுனான். என் கதயவே ஒரு பாட்டா எழுதிட்டான். நான் பாட வேண்டிய பாட்டுடா இது.”
மொட்டையன் சில வருடங்களுக்கு முன் இதே டீக்கடையில் ஒரு பய அவன் அண்ணன் குழந்தய தூக்கிட்டு வந்த போது அந்த குழந்தய வாங்கி கொஞ்சி விட்டு, நைசாக காலில் உள்ள கொலுசுகளை கழட்டி வித்து அந்தக் காசில் சப்பக்காலன தத்தனேரி மாருதி டூரிங் டாக்கிஸுக்கு செகன்ட் ஷோ கூட்டிட்டு போய், மொட்டயன் தான் கொலுசை ஆட்டய போட்டவன் என்று ஊர் உலகத்துக்கு தெரிய வந்து… இதனால் சப்பக்காலனுக்கும் அவமானமும், துயரமும் நிகழ்ந்த கதையொன்று உண்டு.
இப்ப மொட்டயன் பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது என்று தன்னிரக்கத்தில் உருகுறான்.
மொட்டயன் “ டேய் சப்பக்காலா, நான் ரொம்ப காலம் உயிரோட இருக்க மாட்டன்டா. ஆனா ஒன்னு. டேய் நான் செத்தன்னா ( குரல் தளும்புகிறது) நான் செத்தன்னா மொத மால நீ தான்டா போடனும்.”
மேற்கண்ட சம்பவத்தை என்னிடம் விவரித்த சப்பக்காலன்
“பொறுத்துப்பொறுத்து பாத்தேன்.” என்று pause விட்டான். ஓங்கி சுரீர் என்று மொட்டயன் கன்னத்தில் ஒரு அடி கொடுத்திட்டான் போலன்னு அந்த வினாடியில் நான் எண்ணும்படியாகி விட்டது.
ஆனால் சப்பக்காலன் “ மொட்டயன் ‘நான் செத்தா மொத மால நீ தான் போடணும்’னு திரும்பத்திரும்ப அனத்துனான். பொறுத்துப்பொறுத்துப் பாத்தேன்.
‘சரி’
ன்னுட்டேன்.”


’அதி மதுர’ மதுர ஹிந்தி சினிமா

$
0
0

மதுரை தங்கம் தியேட்டரில் ’தோராஹா’ படம்.
அனில் தாவன், ராதா சலூஜா, ரூபேஷ்குமார் நடித்தது.
தமிழில் பின்னால் வெண்ணிற ஆடை நிர்மலா, சசிகுமார், ஸ்ரீகாந்த் நடித்து வெளி வந்திருக்கிறது.
ராதா சலூஜா தமிழில் எம்.ஜி.ஆர் கதாநாயகியானதும் தெரிந்ததே.
தோ ராஹா ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படம். அப்போதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்றால் ஒரு பரபரப்பு இருக்கும்.
’ஜரூரத்’ என்று கூட ரீனா ராய், விஜய் அரோரா, டேனி நடித்து ஒரு ’ஏ’ படம் அதே தங்கம் தியேட்டரில் மதுரைக்காரர்கள் பார்த்ததுண்டு.
ரெஹனா சுல்தான் படம் சேத்னா.
தோ ராஹாவில் கணவன் அனில் தாவன் தன் மனைவிக்கு குடிப்பழக்கம் ஏற்பட காரணமாயிருப்பான். கணவனின் நண்பன் ரூபேஷ்குமார் இதை சாதகமாக்கி குடிபோதையில் இருக்கும் ராதா சலூஜாவை கெடுத்து விடுவான்.

போதையில் தப்பு நடந்து விட்டது என்பதை அவள் சொல்லும் போது கணவன் ’கீதா’ என்று பதறுவான்.

அப்போது அவள் கோபத்துடன் எரிச்சலாகி ’கீதா, கீதா, கீதா’ என்று மூன்று முறை சொல்லி இந்தியில் உன் நண்பன் தான் செய்தது என்பதை உடைத்து சொல்வாள்.

படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஆட்டுமூக்கன் தன் சேக்காளி தொல்லையிடம் கதை சொல்லிக்கொண்டு வந்தான்.

’டேய் தொல்ல, கடைசில க்ளைமாக்ஸ்ல தாட்டி சொல்றது தமிழ் மாதிரியெ தான் டயலாக். கவனிச்சியா.. “ கீதா, கீதா, கீதா…. ச்சீ… துமாரா கி ’குச்சி’ நஹி. துமாரா தோஸ்துக்கு ’குச்சி’ வச்சி என் பொச்சில் வச்சி கிச்சி, கிச்சி”ன்னு தெளிவா சொல்றா பாத்தியா. போடா பொட்டன்னுட்டா. இவன் ஒரு நட்டு தாழன். அவன் தோஸ்த்து கொம்பு தாழன் கல்லு காயவும் தோச சுட்டுட்டான்.நெம்பு கோலின் தத்துவத்த தாட்டிக்கு விளக்கிட்டான்.

ஒச்சு உடனே தேவ் ஆனந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் இருந்து ஒரு பாட்டு பாட ஆரம்பித்தான்.

” பூலோங்கோத்தாங்கொம்மா வாயில வச்சா ஹே
ஏ ஹசா ரூமே உங்க புண்டயில் ஓத்தாஹே
சாரி உமர் உங்க பொச்சில தேச்சாஹெ”

பெரு நஷ்டம்

$
0
0

உள்ளூர் அதிமுககாரன் ஒருவன். எம்.எல்.ஏ சீட்டுக்கும், கட்சியில் பெரிய பதவிக்காகவும் ஏங்கிக்கொண்டிருந்த திருவாழத்தான் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க பகீரத பிரயத்தனம் செய்தான்.
அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஒரு மந்திரியின் நண்பனான உள்ளூர் வக்கீல் மூலம் கிடைக்க மந்திரியை குளிப்பாட்டினான்.
கட்சித்தலைவரை வெறுங்கையுடன் போய் பார்க்க முடியுமா? அந்த நேரத்தில் நினைத்தே பார்க்கமுடியாத பெருந்தொகைக்கு தங்கம்,வெள்ளி ஜாமான்கள் உட்பட வாங்கிக்கொண்டான்.
தௌமிய பட்டரை ஸ்லோகங்கள் சொல்லி மகிழ்விக்க தன் கூடவே அழைத்துச் சென்றான். இரண்டு நிமிட நேரம் தான் ஒதுக்கப்பட்ட நேரம். தௌமிய பட்டர் சுறுசுறுப்பானவன். அதற்குள் ஸ்லோகம் எல்லாம் தௌமியன் சொல்லி முடித்தவுடன், உடனே,உடனே “இவங்கள வெளிய அனுப்பி கதவ சாத்து” என்ற அளவேயான மரியாதையை ஏற்றுக்கொண்டு அதிமுக திருவாழத்தான் ஊர் வந்து தன் கடையில் (வீட்டிலும் தான்) பெரிய போட்டோ ஃப்ரேம் செய்து மாட்டிக்கொண்டான்.
கங்கு பட்டர் வந்து “ஓய் பிரமாதங்காணும். தௌமியன் சொன்னான். அம்மா பரவசத்தில கை கூப்பி கண்ண மூடி திறக்கவேயில்லையாமே.”
கண்ண திறக்கறதுக்குள்ள தான் கழுத்த பிடிச்சி வெளிய தள்ளிட்டாங்களே.
கங்கு பட்டர் “ என்ன ஓய், இப்பல்லாம் உங்காத்துல மட்டன், சிக்கன் சமைச்சா சாப்பிடக் கூப்பிடவே மாட்டேன்றீர். நாக்கு துறு துறுன்னு மாமிச பட்சணம் சாப்பிட துடிக்கிறது ஓய். நான் போய் புரோட்டா கடையில ஒக்கார முடியுமா? எள்ளி நகையாடிடுவாளே ஓய். வர்ற ஞாயித்துக்கிழமை வரட்டுமா”
போயஸ்கார்டன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த வக்கீலே அந்த உள்ளூர் அரசியல்வாதியைப்பற்றி “இவன மாதிரி கால் (1/4) முட்டாப்பயல பாக்கவே முடியாது. அம்மாவ கௌரவப்படுத்துறானாம். பரப்பெடுத்த பய. இவ்வளவு செலவு செய்யணுமா?” என்று கமெண்ட் அடித்தான்.
பெருந்தொகை செலவழித்து விட்டதால் கட்சி மரியாதை இன்னேரம் கிடைச்சிருக்கணுமே என்று அந்த உள்ளூர் அதிமுக கார திருவாழத்தான், சபாஷ் மீனா பட காமெடி மாதிரி இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே என்று நாக்க தொங்கப்போட்டு தவிச்சி தக்காளி வித்து ஒன்னும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ வாகவும் இல்லை. கட்சி பெரிய பதவியும் கிடைக்கவேயில்லை.
ஊர அடிச்சி ஒலையில போட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் கடையை மூடி விட்டு தலை மறைவான திருவாழத்தானுக்கு சதுர கிரி சுந்தர மஹாலிங்கம் கோவிலுக்கு போய் உண்ட கட்டி மட்டும் சாப்பிட நிறைய கிடைத்தது. தலையில ஓத்த விதின்னு சலிச்சிக்கிட்டான்.
கங்குவும் தௌமியனும் பெரிய வைஷ்ணவ கோவிலில் பிசியான பட்டர்கள்.
அயக்ரீவர் சன்னதிக்கு போனால், கல்விக்கான துடியான தெய்வம் இது தான். ’குழந்தைகள் படிப்புக்கு பிரார்த்திச்சிக்கோங்க.’ என்று தௌமியன் கேன்வாஸ் செய்வான். தட்டில வசூல் கொட்டனுமே. சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு போனா கங்கு பட்டர் “சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள்” என்று தட்டை நீட்டுவான்.
கங்குவும் தௌமியனும் ஓய்ந்த நேரத்தில் புது பிசினஸ் பற்றி ஆலோசனையில். கூடவே ராகவய்யங்கார்.
தௌமியன் : நான் எப்பவும் அதிகாலையில எந்திரிச்சிடுவன். குயில் கூவுறச்ச. தெரியுமோல்லியோ. அதி காலை குயில் கூவுற சத்தம் ஏழேழு லோகத்திலும் கேக்கும்.
பிரமாதமான டவர் இருக்கும்போல என்று ராகவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே
கங்கு : டேய் தௌமி, ராகவனோட ஒன்னரை செண்டு எடம் பரந்தாமன் புரத்தில இருக்கோல்லியோ. அந்த இடத்தில ஒரு சின்னக்கோவில கட்டணும்னு சொல்லிண்டே இருக்கான்.
தௌமியன் : சின்னதா சிலாக்கியமா ஒரு சுவர், இப்போதைக்கு மேல கூரை போட்டுண்டுடலாம். நல்ல விக்ரஹம் பிரதிஷ்டை பண்ணிடலாம். டேய் ராகவா அந்த எடத்த மட்டும் என் பேருல எழுதிக்கொடுத்துடு. கோவில நான் பாத்துண்டறேன். கங்குவுக்கு பார்ட் டைம்.
தௌமியன் தோல் இருக்க சொள முழுங்கி. போரெல்லாம் பொரி பொறுக்கி.
ராகவன் துண்ட காணோம், துணியக்காணோம் என்று தலை தெறிக்க ஓடியே போய் விட்டான்.
கங்கு: காரியத்த கெடுத்துட்டியேடா தௌமி, நாம பட்டர்னால நம்ம கோவில் தானேடா. வெண்ண தெரண்டு வரும் போது தாழிய ஒடச்சிட்டியடா..தன்னுடைமை வெறிய இப்படி வெளிப்படயா சொல்லலாமாடா மட்டி.




Not a fairy tale

$
0
0

பெங்களூரில் இருந்து அருமை நண்பன் எம்.சரவணன் சென்னை அண்ணாமலை புரம் வந்து என்னை சந்திக்க வரும்படி ஞாயிற்றுக்கிழமை அழைத்த போது உற்சாகம் தான். சரவணன் என்னுடைய அற்புதமான நண்பன். தலைசிறந்த வாசகன். ஸ்திதப்ரக்ஞை மிக்க அபூர்வ பிறவி. 

முதல் முதலாக சரவணனை ஸ்கூல் யூனிபார்மில் பார்த்தேன். முப்பத்தெட்டு வருடங்கள் முன்பு.
ராஜா அண்ணாமலைபுரம் பற்றிய ஒரு பழைய நினைவு. மதுரை சேதுபதி ஃபில்ம்ஸ் முதலாளி அப்போது என்னை இயக்குனர் மௌலியிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக சேர்த்து விட ஒரு முயற்சி செய்தார். மௌலியை சந்திக்க அப்போது அவருடைய வீட்டிற்கு அதிகாலையில் ஈகா தியேட்டருக்கு பின்னால் நான் இருந்த எம்.இ.எஸ். ஹாஸ்டலில் இருந்து கிளம்பி நேரத்தில் ராஜா அண்ணாமலை புரம் வந்து மௌலி வீட்டில் நுழைந்தேன். அவர் மனைவி என்னை விசாரித்து உட்காரச்சொன்னார். மௌலி வந்தார். “ Yes, What can I do for you?” என்று முதல் வார்த்தை பேசினார்.
அந்த முயற்சி ஈடேறவில்லை.
மூன்று வருடத்திற்கு முன் சென்னைக்கு நான் வந்த புதிதில் வேலை தேடி ராஜா அண்ணாமலை புரம் வந்திருக்கிறேன். அங்கே வேலை விஷயம் தோல்வி.
இன்று பதினொரு மணி வாக்கில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கற்பகம் அவென்யு நான்காவது தெருவில் சரவணன் அனுப்பிய டாக்ஸி நுழைந்து இடது புறம் முதல் சந்தில் டெட் எண்டில் இருந்த வீட்டு முன் நின்றது. இன்றைய கேரளா கவர்னர் சதாசிவத்தின் வீடு அது. இப்போது வாடகைக்கு விட்டிருக்கிறார்.
சரவணன், அவருடைய பார்ட்னர் ஜோதி கிருஷ்ணா இருவருடைய ஆஃபிஸ் மாடியில்.
மாலையில் ’துப்பாக்கி முனை’ படம் சிட்டி செண்டரில் ஐனாக்ஸ் தியேட்டரில் பார்த்து விட்டு ஓலா டாக்ஸியில் வீடு திரும்புகிறேன்.
டாக்ஸி டிரைவர் பெரம்பலூர் பரமசிவன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு 1990ல் சென்னை வந்திருக்கிறார். ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சேர்ந்து, ஓய்ந்த நேரத்தில் இளையராஜா வீட்டு முன் நிற்பாராம். பாரதி ராஜா ஆஃபிஸ் முன் நிற்பாராம். யாரையும் நேரில் சந்திக்க பரமசிவனுக்கு தைரியம் போதவில்லை. (ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?)பின்னர் டிரைவிங் பழகி லைசன்ஸ் எடுத்து டாக்ஸி ஓட்டுகிறார்.
சென்னையில் அவர் எங்கும் தங்கவில்லை. படுக்கையெல்லாம் காரில் தான். காலைக்கடன் இதற்கான இடங்களில். ஏர்போர்ட் வளாகத்தில் கூட குளிக்க வசதியிருக்கிறதாமே. மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஓலா ஆஃபிஸ் போய் சம்பளம் வாங்கிக்கொள்வார். பதினைந்து நாட்களுக்கொரு முறை பெரம்பலூர் போய் விடுவார்.
Harsh reality. Life does not have to be perfect to be wonderful.

திருமணமாகி ஒரு பிள்ளை பெற்றடுத்த மனைவி இப்போது இல்லை. இறந்து விட்டார். பரமசிவனின் அம்மா தான் பையனை வளர்க்கிறார்.
ஒரு வாரமோ, பத்து நாளோ கழித்து மீண்டும் சென்னை வந்து டாக்ஸி பதினைந்து நாள் ஓட்டி, பெரம்பலூர் போய்.. He has the strength to endure a difficult life.





அது மனிதருக்கு தோழனடி - 2

$
0
0

எங்க வீட்டு பாதாம் மரத்தில் காலை பத்தரை போல வந்தமரும் அண்டங்காக்கைகள் இரண்டும் 12 மணி போல தான் கிளம்புகிறது. பிற காகங்கள் போல சமையலறை ஜன்னலில் அமர்ந்து, கொடுப்பதை சாப்பிடுகின்றன.
.
முத்துசாமி சார் இறந்த பின்னால் தான் இந்த ஜோடி அண்டங்காக்கைகள் எங்களின் அனுதின அதிதிகளாக இருக்கின்றன. முத்துசாமி தேடிப்போய் பார்க்க ஆசைப்பட்ட அண்டங்காக்கைகள்.  பால்ய பருவத்தில் அவர் மனதில் முதலில் பதிந்த பாதாம் மரத்தில் இன்று.
ஆத்மீக அனுபவம்.
காக்கை குருவி எங்கள் ஜாதியென்றான் கவி. குருவிகளை காணமுடியவில்லை. காக்கை எங்கள் ஜாதி.
பழகாத நாயைப்பார்க்கும் போது தான் திகில், பயம். நம்மிடம் பழகும் நாய்கள் மனிதருக்கு தோழர்கள் தானே.

கூத்துப்பட்டறை தெருவில் இருக்கும் ஒரு வெள்ளை நாய் (வெள்ளக்கண்ணு என்று பெயர் வைத்திருக்கிறேன்.) முத்துசாமி சாருக்கும் எனக்கும் நல்ல நண்பன். எப்போதும் இதற்காக பொறை போடுவேன். சார் அவ்வளவு சந்தோஷப்படுவார். ”இதோட பேர் என்ன சொன்னீங்க” என்று அடிக்கடி கேட்டுக்கொள்வார். குஞ்சலி மாமி கூட பொறை தருவார்.

முத்துசாமிக்கும் பூனைகளுக்குமான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம். அது பற்றி தனியாக எழுதவேண்டும்.
இப்போது வெள்ளக்கண்ணு என்னைப்பார்த்தவுடன் கூடவே வருகிறது. A very interesting one. இதற்காகவே நான் பட்டறையில் பொறை எப்போதும் வைத்திருப்பேன்.
சென்ற வருடம் வரை எதிர்த்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு கறுப்பு பெண் நாய். ப்ளாக்கி என்று பெயர். அதை முத்துசாமி சார் ஒரு நாளில் பல முறை கூப்பிடுவார். ஓடி வந்து அவர் காலடியில் உட்கார்ந்து விடும்.
அதற்கு எப்போதும் பொறை வீட்டில் இருக்கிறதோ இல்லையோ அப்போது என்னிடமிருந்த ஸ்கூட்டரில் இருக்கும். பொறை போடும் போது சார் முகம் மலர்வதை பார்க்க வேண்டும். அவ்வளவு சந்தோஷப்படுவார்.
அதன் பாய் ஃப்ரெண்ட் தான் வெள்ளக்கண்ணு. ப்ளாக்கியை பார்க்க பட்டறைக்கே வந்து விடும்.
வெள்ளக்கண்ணு இருக்கும்போது பொறை போட்டால் ப்ளாக்கி எப்போதும் வாய் வைக்காது.“அதிதியை கவனியுங்க” என்ற தோரணையில் இருக்கும். வெள்ளக்கண்ணு பொறைகளை அவுக்கு, அவுக்குன்னு தின்னும்.
ஒரு நாள் நான் சாரோடு வீட்டுக்குள் இருக்கும் போது “ ஐயய்யோ” என்று பதறிப்போய் மிக சத்தமாக சொன்னார். ப்ளாக்கியை அதன் எஜமானரே ஆட்கள் மூலம் பிடித்து ஒரு வேனில் ஏற்ற முயற்சித்த போது பட்டறைக்குள் ஓடி வந்து விட்டது. சார் விடாமல் ’ஐயோ, ஐயோ’ என்று கத்தினார்.
நாயின் எஜமானரும், எஜமானியும் என்னிடம் “ அதற்கு தோல் வியாதி. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து விடும்.” என்றார்கள். சாரிடம் இதை சொல்லி சமாதானப்படுத்தினேன்.
அந்த நாய் வேனில் கட்டி ஏற்றப்பட்ட போது என்னை பரிதாபமாக பார்த்த பார்வை… Its eyes had the power to speak a great language.
அப்போது என்னருகில் இருந்த இஸ்ரேலி ஜென் மாஸ்டர் கில் ஆலன் “It’s a lie. They won’t bring it back, I think” என்று சொன்னது தான் உண்மை என்றாயிற்று.
வெள்ளக்கண்ணு அந்த கறுத்தம்மா ப்ளாக்கி இழப்பை எப்படி தாங்கிக்கொண்டதோ தெரியவில்லை.
முத்துசாமி சாரையும் தான் வெள்ளக்கண்ணுவால் கூட மறக்க முடியுமா?
மிலன் குந்தேரா சொன்னது போல “Dogs are our link to paradise.”
…………..

பிறர்க்கின்னா, தமக்கின்னா

$
0
0



கோனக்கழுத்துக்காரன் காக்காய் பிடிப்பதை கவனமாக செய்பவன். காக்காய் பிடிக்கப்பட்டவர்க்கு கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் காக்காய் பிடிப்பான். கழுத்து வெட்டி வெட்டி இழுக்கும்.
நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஒரு பெரிய டைரக்டரிடம் சேர்ந்த போது அங்கே அவன் ஏற்கனவே அதே அதே ஆக இருந்தான்.
அவன் எடுக்கப்போகிற படங்களின் கதையெல்லாம் ஒரே ஃப்ரேமில் ஆறு ஹெலிகாப்டர் கீழே நிற்கும் நாற்பது கார்கள் மீது குண்டு போட்டு தூள் தூளாக்குகிற கதைகள். பெரிய பங்களா வெடி வைத்து தூள் தூளாகும் போது பக்கத்தில் உள்ள வீடுகளும் நாசமாகும் கதைகள் தான். கதாநாயகன் ஏகே 47 கையில் வைத்துக்கொண்டு ரொம்ப பதட்டத்துடன் படம் பூரா தவிச்சி தக்காளி விக்கிற கதை தான். பிரமாண்டமாய் படம் எடுப்பது தான் லட்சியமாம்.
காலையில் ஆறுமணிக்கு கிளம்பி சூட்டிங் ஸ்பாட் போனால் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும்.
மாலையில் ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெருஞ்சிப்பேட்டை வீட்டில் திண்டில் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய உட்கார்ந்தேன்.
அந்த நேரத்தில் கதாநாயகனும் இயக்குனருமான நடிகர் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார்.
பக்கத்தில் ஒரு ஸ்கூட்டர் இருந்திருக்கிறது. கேமராமேன் அந்த ஸ்கூட்டர் இருக்கும் இடம் அடுத்த ஷாட்டில் வருவதால் அதை அங்கிருந்து அகற்ற வேண்டியிருக்கிறார்.
நடிக இயக்குனர் சுவாதீனமாக அதை நகர்த்த ஆரம்பிக்கும் போது, கோண கழுத்தன் அவரைப்பார்த்தான். திண்டில் உட்கார்ந்திருந்த என்னையும் பார்த்தான். கழுத்தை வெட்டி வெட்டி இன்னொரு தடவை பார்த்தான்.
உடனே என்னைத்தவிர எல்லோருமே கவனிக்கும்படியாக ‘அய்யோ, அய்யய்யெ..இங்க பாருங்க. டைரக்டர் ஸ்கூட்டர் தள்ளும்போது இவரு எனக்கென்னன்னு உட்கார்ந்திருக்கறத பாருங்க.” அபச்சாரம், அபச்சாரம் என்று பெரிய சீன் பண்ணி விட்டான். இத்தனைக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை.
கவனமாய் காக்காய் பிடித்தவன் ஆனதால் டைரக்டரின் சொந்த தயாரிப்பில் ரெண்டு டப்பா படம் கூட இயக்குகிற வாய்ப்பு கிடைக்கப்பெற்றான். ’புதுவெள்ளம்’ என்ற பழைய படத்தை காப்பியடித்து ஒரு படம். இன்னொரு படமும் அப்படித்தான் வேறொரு பழைய படமாய் இருந்திருக்கும்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகர் ஒரு ஃப்ராடு பெண்ணிடம் சிக்கி அவளால் போலீஸ் பிரச்னைக்கு ஆளான போது, அவருக்கு முன் சில காலம் முன் அந்தப்பெண்ணுடன் இந்த கோண கழுத்தன் தான் இடுப்புக்கு கீழே எட்டு சுத்து பின்னி படர்ந்து கொண்டிருந்தவன் என்பதும் ஹாட் டாபிக்காக இருந்தது.

காலம் உருண்டதோ ஓடியதோ பறந்ததோ.

கொஞ்ச காலம் முன் வரை ஒட்டுண்ணியாக அந்த பிரபல இயக்குனரிடம் தான் இருந்திருக்கிறான். எங்கோ போய் விட்டு, அவருடைய ஆஃபிஸில் நடுநிசிக்கு மேல் சுவரேறிக் குதித்து வந்து படுப்பானாம். குடி போதை தான் எப்போதும்.
அந்த டைரக்டர் “ச்சீ போய்த்தொலை” என்று துரத்தி விட்டார்.


போன மாசம் சாலிகிராமத்தில் ஒரு அறையில் செத்துக்கிடந்தானாம். ரெண்டு நாள் கழித்து கதவை உடைத்துத் தான் நாறுன பொணத்தை எடுத்திருக்கிறார்கள்.

Something

$
0
0

’ராஜராஜ சோழனின் ஆவி இன்னும் சாந்தியடையவில்லை.’ இப்படி ஒரு கவலை.
’அனுமன் ஒரு தலித்.’ இப்படி ஒரு கண்டுபிடிப்பு.
இட்லி விலை பற்றி Thesis. அம்மா உணவக இட்லி துவங்கி அம்மா சாப்பிட்ட அப்பல்லோ இட்லி வரை.

இது மாதிரி விஷயங்களெல்லாம் மூளைய சிரமப்படுத்தாதா? கண்ணுக்கே சிக்கலாகாதா? ஒற்றை தலைவலி வராதா. Sighs and heaves. Discord and Dismay.

Nothing could be done.பெக்கட்டின் ’வெய்ட்டிங் ஃபார் கோடா’ நாடகத்தின் முதல் வசனம் இது.
What are we waiting for? Who could be of any help? What power shapes our way? There is no me and you.

டாரண்டினோவுடைய 'பல்ப் ஃபிக்சன்'படத்தில் லான்ஸ் என்ற பாத்திரம் சொல்வது: If you are alright, say something.
அதற்கு மியா பதில் : Something.

ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் “ Something is rotten in the state of Denmark.
அம்புலி மாமா கதை சின்ன பையனா இருக்கப்ப படிச்சது.
லூயிஸ் கரோல் எழுதின ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் பெரிய பையனா ஆனப்புறம் படிச்சு சுவைச்சது.
Alice in wonderland syndrome என்பது நிரந்தரமா?
ஜோனாதன் ஸ்விஃப்ட் கதைத்த கலிவர்’ஸ் ட்ராவல் லில்லிபுட் தீவு சித்திரவதை இனி தீர்வில்லாத தன்மையதாக யதார்த்தத்தில் சுற்றி வருகிறதா?
Can’t suffer fools and foolings.
ஒரு பீற்றல் பூதகி தேவையேயில்லாமல் மூக்கை நுழைத்து வார்த்தைகளை அள்ளித்தெளித்து விட்டு போன பின் அது பற்றி ’அற்ப சுபாவங்களை சகித்துக்கொள்ள முடிவதில்லை’ என ந.முத்துசாமி தன் மன வலி பற்றி என்னிடம் சொன்னார்.
ரசிகமணி டி.கே.சி ஒரு மோசமான மனிதர் பற்றி சொன்ன ஒரு வரி “ காண்டாமிருகம் சைவம் தான். ஆனா ஆள கொன்னுடும்”
தி.ஜானகிராமன் “ இந்த மனிதர்கள் எந்த கைக்குட்டையால் தங்கள் நெஞ்சின் ஈரத்தை துடைத்துக்கொள்கிறார்கள். நரகத்தில் நெய்த கைக்குட்டையாலா?”
கிங் லியரில் ஷேக்ஸ்பியர்“ Is there any cause in nature that makes these hard hearts?”

"Another year ! Another deadly blow!"
-Wordsworth
"Month follows month with woe,
And year wakes year to sorrow"
-Shelley

சிக்கலும் சவாலும்

$
0
0

விஞ்ஞானத்திலும் காலாவதி சமாச்சாரம்.
விஞ்ஞான உண்மைகள் எல்லாம் கேள்விக்குரியதாகி வருகிறது.
ஐன்ஸ்டினின் E = MC2 தவறு என்று தமிழ் விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் கூறுகிறார். ஆழியாரில் உள்ள உலக சமுதாய சேவா மையத்தின் விஞ்ஞானி இவர்.
சூரியன் முதலான கிரகங்களை விட அண்ட வெளி அடர்த்தியானதாம். கிரகங்களுக்கு அண்டவெலி சீரான சமமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால் தான் கிரக நகர்வு. நியூட்டனும் ஐன்ஸ்டினும் இதை முழுமையாக புரிந்திருக்கவில்லையாம். ஆகவே ஐன்ஸ்டின் உலகத்துக்கு சரியான பாதையை காட்டவில்லை என்கிறார் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன்.
’நம்பகத்தன்மை’ என்ற பிரமை எவ்வளவு அற்பமானது என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்க முடியும்? அனுமானம் என்பது விஞ்ஞானத்திலும் விரவியிருக்கிறதா?
மூட நம்பிக்கை, மாயை, கட்டுக்கதைகளுக்கு எதிராக இருக்கும் வெளிச்சம் தான் விஞ்ஞானம் என்ற நிலை கேலிக்குரியதாகிறதா?
ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நிகழ்ந்தேறிக்கொண்டிருப்பது சாமி கொடுத்த வரம். நடேஷ் சாமி கொடுத்த வரம். பெரும் தடைகளையும் இந்த வரம் மீறியதால் டிசம்பர்ட் 15லும் 30ம் தேதியிலும் கூத்துப்பட்டறையில் என் பெர்ஃபாமன்ஸ் நடந்தது.
டிசம்பர் 23ம் தேதியும் நடந்தது.
15ம் தேதி நிகழ்ச்சி நடந்த பின் ஒரு இளைஞன் என் காலில் விழுந்து பரவசப்பட்டான்.
30ம் தேதி உற்சாக அப்ளாஸிற்கிடையே ஒரு கமெண்ட். “சினிமாவில் கூட இப்படி நான் சிரிச்சத்தில்லை சார்.”
ஒரு இருபது வயது பெண் ‘ என்ன சொல்றதுன்னே தெரியல சார். கூத்துப்பட்டறையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரொம்ப பிரமாதம் சார்”
என்று பிரமிப்பு நீங்காத நிலையில் ரோட்டில் என்னைப்பார்த்து சொன்னாள்.
2019 ஜனவரி ஆறாம்தேதியில் கொத்தனாரின் கொத்து வேலை நடந்ததால் தியேட்டரும், வாசல் முன் பகுதியும் கயிறு கட்டப்பட்ட நிலை.
தியேட்டரில் மிஞ்சிய சிறு இடத்தில் ஒரு கழைக்கூத்தாடி போல ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நடந்தது.
எனக்கு தெரு கோணல், மேடை கோணல் என்பதான அதிருப்தியெல்லாம் கிடையாதென்பதால் சவாலாகத்தான் நிகழ்ச்சியை நிகழ்த்திக்காண்பித்தேன்.
ந.முத்துசாமி சார் அந்தக்கால கூத்துப்பட்டறை நிகழ்வுகளை மிகுந்த சிரமத்துடன் தான் ஈடேற்ற முடிந்திருக்கிறது.
க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில் அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர். சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி முகம் சுளித்திருக்கிறார். அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான இந்த சலுகை அசூயை ஏற்படுத்தியிருக்கிறது. ”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி தடுத்து நிறுத்தி விட்டாராம்.
முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம் ரொம்ப புண்படுத்தியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று. போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். போஸ் கிருஷ்ணமாச்சாரியை அச்சுதன் கூடலூரும் திட்டுவார். டெல்லிக்கு போன கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள். ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான். அதாவது pauper.

காரைக்குடி மணியின் மிருதங்க தனி ஆவர்த்தனம்

$
0
0

திருச்சியில் ரசிக ரஞ்சனி சபா, ராமகான சபா இரண்டிலும் அப்போது நான் மெம்பர்.
மிருதங்கம் காரைக்குடி மணி தனி ஆவர்த்தனம் மிகவும் உன்னதமானது.
ரசிகரஞ்சனி சபாவில் 1999ல் இவருடைய மிருதங்க தனி ஆவர்த்தன நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாத நிகழ்வு.

மிருதங்கம் மட்டும் தனி ஆவர்த்தனம் என்பது சங்கீத உலகில் ஒரு புதுமை. அதை தன் தனித்துவ பாதையாக ராஜநடை நடந்து காட்டியவர் காரைக்குடி மணி.
அன்று கஞ்சீரா ஜி. ஹரி சங்கர் தான் அவருக்கு இணைந்த பக்க வாத்தியம்.
நிகழ்ச்சி ஆரம்பித்த போது காரைக்குடி மணி நிமிர்ந்து சபையை பார்த்தார். ஒரு ஐந்து பேர் தான் உட்கார்ந்திருந்தோம். எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதை அவர் அவமானமாக எடுத்துக்கொண்டால்…? ஒரு வகையில் அப்படி ஒரு வித்வானுக்கு இது ஒரு மன வேதனையைத் தானே தந்திருக்கும்.

ஆனால் காரைக்குடி மணி எங்கள் ஐவரையும் பார்த்து புன்னகைத்தார். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துப் பார்த்தார். பிறகு சொன்னார்.
 “ இங்கே ஒக்கார்ந்திருக்கவா ஒவ்வொருத்தரும் ஒரு தேவ கணம். ஒவ்வொருத்தரும் ஆயிரம் பேருக்கு சமானம். இவாளுக்காக மிருதங்கம் நான் வாசிப்பது என் பாக்யம். இங்கே ஐயாயிரம் பேர் இருக்காங்கன்னு தான் நம்புறேன்.”
தனி ஆவர்த்தனத்தை ஆரம்பித்தார்.
ஒரு பெருந்திரளுக்கான கச்சேரி போன்று அன்று நான் உணர்ந்தேன்.
அவர் என்னை தேவ கணம் என சொன்னதும் நான் ஒருவன் ஆயிரம் பேருக்கு சமானம் என தீர்க்கமாக கூறியதும் எனக்கு பெரும் ஆசியாக உணர்ந்தேன்.

 கூட்டம் பெரிதல்ல எதிர் காலத்தில் நான் கண்ட மேடைகளில் என்னை கலங்காதிருக்கச் செய்தது. பெரும் ஆன்ம பலத்தை அந்த வினாடியில் எனக்கு தந்தது.
தனி ஆவர்த்தனம் மிக மேன்மையாக, சுகமாக செவியை நிரப்பியது. சொகசுகா மிருதங்க தாளமு. நெஞ்சு விம்மியது. துரித காலப்ரமாண வாசிப்பில் கண் நீரால் நிரம்பி வழிந்தது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு மகத்தான கச்சேரி.
தனி ஆவர்த்தனம் முடிந்த போது பார்த்தேன். இன்னும் ஐந்து பேர் ஆடியன்ஸில் சேர்ந்திருந்தார்கள். மொத்தம் பத்து தேவ கணங்கள். பத்தாயிரம் பேருக்கு சமானம்.








Paparazzi and Privacy

$
0
0

கட்சி ஆரம்பிச்சப்புறம் எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போனார்.
கட்சி ஆரம்பிச்சப்புறம் கமல் சிங்கப்பூருல பூஜா குமாரோட..
எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போன விஷயத்தில வெளிப்படைத் தன்மை இருந்தது.
முதல்வரான பின் எம்.ஜி.ஆர். ஜானகி, ஜெயலலிதாவுடன் ஏசியன் கேம்ஸ் பார்த்தார். எம்.ஜி.ஆர் கூச்சப்பட்டதேயில்லை.
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மேல் சபை உறுப்பினர் ஆக முடியவில்லை என்றவுடன் தமிழக மேல் சபையையே கலைத்துவிட்டவர்.
அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி தி.மு.க என்ன தான் ஏகடியம் செய்தாலும் கொஞ்சம் கூட லட்சியம் செய்ததேயில்லை. ஊரும் உலகமும் என்ன சொல்லும் என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
கமல் பூஜா சிங்கப்பூர் டூர் ரகசியம் காக்க முயற்சித்திருப்பது பலிக்காமல் போயிருக்கிறது.
கௌதமியுடன் கமல் சிங்கப்பூரில் இருந்த போது தான் அப்போது Affair பற்றி தெரிய வந்தது. குமுதம் பகீரங்கப்படுத்தியது. அப்போது அவர் அரசியல் வாதி அல்ல.
கமல் சொந்த வாழ்க்கை பற்றி பி.ஜே.பி தமிழக பிரமுகர்கள், தமிழக ஆளுங்கட்சி மந்திரிகள் ஏற்கனவே குத்திக்காண்பித்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.
கமல் வலதுசாரிகளுக்கெதிரான அரசியல் செய்ய நினைப்பவர். வலது சாரிகளோ தீவிர ஆஷாட பூதிகள். ஒழுக்கம் பற்றிய பிரமைகள் நிறைய இவர்கள் மூளையில் சிலந்தி கட்டியிருக்கிறது.
பாவம் கமல். வெளிப்படையாக நடக்க முடியாமல் அரசியல் அவரை படுத்துகிறதா?
Nobody likes being spied on.
Nobody wants the paparazzi ever following them in life.
டயானா சாலை விபத்தில் இறந்த போது ஒரு பத்திரிக்கை தலைப்பு செய்தி.
”The pursuit is over. Diana has come home.”

All human beings have three lives.Public, private and secret. – Gabriel Garcia Marquez.
அந்தரங்கம் புனிதமானது என்றெல்லாம் என்ன இருக்கிறது. அதுவும் அரசியலில். சாக்கடையில் கல் போடுவது தானே அங்கே பிரதான செயல்பாடு.
கமல் இடது சாரிகளுடன் நல்ல உறவில் இருப்பவர். இடது சாரிகள் தனி மனித ஒழுக்க நியதிகளை தொண்ணூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்கள். W.R.வரதராஜன் இதனால் தற்கொலையே செய்ய நேர்ந்திருக்கிறது.
மனைவி, துணைவி சமாச்சாரமெல்லாம் எப்போதும் தி.மு.க., அ.தி.மு.க அரசியல்வாதிகளிடம் தான் ரொம்ப.

நக்கல்

$
0
0

ஒரு வீட்டின் டோர் பெல், வீட்டில் உள்ளவர்களை அழைப்பதற்காக மட்டும் என்று தான் இனணக்கப்படுவது.
எங்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள நான்காம் வகுப்பு படிக்கும் லிகித் சௌத்ரி மற்ற வீடுகளின் டோர்பெல்லை அழுத்தி விட்டு ஓடி விடுவான். குழந்தைகளுக்கு இது ஒரு த்ரில் விளையாட்டு.
ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவர் ஒரு வீட்டின் டோர்பெல்லை ஒரு சிறுவன் அழுத்த முடியாமல் எட்டி, எட்டி தவிப்பதைப் பார்த்து விட்டு, உதவி செய்ய வந்திருக்கிறார். ”இரு நான் ஸ்விட்சை அழுத்துகிறேன்.” பையன் “Thank you” சொல்லியிருக்கிறான். அவர் டோர்பெல்லை அழுத்தியவுடன் சிறுவன் பரபரப்பாக சொல்லியிருக்கிறான். ”வாங்க. ஓடிடுவோம்.”
கனடாவில் சமீபத்தில் ஒரு வீட்டின் டோர்பெல்லை ஒரு 33 வயது இளைஞன் மூன்று மணி நேரம் நக்கிக்கொண்டே இருந்திருக்கிறான். வெட்டி ஓழு, நித்திரைக்கேடு. எதற்கு மூன்று மணி நேரம் நக்க வேண்டுமோ? தலையில ஓத்த விதி. சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. வீட்டிற்குள் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்திருக்கின்றன. குழந்தைகளின் அம்மா அப்போது இல்லை. வெளியே போய் இருந்திருக்கிறார். அந்த அம்மாவுக்கு பின்னால் ஒரு நிம்மதி.
“ பாருங்க. அவன் எதையும் திருடல. யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கல.”
டோர்பெல்லை மூனு மணி நேரம் நக்கி விட்டு வீட்டு தோட்டத்தில் சுகமாக டூ டாய்லட், ஒன் டாய்லட் பண்ணி விட்டு அவன் போயிருந்திருக்கிறான். ரெண்டுக்கு போனாலே ஒன்னுக்கும் போகத்தானே செய்யும்.
விசித்திர விஞ்ஞானி கோவை ஜி.டி நாயுடு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இவர் டாய்லட் போகும்போது ஒரு விஷயம் கவனித்திருக்கிறார். முதலில் சிறுநீர் போய் இருக்கிறது. அப்புறம் மலம் வெளியேறியிருக்கிறது. தொடர்ந்து இதைக்கவனித்த அவருக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
சிஸ்டத்தை மாற்ற வேண்டும். ஆமா. சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று ரஜினி மாதிரியே முடிவு ஜி.டி.நாயுடு செய்திருக்கிறார்.
அதன் படியே சிஸ்டத்தை மாற்றி தான் அதன் பிறகு he was relieving himself. இதை அப்புறம் ஒரு டாக்டரிடம் சொல்லியிருந்திறார். அவர் “ ஏங்க சிஸ்டத்தை இப்படி மாத்துறீங்க. இயல்பா அத போக விட்டுடுங்க.” என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்புறம் தான் பழைய சிஸ்டப்படியே காலைக்கடனை முடித்து வந்தாராம்.
மலச்சிக்கல் உள்ள ஒருவன் ஒரு பாலத்தின் கீழே உட்கார்ந்து முக்கி, முக்கி பார்த்திருக்கிறேன். ஒரு புழு பூச்சி கூட வரவில்லை. அந்த நேரம் பாலத்தின் மேல் வந்து ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். இவன் நிமிர்ந்து பார்க்கவும் அவன் விட்டை போடவும் சரியாய் இருந்திருக்கிறது. மலச்சிக்கல்காரன் தலையிலேயே தான் பாலத்தின் மேல் இருந்தவன் பேண்ட பீ விழுந்திருக்கிறது. இவனுக்கு மேலிருந்து பேண்டவன் மேல் கோபம் வரவில்லை. பேல மறுக்கும் தன்னுடைய குண்டியை ஓங்கி ஓங்கி அடித்து அடித்து மேலே பார்த்து “ அது அல்லவோ குண்டி, அது அல்லவோ குண்டி..குண்டின்னா குண்டி அதுவல்லவோ குண்டி!” என்று பாராட்டினானாம்.
’வானத்தில் திரியும் பறவையை மட்டும் பாடாதீர்கள்.
மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்.’
- ஐம்பது வருடத்திற்கு முந்தைய ஒரு புதுக்கவிதை.

No commodity card

$
0
0

பொருள் எதுவும் வாங்காத, அடையாளத்துக்கு மட்டுமேயான
N கார்டு தான் என்னுடையது. இந்த கௌரவ ரேசன் கார்டு வைத்திருக்கும் நான் வசதியானவன் அல்ல. சொந்த வீடு கிடையாது. சொத்து கிடையாது. 
ஒரு சிறு சேமிப்பு தொகை கூட கிடையாது. இம்மாநிலத்தில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு நாற்பதாயிரத்துக்கு முன்ன பின்ன இருக்கலாம் என்று அரைகுறையாக அறிய முடிகிறது. புள்ளி விபரம் சரியாகத் தெரியாது.
ஒரு விஷயம் மட்டும் நிச்சய உண்மை. வெள்ளை ரேசன் கார்டு பணக்காரர்களுக்கானது என்றால் இதில் ஒரு மிக சாமான்யனும் இருக்கிறான். இந்த நாற்பதாயிரம் பேரில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் ராஜநாயஹம்தான். ரிட்டயர்மெண்ட், பென்சன், ப்ராவிடண்ட் ஃபண்ட், கிராஜுட்டி வசதியென்றெல்லாம் எதுவும் கிடையாது.
இல்லாமையில் ஒரு விசித்திர அபத்தம். பொருளாதார நிலைக்கு அந்நியமான, சற்றும் பொருந்தாத தன்மை.
என்னிடம் ஸ்கூட்டர் கூட இப்ப கிடையாது. கூத்துப்பட்டறைக்கு தினமும் போக மூணு பஸ், வர மூணு பஸ். இதில் சின்ன மாற்றம் என்னவென்றால் பஸ் கிடைக்காத போது சில நேரங்களில் ஒரு நாளில் ஓரிரு முறை ஷேர் ஆட்டோ.
இங்கே சென்னையில் ஒரு பங்களா, ஒரு ஃப்ளாட், இரண்டு கார், இரண்டு டூவிலர் வைத்திருக்கும் பிரகிருதி ஒருவர் மூன்று வருடத்திற்கு முன்
“என்னப்பா, எனக்கு தெரிஞ்சி நம்ப ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள்ள நீ ஒருத்தன் தான் இப்படி பொருள் எதுவும் வாங்காத வெள்ள ரேஷன் கார்டு வச்சிருக்கிற. நான் வேற யாரையும் பார்த்ததேயில்ல..” உச்சு கொட்டி மூக்கில் விரல் வைத்தார்.
நான் ‘அண்ணே, தயவு செய்து விரல எடுங்க.”
ஆச்சரியத்தில் அவர் மூக்கில் தன் விரலை வைக்க வேண்டியவர், அவசரத்தில் என் மூக்கு நுனியில் வைத்து விட்டார்.
நான் திருச்சியில் குடியிருந்த ஒரு வீட்டின் ஹவுஸ் ஓனர் அம்மா
“ஏன் இப்படி பொருளே வாங்காத ரேசன் கார்டு வச்சிருக்கீங்க. நாங்க உங்க கார்டுலயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் எங்களுக்கு வாங்கிக்க முடியாதபடி பண்ணிட்டீங்களே.” என்று கேட்டதுண்டு. நான்கு வீடு வாடகைக்கு விட்டிருந்தார். தன் வாழ்க்கையில் எங்கள் வெள்ளை கார்டு விளையாடி விட்டதே என்பதை அந்தம்மாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அடிக்கடி குமைந்து மருகி புலம்புவார்.

அது மனிதருக்கு தோழனடி – 3

$
0
0


எல்லியட்ஸ் பீச்.
ஆதாமின்ட தட்டு கட.
கலாச்சாரம் பேணும் மலையாளி புரோட்டா, புட்டு சாப்பிடும் கடை சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
என்ட பீடி மலபார் பீடி
என்ட மேளம் செண்ட மேளம்
என்ட கட ஆதாமின்ட தட்டு கட

ஆர்ம்ஸ்ட்ராங்க் முதல் முதலாக நிலாவில் கால் வைத்தவுடன் அங்கே ஒரு நாயர் கையில் டீ கெட்டிலுடன் கேட்டாராம். “எந்தா சாரே.. சாயா வேணுமோ? கட்டன் சாயா..”
ஆதாமின்ட தட்டு கடயில் புரோட்டா பீஃப் சாப்பிட்டு விட்டு பக்கத்து ஸ்டாலில் ஒரு காஃபி 
( ஸ்டால் பேர் Mud coffee.) மண் டம்ளரில் காஃபி குடித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த ஒரு டோனட் ஷாப் வாசலில் ஒருவர் பைக்கில் வந்து இறங்கினார். பைக்கில் அவருடன் ஒரு பக் டாக். Pug dog. A bundle of love gift-wrapped in fur. 
அந்த பக் நாயை அப்படியே பைக்கில் அமர வைத்து விட்டு கடைக்குள் அவர் கடைக்குள் போய் விட்டார்.
சமத்து. அப்படியே உட்கார்ந்திருந்தது.
டீ சர்ட், ஷாட்ஸ் போட்டு அசத்தலா இருக்கு. ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்.
பைக் நின்ற இடத்தில் மண் தரையில் ஒரு
Stray dogபடுத்திருக்கிறது. 
இதுவும் படு சமத்து தான். கால பைரவர்.
’சொர்க்கத்தில் இருந்து நரகம் வரை, இங்கு சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை. வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை.’ சேடப்பட்டியானுக்கு கண்ணதாசன் பாடல். மதுரை பக்கமெல்லாம் எஸ்.எஸ்.ஆரை சேடப்பட்டியான் என்பார்கள்.

 தரையில் படுத்திருந்த தெரு நாய் கடலிலாவது என்றாவது குளித்திருக்குமா? There is always a stray dog somewhere that stops me being happy.
கூத்துப்பட்டறை தெருவில நம்ம வெள்ளக்கண்ணு இப்ப என்ன செய்யுதோ? That street dog Vellakannu is a nicer one than some other persons there. 
பக் நாய் பற்றி சுவாரசியமான ஒன்று சொல்லப்படுவதுண்டு. The Pug is a living proof that God has sense of humour.
மறக்க முடியாத வோடஃபோன் விளம்பரத்தில் பிரபலமானது கூட ஒரு பக் நாய்.
செல்வப்பரம்பரையினரால் சீராட்டி வளர்க்கப்பட்டாலும் பக் ஏன் ஏதோ பெரும் துக்கத்தில், மீளாத்துயரில் இருப்பது போல தோற்றம் தருகிறது?
’விரலுக்கு தகுந்த வீக்கம்ப்பா’ன்னு சொல்லுமோ? ’வீட்டுக்கு வீடு வாசப்படி. என் கஷ்டம் உனுக்கெப்பட்டி தெரியும்.எனுக்குத்தான் தெரியும்.’னு சொல்லுதோ? என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்?
’You should get into my shoes to know my sorrows. போப்பா..போ..’ 
இந்த செல்ல நாய்க்கு காலில் ஷூ போட ஏன் மறந்தார்கள்?
Speak to the animals, birds, reptiles and trees. They talk.



துரத்துகிறார் துரைக்கண்ணு

$
0
0


 ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனம் பிரபலம் காரணமாக சித்ராலயா பெயரில் ஒரு பத்திரிக்கையே நடத்தியிருக்கிறார். அந்த பத்திரிக்கை வடிவம் செய்திப்பத்திரிக்கை போல இருந்தது. ஆனால் சினிமா பத்திரிக்கை தான். தினசரி பத்திரிக்கையல்ல.

தமிழ் சினிமாவோடு இந்தி திரையுலகம் பற்றியும் சுவாரசியமான செய்திகள் அதில் படிக்க முடியும்.
ஷம்மி கபூர் ஒரு தமிழ் பாடலை அடிக்கடி வாய் விட்டு பாடுவாராம். அந்தப்பாடலில் உச்சரிக்க ஒரு விஷேச அம்சம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவர் தமிழ் அறிந்தவர் அல்ல. அந்த பாடல் பாவமன்னிப்பு படத்தில் வரும் ‘ அத்தான் என்னத்தான்” பாடல்.

இந்த செய்தித்துணுக்கு சித்ராலாயா பத்திரிக்கையில் தான் படித்தேன்.


சித்ராலயா கோபு. சினிமாக்காரராக அறியப்படும் கோபு ’ஹரிகதா’ எம்பார் விஜய ராகவாச்சாரியார் வம்ச பரம்பரையில் வந்தவர். எம்பார் இவருக்கு மாமா.


கோபுவின் காதலிக்க நேரமில்லை செல்லப்பா பாத்திரம் நாகேஷால் சிரஞ்சீவித்தன்மை பெற்றது. நாகேஷ் பாலையாவிற்கு கதை சொல்லும் காட்சிக்கு கோபு  பார்த்து ரசித்த தாராமிராஸி ( புதிய பறவை படத்தை இயக்கியர் இவர் ) தான் ரோல் மாடல்.

ஸ்ரீதரின் பால்ய நண்பர் கோபு என்றாலும் இருவர் நட்பும் ஸ்ரீராமன் – ஹனுமன் நட்பு போல் இருந்திருக்கிறது. கோபுவின் குருபக்தி அளப்பரியது. ஸ்ரீதரின் யூனிட்டில் இருந்த பலரும் அவர் முதுகில் குத்தியவர்கள். கோபு மட்டுமே விசுவாசமான நட்புடன் கடைசி வரை இருந்திருக்கிறார். சினிமாவுலகில் இப்படி ஒரு நட்பு அபூர்வம்.

ஒரு படத்தில் பிரபல இயக்குனரின் அஸிஸ்டண்ட் என்றால் போதும். தனித்து ஒரு படம் இயக்குவது சர்வ சாதாரணம். ஆனால் சித்ராலயாவில் கோபு மிக பிரபலமாயிருந்தும் ஸ்ரீதர் நிழலிலேயே இருந்தார். ’உத்தரவின்றி உள்ளே வா’ படம் கூட என்.சி.சக்ரவர்த்தி தான் இயக்கினார்.

அன்றைய தமிழ் சினிமாவுலகில் பந்துலுவிடம் இருந்த சிங்கமுத்து, ஏ.பி.நாகராஜனிடம் இருந்த கே.கே.சம்பத்குமார், தேவர் பிலிம்ஸில் மாரியப்பன் போன்றோர் இப்படி இயக்குனரின் நிழலிலேயே தான் இருந்திருக்கிறார்கள். தனித்து இயக்குனராகவே இல்லை.


ஏ.வி.எம் காசே தான் கடவுளடா படத்திற்கு கூட முதலில் கோபு சிபாரிசு செய்தது சி.வி.ராஜேந்திரனைத்தான். ஸ்க்ரிப் ஒர்க் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால் ஏ.வி.எம் செட்டியார் தான் அந்தப்படம் கோபுவால் தான் இயக்கப்பட வேண்டும் என்று தீர்மானமாக சொல்லியிருக்கிறார்.

கோபு குமுதத்தில் ஒரு தொடர் எழுதினார்.’துரத்துகிறார் துரைக்கண்ணு’.
ஒரு லோக்கல் ரௌடி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கோபுவை துரத்துவார். அவர் மெட்ராஸ் சல்லி என்பதால் கோபு பயந்து போய் அவரை சமாளிக்க படாத பாடு படுவார். நகைச்சுவையாக எழுதினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது ஜிகர்தண்டா படத்தின்  கதையை ஞாபகப்படுத்தும் விதமாக அந்த தொடர் இருந்தது. ஆனால் அதைப்பார்த்து இது காப்பி என்பதல்ல. அல்ல. இரண்டும் வேறு தான். மையக்கரு ஒற்றுமை இருக்கிறது. பாபி சிம்ஹா எப்படியெல்லாம் சித்தார்த்தை தன்னை வைத்து படமெடுக்க வற்புறுத்தி துன்புறுத்துகிறார். அது போல தான் கோபுவை ஆக்கிரமித்து துரைக்கண்ணு நச்சரிப்பும். துரைக்கண்ணுவின் வட்டார மெட்ராஸ் பாஷை.

’துரத்துகிறார் துரைக்கண்ணு’ நட்பு வட்டாரத்தில் ஒரு Vocabulary ஆனது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது இந்த துரத்துகிறார் துரைக்கண்ணு’வை பிரபலப்படுத்தினேன். அதாவது தர்மசங்கடப்படுத்தப்படும் விதமாக யாராவது அரைவேக்காடு தொடர்ந்து நச்சரித்தால், மிரட்டி ஏதாவது உதவி செய்யும்படி கேட்டால், அவ்வளவாக சிலாக்கியமானவராக இல்லாத ஒருவர் நட்பு நாடி வந்தால், அத்துமீறி ஆக்கிரமித்து உரிமை கோரினால், தொந்தரவு, தொல்லை செய்து கொண்டிருந்தால் இந்த வார்த்தை
‘ துரத்துகிறார் துரைக்கண்ணு’வை மதுரையில் பலரும் பயன்படுத்தும் அளவுக்கு அப்போது பிரபலமானது.






Viewing all 1851 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>