Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1843 articles
Browse latest View live

#Ten_Years_Challenge

$
0
0
2009 - 2019


One man in his time plays many parts. - Shakespeare
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts.
- in 'As you like it' play.

We Know what we are,
But not we may be
- Shakespeare in 'Hamlet'


Age cannot wither me, nor custom stale my infinite variety.
- Shakespeare in 'Antony and Cleopatra'

A.K.ராமச்சந்திரன் என்ற ரவி

$
0
0
அன்றும் இன்றும்
அற்புதமான, உன்னதமான ஒரு நண்பன் ரவி. ரவி என்ற A.K.ராமச்சந்திரன். அமேசான் கிண்டிலில் வெளி வந்த ’தூறலாய் சாரல்’ நூலை A.K.ராமச்சந்திரன் என்ற ரவிக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
35 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவில் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு இருக்கும் ரவி. 

நாங்கள் இருவரும் இப்போது இப்படியிருக்கிறோம்.


ஆனந்தமான, கொண்டாட்டமான, சுக சௌகரிய வாழ்க்கை ரவியுடையது. 
மிக மோசமான பொருளாதாரா சரிவு, பள்ளங்களை கண்டவன் நான்.
 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கிடைத்த நட்பு.
வகுப்பு தோழன்.

விஜய்காந்த்

$
0
0

அறிமுகமேயில்லாத ஒருவரை எப்போதும் பல கட்டங்களில் பார்க்க நேர்வது. அதிலும் அப்படிப்பட்டவர் ரொம்ப பிரபலமாகி விடும்போது அப்படிப்பட்டவரை சாதாரணமான மனிதராக, பார்த்த, சந்தித்த நினைவுகள் பசுமையானவை. ஆனால் சம்பந்தப்பட்டவர் நினைவில் நான் கொஞ்சம் கூட நிலைக்கவிலை. ஆனால் ஒரு எழுத்தாளனாக எனக்கு அந்த மனிதர் பற்றிய விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.


’இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து முடித்து விட்ட பின் விஜய்காந்த் மதுரையில் “டேய், இவன் சினிமாவில் நடிச்சவன்டா” என்று சத்தமாக சொல்லுமளவுக்கு பிரபலம்.
அப்புறம் ரெண்டு மூனு ஓடாத படங்களில் இரண்டாவது கதாநாயகன். இவருடன் முக்கிய கதாநாயகனாய் நடித்த நடிகனையெல்லாம் பேர் சொல்லி இன்று புரியவைக்கவே முடியாது.
அப்போதெல்லாம் அவர் போட்டிருக்கும் வெள்ளை நிற சர்ட்டில் க்ரேய் டிசைன் செய்திருக்கும். ஒரு க்ரே கலர் பேண்ட். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ஒரு பைக் ராஜ்தூத்தாய் இருக்கலாம். அல்லது வேறு பைக்காகவும் இருக்கலாம்.
அடிக்கடி பாண்டி பஜார் ரோகினி இண்டர்நேஷனல் லாட்ஜுக்கு வருவார். நான் லாட்ஜின் முன் பகுதியில் அப்போதைய என் நண்பர்கள் ( மிகவும் முதியவர்கள்) புடை சூழ சேரில் அமர்ந்திருப்பேன். விஜய் காந்த்தை நான் பார்க்க நேரும்போதெல்லாம் எப்போதும் என்னை கவனிப்பார். ஒரு பார்வை தீர்க்கமாய். ஒரு தடவை கூட என் மேல் விஜய்காந்த் பார்வை படியாமல் போனதேயில்லை.
கண்ணதாசன் வீட்டிற்கருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.
பின்னால் அவர் படங்களில் மெஷின் கன் தூக்கிக்கொண்டிருப்பதை ரசிக்க முடிந்ததில்லை.
’அகல் விளக்கு’ அன்னக்கிளி செல்வராஜ் படத்தில் ஷோபாவுடன் விஜய்காந்த். ஆஹா அந்தப்பாட்டு “ ஏதோ நினைவுகள், கனவுகள், மனதிலே மலருதே”. அகல் விளக்கு படு மோசமான தோல்விப்படம்.
’நூலறுந்த பட்டம்’ என்று ஒரு படம் அப்போது பூஜை போடப்பட்டது. தேங்கா மூடி படம். ஒரே ஷெட்யூல் சூட்டிங்கோடு மங்களம் பாடப்பட்டது. விஜய்காந்த் அதில் வில்லனா, இரண்டாவது கதாநாயகனா? சந்திரசேகர் கூட அந்தப்படத்தில் விஜய்காந்த்துக்கு குடை பிடிக்கிற ஒரு ரோல் செய்திருந்தார்.
பூஜை நடந்த அன்று அதன் பின் மாலை நேரத்தில் தி.நகர் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே நான் தங்கியிருந்த மேன்சனின் பால்கனியும் அல்லாத மொட்ட மாடியுமல்லாத இடத்தில் ஒரு பத்து பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவர் விஜய்காந்த்.
அரைவட்டமாக அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் விஜய் காந்த் அப்போது ‘பழைய படம் ஒன்றில் லிஃப்ட்டில் ஒரு பாட்டு வரும். நல்ல பாட்டு. அந்த பாட்டு என்னன்னு எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகம் வர மாட்டேங்குது’ என்று குழம்பினார்.
நான் உடனே “ அந்த படம் நிலவே நீ சாட்சி. எம்.எஸ்.வி பாடியிருந்தார். “நீ நினைத்தால் இன்னேரத்திலே ஏதேதோ நடக்கும்” நான் பாடியே காட்டினேன்.
விஜயகாந்த் முகம் ஆசுவாசத்துடன் மலர்ந்தது. அவருடைய அந்த பிரகாசமான கண்கள் விரிந்தன.. அந்த பிரத்யேக சிரிப்பு. ” இந்த பாட்டு தான் சார். இதே பாட்டு தான். லிஃப்ட்ல ஷூட் பண்ணியிருப்பாங்க.”
இந்த ஒரு சின்ன உரையாடல் தான் எனக்கும் விஜய்காந்த்துக்கும் நடந்த ஒரே interaction.
இயக்குனர் விஜயன் “தூரத்து இடி முழக்கம்” விஜய் காந்திற்கு ஒரு நல்ல படம்.
நான் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டிய சவ்வாஸ் ரெடிமேட் கடைக்கு விசிட் செய்வேன். அப்போதெல்லாம் சினிமா நடிகரான பின்பும் விஜய்காந்த் ராதாஸ் கடையில் நின்று கொண்டிருப்பார். சவ்வாஸ் என் நண்பர்கள். ராதாஸ் ஜவுளிக்கடையில் அவருடைய நண்பர்கள். பின்னால் ராதாஸ் அவருடன் கடும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தார்கள் என்று அந்த ஏரியாவில் பரவலாக பேச்சு. அப்படி இல்லையென்றால் தான் அவர்கள் விஜய் காந்த் பட தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு இப்ராஹிம் ராவுத்தர் போல உயர்ந்திருப்பார்களே.
’சட்டம் ஒரு இருட்டறை’ அவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தது. அப்படியும் ஒரு ரவுண்டு வந்த பின் இரண்டு வருடம் சும்மா வாய்ப்பில்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. மீண்டும் “ சாட்சி” அடுத்த ரவுண்டை ஆரம்பித்து வைத்தது.
விஜய் காந்திற்கு ஒரு ரசிக பட்டாளம் கிராமங்களில் பரவலாக ஏற்பட்டதால் நட்சத்திர அந்தஸ்து.
பெரும் தடைகளை உடைத்துத் தான் மிகுந்த பிரபலத்தை அவர் கண்டடைந்தார்.
கேப்டன் பிரபாகரன், ரமணா இரண்டும் அவருடைய மிக வெற்றி பெற்ற படங்கள். அந்த இரு படங்களைக் கூட நான் பார்த்ததில்லை.
கமல் ரசிகனுக்கு விஜய் காந்த் படங்கள் ரசிக்காது.

’விஜய்காந்திற்கு ஒரு போஸ்ட் மேன் வேடம் கூட என் படங்களில் கொடுக்க மாட்டேன்’ என்று மட்டம் தட்டிய பாரதிராஜாவின் ’தமிழ்செல்வன்’ படத்தில் கூட கதாநாயகன்.
அவர் படங்களில் நடித்த வில்லன்கள் மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் பிரபலமானார்கள். பிரபல வில்லன்கள் பலர் அவர் படங்களில் நடித்தார்கள். சரத்குமார் அவர் படத்தின் மூலம் தான் மார்க்கெட்டிற்கு வர முடிந்தது.
’ஏழை ஜாதி’ சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அவரை பார்த்தேன். அங்கு மனோரமாவை பார்க்க நான் போய் இருந்த போது என் மீது ஆர்க் ப்ரூட் லைட் வெளிச்சம் தற்செயலாக திருப்பப்பட்டது. அப்போது விஜய் காந்த் என்னை கவனித்துப் பார்த்தார். நல்ல மார்க்கெட்டில் இருந்த நேரம். என்னை முன்னர் அடிக்கடி பார்த்திருக்கிற பழைய மதுரைக்காரன் என்று அடையாளம் தெரிந்திருக்காது.
விஜய்காந்த் மார்க்கெட் டல்லானவுடன் அரசியலுக்கு வந்த போது அதை நான் சிலாகிக்கவில்லை. அவரை Nigger MGR என்றே குறிப்பிட்டிருக்கிறேன். அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா தயவில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர முடிந்தது. மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் மோடியுடன் கூட்டணி போட முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வந்தது. கம்யூனிஸ்ட்கள் கூட அவருக்கு வால் பிடித்தார்கள். வைகோவும், திருமாவளவனும் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்தை தூக்கிப்பிடித்தார்கள்.
அவரது அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மற்றொரு குடும்ப கட்சி.
அரசியலில் அவர் பெறப்போகும் சரிவு பற்றி சென்ற 2016 சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் நான் தெளிவாக கணித்திருந்தேன்.
2014ம் ஆண்டு மதுரை டவுன் ஹால் ரோடு தாஜ் ஹோட்டலுக்கு என் மகன் கீர்த்தியுடன் போய் இருந்தேன். தாஜ் பழைய சிறப்பை இழந்திருந்தது. அப்போது மொஹிதின் பாய் அங்கே சர்வராய் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருந்தாலும் என்னை பார்த்தவுடன் உற்சாகமாக எனக்கும் என் மகனுக்கும் பரிமாற ஆரம்பித்தார். என்னிடம் கேட்டார். “உங்களுக்கு ஞாபகமிருக்கா? நீங்க உங்க ஃப்ரண்ட்ஸோட இந்த டேபிள்ள உட்கார்ந்திருப்பீங்க. விஜய்காந்த் அவரோட ஃப்ரண்டுங்களோட அந்த டேபிள்ள உக்காந்திருப்பாரே. நினைவிருக்கா?”






Significant other

$
0
0

தி.ஜானகிராமன் சாஸ்த்ரிய சங்கீத பாடகர்களை ஆக்ரமிக்கும் Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."
ஏதாவது ஒன்று கெட்டுப்போகும் என்றால் அது கட்டாயம் கெட்டுப்போகும்.

பரதநாட்டியம் பயின்றவர் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு சிலாக்கியமில்லையாம் .
பரதநாட்டியம் பற்றி திஜாவின் 'மலர் மஞ்சம் 'நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம் ,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும் ...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும் , இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும் . நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''
திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.

There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர். இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும். அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.

மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வர் மாமியின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
அந்த கல்லூரி முதல்வர் மாமி சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு அம்மணி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வர் மாமிக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “ மாமி.. ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால் மாமி சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other.அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வர் மாமியின் கண்கள் குளம் கட்டி விட்டன. ’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”

மதுரை மணி ஐயரின் அபிமான ராதையின் அன்பில் திளைத்த ஒரு பரிசுத்த குழந்தையாகவே அந்த கல்லூரி முதல்வர் மாமியை அப்போது நான் பார்த்தேன்.


வள்ளி நாயகனே

$
0
0

இன்று அதிகாலை ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் ஷண்முகப்ரியா ராகம் தானம் பல்லவி முழுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன். கஞ்ச தலாயதாக்ஷி காமாக்ஷி.
ஒவ்வொரு பெரிய வித்வானுக்கும் ஒரு ராகம் ஸ்பெஷல். செம்மங்குடி சீனிவாசய்யருக்கு கரகரப்ரியாவை சொல்வார்கள். மதுரை சோமு தோடியை கண் முன் கொண்டு வந்து விடுவார். ஜி.என்.பிக்கு ஷண்முகப்ரியா.
30 வருடங்களுக்கு முன் கர்னாடக சங்கீத, ஹிந்துஸ்தானி கேஸட் கலெக்‌ஷன் என்னுடைய தேடலில் முக்கிய இடம் பெற்றிருந்தது. ஜி.என்.பியின் காஸெட் இருபதுக்கு மேல் வைத்திருந்தேன். அவருடைய ஷண்முகப்ரியாவுக்காக எவ்வளவோ தேடியும் கிடைத்ததேயில்லை. ஒரு தடவை மதுரையில் டவுன்ஹால் ரோட்டில் ஒரு கடையில் கிடைத்து விட்டது. ஆஹா அபூர்வ புதையல் கிடைத்து விட்டதே என்று டேப் ரிக்கார்டரில் போட்டால் காஸெட் டேமேஜ் ஆனது. என்பது தெரிய வந்தது. ஸ்ட்ரக் ஆகி இயங்கவேயில்லை. ஜி.என்.பியின் ஷண்முகப்ரியா கேஸட் கானல் நீர். கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இப்போது டெக்னாலஜி எவ்வளவு வசதியாய் இருக்கிறது. யூட்யூப் புண்ணியத்தில் அந்தக்கால கானல் நீரான விஷயங்களெல்லாம் நனவாகியிருக்கிறது.
இன்று ஜி.என்.பி ஷண்முகப்ரியா கேட்டுக்கொண்டிருந்த போது நினைவில் வந்த ஒரு காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது எங்கள் வீட்டிற்கு என் பெற்றோர் வந்திருந்தார்கள். அப்படியான நேரத்தில் என் மனம் மிகுந்த சந்தோஷ நிறைவில் நிரம்பி வழியும்.

அதிகாலை என் அப்பா ஹிண்டு பேப்பரை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பிறகு தான் எப்போதும் நியூஸ் பேப்பரை எனக்கு கொடுப்பார். இரண்டு மணி நேரமாவது செய்திகளில் மூழ்கி விடுவார். அப்போது ரெண்டு,மூணு காஃபி கேட்பார்.
நான் பாலமுரளி பாடிய நான்கு ஷண்முகப்ரியா கீர்த்தனைகள் அடங்கிய கேஸட்டை போட்டு விட்டிருந்தேன்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ( இவர் எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா தெரியுமோ?) வள்ளி நாயகனே பாடலை கணீர் என்று பாலமுரளி ஆரம்பித்த போது என் அப்பா பேப்பரில் இருந்து தலையை தூக்கினார். பாடலை கவனமாக ரசித்து தலையை ஆட்டினார். முகம் பிரகாசித்தது. செய்தியிலிருந்து அப்பா கவனம் ஷண்முகப்ரியாவிற்கு தாவி விட்டது.
எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அப்பாவின் அம்மா பெயர் வள்ளி. வள்ளி நாயகன் யார்? அப்பாவின் அப்பா ராஜநாயஹம் பிள்ளை. அவருடைய அப்பா 1965ல் மறைந்தார். அம்மா 1969ல் மறைந்து விட்டார். என் தாத்தா பாட்டியை நினைவு படுத்தும் கீர்த்தனை. அந்த கீர்த்தனை முடியும் வரை அப்பா செய்தித்தாளை பார்க்கவில்லை.






முதுமை துயரம்

$
0
0

க்ரியா வெளியிட்ட வெ.ஸ்ரீராம் ஃப்ரஞ்ச் மொழிபெயர்ப்பு “சின்ன சின்ன வாக்கியங்கள்” நாவலில் “முதியோர்களுடன் பிரச்சினை என்னவென்றால், அவர்களுடைய போக்கிலேயே அவர்களை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தி முக்கியத்துவம் அளிக்க இப்போது அவர்களுக்கு அப்பா அம்மா இல்லை என்பது தான்.”
முதுமையின் அவலம் பற்றி அற்புதமான பார்வை. ஃப்ரஞ்ச் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியது.

ஏனென்றால் புத்ர பாக்யங்கள் தங்கள் முதிய பெற்றோரின் பிரச்னைகளை அறியும் அளவுக்கு சூழல் கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பம், புதரம் என்று ஆகி விடும்போது கவனம் திசை மாறி விடுகிறது. இன்னொன்று பிள்ளைகளுக்கு ஐம்பது அறுபது வயது ஆகும் நேரத்தில் பெற்றோருக்கு முதுமையின் தள்ளாமை பிரச்னை வருகிறது. பிள்ளைகள் முதுமையின் இளமை எனப்படும் வயதில் லோகாயுத சிக்கல்களில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் துயர நிலை அப்போது. மீண்டும் குழந்தையாகி விட்ட தங்களின் முதிய பெற்றோரை போஷிப்பது Herculian Task.

பியரெத் ஃப்லுசியோ இன்று சொல்கிற விஷயத்தை விளக்குவது போல எவ்வளவோ வருடங்களுக்கு முன்னரே தி.ஜானகிராமன் “காட்டு வாசம்” சிறுகதையில் தன் பிரத்யேகமான கிண்டல் நையாண்டியுடன் தொட்டுக்காட்டியுள்ளார் : ”இந்த உலகத்தில் அன்பு இருக்கிறதே, அன்பு. அது இறங்கு முகமாகப் போகும். பக்கவாட்டிலே போகும். மேல் நோக்கிப் போகாது.
அப்பனுக்குப் பிள்ளை மேல் ஆசை. அந்தப் பிள்ளைக்கு அவன் பிள்ளை அவன் பிள்ளை மேல் ஆசை. இப்படிப் போகுமே ஒழிய, பிள்ளைக்கு அப்பாவிடம் இருக்கிறது என்கிறசாத்தியம் இல்லை. அப்பாவிடம் பயம் தான் இருக்கும் பொண்டாட்டியிடமும் பிள்ளையிடமும் இருக்கிற அன்பும் ஆசையுமா இருக்கும்?
நம் சாஸ்திரங்கள், கவிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஏன் ஐயா? பிள்ளையிடம் அன்பாக இரு. பொண்டாட்டியிடம் ஆசையாக இரு என்று சொல்லக்கூடாதோ? ஆக, இந்த அன்பு போகிற போக்கு இறங்கு முகம் இல்லையா? மேல்நோக்கிப் போகிறது இயற்கைக்கே முரண் என்று ஆகவில்லையா?”
தி.ஜானகிராமன் முதுமையின் குழந்தைமை, தள்ளாமை துயரத்தை “விளையாட்டு பொம்மை” கதையிலும் முதுமையின் வக்கிரத்தை “பாயாசம்” மற்றும் ”அவலும் உமியும்” குறுநாவலிலும் அபூர்வ இலக்கிய நேர்த்தியுடன், ஓவிய பாணியில் வரைந்து காட்டியுள்ளார்.

மேடையில்

$
0
0



தோழர் ஜீவா அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி மேடையில் பேசும்போது குறிப்பிட்டாராம். “ பாரதி அமுத இலக்கியம். பாரதி தாசன் நச்சு இலக்கியம்.”

அருணாச்சலம் ரோட்டில் முருகாலயா ஸ்டுடியோவில் சினிமா ஷூட்டிங் நடக்கும். இப்போது இந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் தான் சூரியா ஹாஸ்பிட்டல் இருக்கிறதா? உறுதியாக தெரியவில்லை.


இந்த முருகாலயா ஸ்டுடியோவில் கவிஞர் கே.டி.சந்தானத்தோடு நான் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார். “ தோழர் ஜீவா மேடையில் உணர்ச்சி வேகமாகப் பேசும் போது மைக்கை விட்டு பக்கவாட்டில் நகர்ந்து ஓரமாக போய் விடுவார். மீண்டும் மைக்கிற்கு வந்து பேசுவார். திரும்பவும் மைக்கை விட்டு ரொம்ப விலகி நகர்ந்து விடுவார்.”


தோழர் ஜீவா பற்றி நினைத்தாலே சுந்தர ராமசாமி எழுதிய “ காற்றில் கலந்த பேரோசை “ ஞாபகம் வரும். “இப்படி மண்ணாந்தையா போயிட்டோமே”

தோன்றிற் புகழோடு தோன்றுக. எனக்கு பிறக்கும் போதே ஒரு பெருமை கிடைத்தது. தோழர் ஜீவா பிறந்த ஆகஸ்ட் 21ம் தேதி தான் நானும் பிறந்தேன்.
தொடர்ந்த ஏழ்மைக்கு நேர்மை தான் காரணம்.

எம்.ஆர் ராதா சிறையிலிருந்து வந்த பின் மேல மாசி வீதியில் நாடகம் போட்டார். சரியான கூட்டம். ஆனாலும் அவருடைய முகபாவங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தெளிவாக ஏதோ க்ளோசப் போல தெரிந்தது.

மேடையில் ராதாவை பார்ப்பது ஒரு வித்தியாசமான ஒன்று. “டேய், நடிப்ப பாருங்க. ரசிங்க. ஆனா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடாதிங்கடா பாவிங்களா”

மேல மாசி வீதியில் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே முகம் சுண்டி முன் பகுதியை பார்த்து “அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” இப்படி சொல்லி முடித்து விட்டு ஒரு இரண்டு செகண்ட் விட்டு “அடி காந்தா.. தேவடியாள் பெற்ற திருமகளே” என்று கதாபாத்திரமாக பேச ஆரம்பித்தார்.

ஒரு ஐந்து வருடத்திற்கு பின் பெரியகுளம் எக்ஸிபிசனில் எம்.ஆர்.ராதாவின் அதே ’ரத்தக்கண்ணீர்’ நாடகம் பார்த்தேன். கூட்டமே இல்லை. சொற்பமாக ஜனங்கள். அப்போதும் ராதா மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே  “ அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” என்று சத்தமாக கத்தினார்.


நுரை குமிழி

$
0
0

தி.மு.க பத்திரிக்கையில் ஒரு காலத்தில் தனித்தமிழ் அக்கறையிருந்திருக்கிறது. சம்கிருத வார்த்தைகளை போடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது. ராஜாஜி பெயரை ’ராசாசி’ என்று அச்சிட்டவர்கள் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திருத்தம் எதுவும் எம்சியார் என செய்யவில்லை. எஸ்.எஸ்.ஆர் பெயரும் அப்படியே.
இப்போது ’ஆஹ’ என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கும் தி.மு.க. தலைவர் பெயரை பழ.கருப்பையா தனித்தமிழில் ’இசுடாலின்’ என்று குறிப்பிடுகிறார். நக்கீரனில் பார்த்தேன். தனித்தமிழ் வைராக்கியம் இப்படி இருப்பது பற்றி நான் 2008 ஸ்டாலினை இவர்கள் சுடாலின் என்று குறிப்பிடுவார்களா என்று கேட்டிருந்தேன். ’சுடாலின்’ என்பதே தப்பு. அடடா ’இசுடாலின்’ என்பது இன்றல்லவோ புரிகிறது.
இந்திரா பார்த்தசாரதி பேட்டி பிப்ரவரி விகடன் தடத்தில். இந்திரா பார்த்தசாரதியை முழுமையாக படித்தவன் நான். “எந்த தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்” என்பதை ’ஆஹ’ என்ற வார்த்தையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எத்தனை தடவை உச்சரித்தாரோ அத்தனை தடவை இ.பா இந்த ஸ்தாபனமாகும் தத்துவ விஷயத்தை உச்சாடனம் செய்து வந்திருக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரக்கவலை இதுவென்றே குறிப்பிடலாம். இதை நான் என்னுடைய “ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையில் (2002ல்) கூட குறிப்பிட்டேன்.

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்ட போது திருச்சி வானொலி நிலையத்தில் “ராமானுஜர்” நாடகம் பற்றி நான் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
அவருடைய ’கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவலுக்கு நான் எழுதிய விமர்சனம் எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் விமர்சனம் வந்ததுண்டு.
இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த காலத்திலும் அதன் பின் இந்திரா மாமி மறைவுக்குப் பின் நான் பார்த்த போதும் அவரிடம் ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன்.
அவருடைய மூக்கிற்கு வெளியே ஒரு வெள்ளை முடி எப்போதும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை சின்ன சிசரால் கட் செய்ய முடியும் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை.
இப்போது தள்ளாத வயதாகி விட்ட அவர் புகைப்படத்தை விகடன் தடம் பத்திரிக்கையில் பார்த்த போது அந்த வெள்ளை முடி மூக்கிற்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறதா என்பதை செக் செய்தேன். அட்டையில் உள்ள புகைப்படத்திலும் உள்ளே பேட்டியின் முதல், இரண்டாவது புகைப்படத்திலும் வெள்ளை முடி காணப்படவில்லை. ஒரு ஆசுவாசம் எனக்கு ஏற்பட்டது. அந்தோ. மூன்றாவது புகைப்படத்தில் ஒரு வெள்ளை முடி அவருடைய இடது நாசித்துவாரத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது..

விகடன் தடத்தில் கவிதையின் கையசைப்பு கட்டுரையில் வாஸ்கோ போபோ என்ற ஒரு செர்பியர் எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ’ஆங்கில மூலத்தால்’ இருந்து தானே?

மௌனியின் ’சாவில் பிறந்த சிருஷ்டி’ எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அதை படித்து விட்டவர்கள் நாம். இந்த சிறுகதையை பெங்க்வின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக சிறுகதைகளில் சேர்த்திருக்கிறது.
இந்த கவிதையில் பிரமிக்க என்ன இருக்கிறது?

’முன்னொரு காலத்தில் ஒரு கதை இருந்தது
அதன் முடிவு, கதை
தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் தொடக்கம் கதையின் முடிவுக்குப்
பின்பே வந்தது.
தங்கள் சாவிற்குப் பிறகு
கதையின் நாயகர்கள்
கதைக்குள் வந்தார்கள்
தங்கள் பிறப்பிற்குப்
பிறகு வெளியேறிப்போய் விட்டார்கள்.”
இதே முறையில் பல கவிதைகள் எழுதலாம். சலிப்பான கவிதை முறைமை.
’முன்னொரு காலத்தில் ஒரு ஓவியம் இருந்தது
அதன் கடைசி தீற்றல், ஓவியம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் முதல் வரி வடிவம் ஓவியம் முடிக்கப்படுவதற்கு
பின்பே வந்தது.
தாங்கள் அழிக்கப்பட்டதற்கு பிறகு
ஓவியத்தின் நிழல் பிம்பங்கள்
ஓவியத்திற்குள் வந்தன.
பிம்பங்கள் வண்ணத்தில் பிறப்பிக்கப்பட்ட
பிறகு வெளியேறிப் போய் விட்டன.’
இதை இசை, சிற்பம் இவற்றை வைத்தும் எழுதிப்பார்க்கலாம். ஏன் சினிமா பற்றி கூட.

’அந்த திரைப்படம் கடைசி சீனில் கடைசி ஷாட்டுக்கு முன்னரே
தொடங்கி விட்டது.
முதல் ஷாட் ஷுட் பண்ணும்போதே முடிந்து விட்டது’
மண்டையில் மரம் முளைக்காத வரை எழுதிப்பார்க்கலாம். அல்லது மண்டையில் மரம் முளைத்தபின்னும் பிடிவாதமாக எழுதிப்பார்க்கலாம்.
பெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என்று துருக்கி நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக காதில் சேதி விழுந்தது. இந்த காரசார செய்தி பெண்ணிய கவிதைகளுக்கு வழி வகுக்கலாம்.




புகழ் பூட்டு

$
0
0

மதுரை சென்ட்ரல் தியேட்டரை ஒட்டியுள்ள சந்தில் Sex workகொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. போலீஸுக்கு ’தன்னை’ய கட்டிட்டு Ex- sex workerகிழவி ஒருத்தி, அவள் பெயர் பாப்பு – தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு என்று சில குமரிகளை வைத்து தொழில் நடத்திக்கொண்டிருந்தாள். செங்கோடன் என்று ஒரு ஒரு செக்யூரிட்டி அந்த சந்து வீட்டில் வாசலில் அமர்ந்திருப்பான். சலம்பல் வந்தா சமாளிக்க.
பாப்பு கிழவியுடன் அளவளாவுவது அவளுடைய விடன், விடலை கஸ்டமர்களுக்கு சுவையான அனுபவம்.
தான் குமரியாய் இருந்த காலத்தில் மதுரைக்கு வந்த சில புகழ் பெற்ற பிரபலங்கள் தன்னை அணைஞ்சிருக்காங்கெ, பூட்டியிருக்காங்கெ என்று அவர்கள் பெயரையெல்லாம் சொல்வாள்.
ஏன் இப்போது ப்ரமோசனின் பாப்பு மாமாக்காரியாய் (Pimp)இருக்கும்போதும் இங்கே அவளுடைய Employeeகளை தேடி வரும், லாட்ஜுக்கு அழைத்துக்கொண்டு போகும் மதுரை, தமிழக பிரபலங்கள் பட்டியலையெல்லாம் கொடுப்பாள். ஒரு பழைய பிரபல நடிகை அந்தக்காலத்தில் தன்னுடைய ’கலீக்’ என்று சொல்வாள். அந்த பிரபல நடிகையை அணைஞ்சி பூட்டியிருக்கிற லோக்கல் சாமானிய சல்லிகளைப்பற்றி சொல்வாள்.
’யார் கண்டா? நாளைக்கே தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு கூட பிரபலமாகலாம். இதுக எல்லாமே சினிமா ஆசையில் தான் இருக்கு. மெட்ராஸ் போக காசு சேத்துக்கிட்டு இருக்குதுக.’
’புகழ் பூட்டு’ என்று ஒரு வெக்காபுலரியை இதை வைத்தே சப்பைக்காலன் உண்டாக்கியிருந்தான். ’நாளை தேன் சிட்டு பெரும் புகழ் எய்தி சினிமாபோஸ்டரில் வந்து சென்ட்ரல் தியேட்டரில் அவள் படம் ஓடும்போது நான் என் ’புகழ் பூட்டு’ பற்றி எல்லோரிடமும் பகர்வேன்.நான் பூட்டுன தாட்டி.’ என்று உருண்டை விழியன், குருவி மண்டையன் மார் தட்டி இரும்பூதெய்துவார்கள்.
இடியட் தாஸ், மண்டை மூக்கன், ஒத்த காதன் மூவரும் சென்ட்ரல் தியேட்டர் சந்துக்கு விஜயம் செய்த போது ஆளுக்கொரு ‘தாட்டி’யChooseசெய்யும் வேளையில் இடியட் தாஸ் Choiceகிழவி பாப்பு. பாப்புவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது. “டேய், என்னடா முட்டாப்பயலே..நானாடா” நாணத்தோடு தவித்துப்போய் விட்டாள்.
இடியட் தாஸ் அவளை பூட்டிய அனுபவத்தை பின்னர் ஏ.ஏ. ரோட்டில் விவரித்தான். “ டேய், பாப்பு என் கிட்ட ’ஏ அய்யா, மாரப்புடி, என் மாரப்புடி, முலைய பிடிச்சி கசக்கு மாமு’ன்னு விரகதாபத்தில கத்தி தவிச்சாடா.. இது ஒரு ’புகழ் பூட்டு’டா. புகழ் பெற்ற மறைந்த மாமணிகள் பூட்டிய ஆரணங்கு பாப்புவை நான் அணைஞ்சது கூட ஒரு ’புகழ் பூட்டு’ தானேடா”
ஆரப்பாளையம் ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் ஒல்லியாய் இருந்தாலும் பெயருக்கேற்ற உயரமானவன். ஆறடிக்கு மேல் உயரம். ஆம்புலஸ் என்று நினைத்து ஒரு போலீஸ் வேனை மறித்து நைஃப்பை ஓங்கி குத்தியவன். (’ரிக்ஷாவில் அவன் உட்கார்ந்து ஓட்டும்போது ரிக்ஷாவை ஒரு டைனோசர் இயக்குவது போலவே இருக்கும்’ என்று ரொம்ப பின்னால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் பார்த்தவுடன் மொட்டையன் டைனோசரை ஆலமரத்தானுடன் கனக்ட் செய்து நினைவு கூர்ந்திருக்கிறான்.)
ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் தனித்தமிழில் பேச முயற்சிகள் மேற்கொள்பவன். ஆலமரத்தான் என்ன, அனைத்து சல்லிகளுமே தூய தமிழ் பிரயாசையில் இருந்தவர்கள் தான்.
ஆலமரத்தான் ஆரப்பாளையம் பார்க்கிற்குள் நுழைந்து கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்த தன் சக சல்லிகளை பார்த்து உருக்கத்துடன் அந்த திடுக்கிடும் தகவலை சொன்னான். “ நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டுக்குப்போன (கொண்டு போன என்ற வார்த்தையின் வட்டார வழக்கு. தூய தமிழில் இயல்பாக வட்டார வழக்கு வந்து விட்டது)  அருமை அம்மணி, மறைந்த மாமணிகளை பூட்டி மகிழ்ந்த கண்மணி, ’சென்ட்ரல் தியேட்டர்’ சந்து( சென்ட்ரல் தியேட்டர் என்ற மணிப்பிரவாளத்தில் தனித்தமிழ் முயற்சி வியர்த்தமாகி விட்டதே) சரித்திர புகழ் பெற்ற பொந்து ’பாப்பு’ அமரராகி விட்டார்.”
உடனே, உடனே அந்த இடத்திலேயே இடியட் தாஸ் தலைமையில் அமரர் பாப்பு விற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது.

குருவி மண்டையன் பாப்புவின் கோட்டையில் தான் மான் கொம்புவுக்கு நெம்புகோலின் தத்துவத்தை விளக்கி விட்டு எழுந்து அறை நீங்கி, பின்னர் செக்யூரிட்டி செங்கோடன் தன் சட்டையைப் பிடித்து இழுத்த போதும் வீட்டை விட்டு எப்படி எஸ்கேப் ஆக முடிந்தது? என்று விவரித்தான்.

 ஒச்சு தான் ஒரு குமருவுடன் அணைஞ்சி சோலிய முடித்து விட்டு காசு இல்லை என்று உதட்டை பிதுக்கிய போது, தன்னை தமிழ் மரபுடன், பரந்த மார்புடன்  பாப்பு மன்னித்து அருளிய சம்பவத்தை குரல் தளுதளுக்க சொன்னான்.’ங்கொம்மாள இங்க கொண்டு வந்து விடுடா..ங்கொக்காள இங்க கொண்டு வந்து விடுடா’ன்னு அமரர் பாப்பு அப்போது கடுமையாக முதலில் திட்டி விட்டு, அப்புறம் தான் மன்னித்தாள் என்பதை மட்டும் ஒச்சு மறைக்கத்தான் வேண்டியிருந்தது. சபை நாகரீகம். இரங்கல் கூட்டத்தில் இறந்தவர் பற்றி தப்பாக பேசக்கூடாது.

ஒத்த காதன் சோழவந்தான், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என்றெல்லாம் தாட்டி தேடி வேண்டி  சென்றவன், சென்ட்ரல் தியேட்டர் சந்து கஸ்டமராக இல்லாத போதும்  உச்சக்குரலில் பாடினான். “ என் தங்கமே, உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை”
 சற்று நிறுத்தி அடுத்தவரி உச்சரித்த ஒத்தக்காதன் குரலில் துல்லியமாக பொறாமை தொனித்தது- “ எவருக்கோ இறைவன் தந்தான்” 

Boys are boys

$
0
0

சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் ஒரு ஸ்கூல் பாய் நான் ஸ்கூட்டரில் வரும்போது லிஃப்ட் கேட்டான். ‘சிக்னல் கிட்ட இறக்கி விட்டுடுங்க அங்க்கிள்.’
இவனிடம் பெயர், படிக்கும் வகுப்பு விபரம் கேட்ட பின் ஒரு கொக்கிய போட்டேன் ‘ It seems you are a fan of Ajit’.
’ ஆமா..எப்படி கண்டு பிடிச்சீங்க’
’நீ லிஃப்ட் கேட்ட ஸ்டைல் அஜித் ஸ்டைல். You know I have met your Ajit.
’நான் கூட தான் அஜித்த மீட் பண்ணியிருக்கேன். வேதாளம் ஷூட்டிங்ல. என் ’பெரியம்மா அம்முலு அந்த படத்தில நடிச்சிருக்காங்க. எங்க பெரியப்பா முன்னாலயே செத்துப்போயிட்டாங்க. பெரியம்மா நிறைய படங்கள்ள நடிச்சிருக்காங்க.’ படங்கள் பெயரை சொன்னான்.
’அங்க்கிள், நான் அடுத்த சிக்னல்ல இறங்கிக்கிறேன்.’
ஆற்காட் ரோட்டில் அடுத்த சிக்னலில் இறங்கிக்கொண்டான்.
அங்கிருந்து மெகா மார்ட்டை ஒட்டிய ரோட்டில் போகும்போது சூடான கடலை விற்றுக்கொண்டு சுரேஷ் வண்டி தள்ளிக்கொண்டு, சட்டியில் கரண்டியால் தட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான். அவனிடம் நிலக்கடலை பாக்கெட் வாங்கிக்கொண்டேன்.பொதுவாக சூடான கடலை வண்டிக்காரர்கள் திருவண்ணாமலை தடாகம், போத்துவா என்ற ஊர்க்காரர்களாய் தான் இருப்பார்கள். ஆனால் இவன் ஏதோ வேறு ஊர். சுரேஷ் சொன்னான். ‘அடுத்த கட்டில போனா விஜய் சேதுபதி ஆஃபிஸ். அத தாண்டி போனா ஆற்காட் ரோட் போய்டுவீங்க.’
விஜய் சேதுபதி கூத்துப்பட்டறைக்கு மூன்று தடவை சென்ற வருடங்களில் வந்ததுண்டு. ஆனால் நான் பார்த்ததில்லை. சரி. இங்கே தான் விஜய் சேதுபதி ஆஃபிஸ்னா ஆஃபிஸ பாத்துக்கிட்டே போய் ஆற்காடு ரோட்டுக்கு போயிடலாம்னு அடுத்த சந்தில் திரும்பினேன்.
திரும்பும் போது ஒரு குண்டு பையன் நின்று கொண்டிருந்தான்.
‘ Do you know..Vijay Sethupathy’s office.’
‘Go straight ‘
‘ You are a vijay fan.’அரிவாள போட்டேன்.
அவன் முகம் பிரகாசமாகி “How did you find it Uncle?”
“Your Posture clearly indicates that you are a vijay fan. You turn your head exactly like Vijay.”
நான் சொன்னேன். “But I’m a Vijay Sethupathy fan.”
அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் இந்த உரையாடலால் ஈர்க்கப்பட்டு சிரித்தார்கள். ஒருவர் அவனுடைய அம்மாவாக இருக்கலாம்.
இன்னொருவர் அத்தையாக கூட இருக்கலாம்.
நான் ‘I’m a great admirer of Vijay Sethupathy’
சாம் அவன் பெயர். ஏழாம் வகுப்பு படிக்கிறான். சாம் அழுத்தமாக ‘I’m a Vijay fan.’
“ I tell you, When you become a man, You will be a Vijay Sethupathy fan.”
சாம் பதற்றத்துடன் “ No, Through out my life I will be a Vijay fan. I won’t change.”
‘Ok, I’m going to see Vijay Sethupathy now. ஹைய்யா ஜாலி. Bye.’
விஜய் சேதுபதி ஆஃபிஸ் முன் ஒரு சிறிய கூட்டம். இளம் வாலிபர்கள்.
விஜய் சேதுபதி ஆஃபிஸ் இது தானா?
அவர் இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. அவருடன் செல்ஃபி எடுக்கமுடியுமா என்ற தவிப்பில் ரசிகர்கள்.
அந்த ஆஃபிஸை தாண்டி ரைட்டில் திரும்பி மீண்டும் ஆற்காட் ரோட் வந்தேன்.
……………

Inter personal relationship

$
0
0

’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன் தனக்கு எம்.ஆர்.ராதாவை தனியறைக்கு வரும்படி அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் -செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. மாவீரன் என்னமா தம்பி முகத்தில கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

அரசியல் பிழைத்தோர்

$
0
0

நாற்பது விலையுயர்ந்த உயிர்கள் பறி போயிருக்கின்றன.
மதுரை பக்கம் இளைஞன் ஒருவன் துர்மரணம் அடைந்தால் பெண்கள் பதறி பொங்கி நெஞ்சில் அடித்துக்கொண்டு, கண்ணீர் வழிய கதறுவார்கள். 
“ஆத்தி, அழகொட்ட ஆம்பிளப்பிள்ள போயிடுச்சே.”
நாப்பது அழகொட்ட ஆம்பிள பிள்ளங்க கருக திருவுளம்.
’வலுவான பதிலடி’ என்பது தான் பெருந்தீர்வா?
Tit for tat. பயங்கரவாதிகளை வேட்டையாடும் எதிர் வேகம் எத்தனை அப்பாவிகளை அழித்தொழிக்கும். நாம தான் வசதியா பக்குவப்பட்டுக்குவமே. ’களையெடுக்கும்போது பயிரும் தான் அடி வாங்கும்’னு.
பயங்கரவாதிகள் அனைவரும் அருவருக்கத்தக்க ஜென்மங்கள் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்? வலுவான பதிலடியில் நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் பயங்கரவாதியின் அடுத்த ’வலுவான திட்டம்’ இருநூறு ராணுவ வீரர்கள். அதற்கு நம் அரசாங்கத்தின் வலுவான பதிலடி நானூறு தீவிரவாதிகளை பழி தீர்க்கும்.
தீவிரவாதிகளுக்கு பக்கத்து தேசம் முழு ஆதரவெனும் போது வலுவான பதிலடி என்ற வார்த்தையே வலுவிழந்த அபத்தம்.
பயங்கரவாதிகளின் அதற்கடுத்த வலுவான பதிலடி சிவிலியன்களையும், ராணுவ வீரர்களோடு சேர்த்துக்கொல்லும் கொடூர திட்டமாகத்தான் இருக்கும். வலுவான பதிலடி ஒரு சங்கிலித்தொடர் என்பதே நிதர்சன உண்மை.
காஷ்மீர் பிரச்னை நிரந்தர துயரம். காஷ்மீரில் இரு தேசிய கட்சிகளுக்கும் எந்த செல்வாக்கும் இல்லை என்னும் யதார்த்தம் சொல்லும் செய்திக்கு என்ன பதில்? அதுவே தானே இங்கே தமிழகத்திலும், மற்ற சில மாநிலங்களிலும் கூட என்ற உளறல் விதண்டாவாதம் அற்பத்தனமானது.
ஷேக் அப்துல்லா காலத்தில் இருந்தே தொடரும் தீர்வற்ற நாசகார அரசியலின் தீவிரவாத வேலைகள். ஷேக் அப்துல்லாவை ஏன் இங்கே கொடைக்கானலில் சிறை வைக்க வேண்டியிருந்தது?
ஒவ்வொரு தீவிரவாத கொடூரத்தின் போதும் இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை, அவமானம், சிறுமை, புறக்கணிப்பு.
’உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும்’
மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த விசித்திர அறிவிப்பின் தன்மை பற்றி மீடியா உரையாடல் நிகழ்த்திப்பார்க்கலாம்.
ஆட்சிக்கட்டிலில் ஏறப்போவது தி.மு.க தான் என்கிற உறுதிப்பாட்டில் நின்று இவ்வாறு சொல்லப்படுகிறது. தேவைகள் பூர்த்தி! என்ன ஒரு அடர்த்தியான வாக்குறுதி அதில் உள்ளடங்கிய விஷயங்கள் தி.மு.க தொண்டனுக்கு ஆறுதல் என்பது ஒரு பக்கமிருந்தாலும் உசுப்பேற்றும் தன்மையை உள்ளடக்கியது. எல்லா டெண்டர், காண்ட்ராக்ட் பற்றிய எம்.எல்.ஏ., கவுன்சிலர் உரிமையில் தனக்கும் உரிமைக்குரல் பங்கு எனும் ’கனவு மெய்ப்படும் நம்பிக்கை’ கூடலாம். ’ஆட்சி எங்கள் கையில்’ தொண்டன் என்பவன் காவல் துறைக்கு எப்போதுமே தலைவலியான சிக்கலான சண்டியர் அவதாரம் தான்.
காலாகாலமாக தொண்டனுக்கு தி.மு.க வாயிலயே லட்டு சுட்டுக்கொடுத்துக்கொண்டே தான் இருந்திருக்கிறது. ’உடன் பிறப்புக்கு இதயத்தில் இடம்’ என்ற தத்துவ நிலைப்பாடு நிரந்தரமானது என்பதை மறக்க முடியாது.
பா.ம.க., தே.மு.தி.க குடும்பக்கட்சிகளின் அதிமுக கூட்டணி சார்பு நிலைப்பாடு பற்றிய செவிவழி செய்தி கவுண்டமணியின் “இங்கே சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே” டயலாக்கை நினைவு படுத்துகிறது.
கவுண்டமணி பரவாயில்ல. ஒரு மானஸ்தன தான் தேட வேண்டியிருந்தது.
தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெற உறுதியாக அனுமதிக்கப் போவதில்லை என்ற தேர்தல் கமிஷனின் வைராக்கிய கெடுபிடி கிடுக்கிப்பிடியால் டி.டி.வி தினகரனின் இருபது ரூபா நோட்டு பத்து ரூபா நோட்டாக மாறலாம்.
கடுமுடுக்கி பயில்வான் பீ முடுக்கி செத்தானாம்.
………

சின்னத்தம்பி சாமான் மரம்

$
0
0

ஊரப்பாக்கத்தில் இருந்து ஆலப்பாக்கம் வரும்போது பெருங்களத்தூரில் சாலையோர மரங்கள் கண்பார்வையில் விழுந்தவாறு இருந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மரம் கவனத்தைக் கவர்ந்தது. காய்கள் நீளமாக பெரிதாக தொங்கின. இந்த மரத்தை நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். அதன் பின் பார்த்த ஞாபகமெல்லாம் இல்லை. இதன் வட்டார வழக்கு பெயர்? ஆழ்மனத்தில் இருந்து அதன் பெயர் மேலெழும்பி வந்தது. யானபுடுக்கு மரம். சின்னத்தம்பி சக்கர போல அதன் காய்கள் இருப்பதால் யானப்புடுக்குமரம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


பிடில் வாத்தியார்

$
0
0

எட்டாங்கிளாஸ் ஃபிடில் வாத்தியார். வயலின் வாசிப்பவர் அல்ல. உடம்பை அடிக்கடி சொறிவார். அதனால் பிடில் என்று பெயர். இந்தப்பெயர் அவருக்கு எந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டதோ?
Conjugation. See verb.
I see என்று present tenseல் ஆரம்பித்து future perfect continous tense வரை மாணவர்கள் எழுத வேண்டும்.
ப்ளாக் போர்டில் பிடில் To see எழுதி விட்டு கட்டை தொண்டையில் சொல்வார். “எழுது. Conjugation. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’எழுது” என்று future tense பற்றி மட்டுமே சொல்வார். திரும்ப திரும்ப I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ சொல்லி குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்.
அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். குனிய வைத்து முதுகில் பட,படவென்று பிடில் கையால் அடித்து ”முன்னால போய் முழங்கால் போடு”
நான் முழங்கால் போட்டவாறே காஞ்சுகேசன் எழுதும்போது ஒரு பையன் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தான்.“ சார். இந்த ப்ரசண்ட் பெர்ஃபெக்ட் கண்ட்டினுவஸ் டென்ஸ்ல..”
அவன் வார்த்தையை முடிக்கு முன்னரே “ அதத் தான் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்…இவனுக்கு சிரிப்பு வருது” என் முதுகில் மீண்டும் நான்கைந்து அடி. ”எழுது. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ எழுது”. கட்டைத் தொண்டையில் கத்தினார். உடம்பில் விலா பகுதியில் சொறிந்து விட்டு ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’“ என் முதுகில் மீண்டும் ரெண்டு அடி. ’ஐ’க்குக்கும் ’வி’க்கும் ஷால். மத்ததுக்கெல்லாம் வில்.
வகுப்பில் முதல் வரிசை பெஞ்சில் இரண்டு குட்டை பையன்கள். இருவருக்குமே Funny face. ஒவ்வொரு வாரமும் ஒரு க்ளாஸ் Non – detailed. சிலபஸில் ராபின்சன் குருசோ நாவல். அந்த இரண்டு பையன்களில் ஒருவனுக்கு குருசோ என்றும் இன்னொருவனுக்கு ஃப்ரைடே என்றும் பிடில் பெயர் வைத்தார். ராபின்சன் குருசோ பாட வகுப்பு என்றால் அந்தப் பையன்கள் இருவர் முகமும் அன்று முந்திய வகுப்புகளிலேயே பதட்டமாகி இருளடைந்து விடும்.
கதையில் ஃப்ரைடே செய்யும் முட்டாள் தனங்களுக்கு வகுப்பில் உள்ள ஃப்ரைடே முதுகில் அடி விழும். இப்படி முட்டாப்பயல கூடவே வைத்திருக்கானே குருசோ என்று பிடில் கோபப்பட்டு புத்தகத்தை கீழே வைத்து விட்டு வகுப்பில் உள்ள குருசோ முதுகிலும் நாலு சாத்து சாத்துவார். “மூள கெட்ட பயல கூடவே ஏன் வச்சிக்கிட்டுருக்கற நீ? இடியட், ஃபூல், ராஸ்கல்.”
‘Presence of Mind’ வார்த்தையை பிடில் சொல்லி தான் முதலில் கேள்விப்பட்டோம். திருச்சியில் இருந்து பிடில் சென்னை போய் இருக்கிறார். பாரீஸ் கார்னர். ஹை கோர்ட் எதிரில் பிடில் போகும் போது எதிர் ப்ளாட்ஃபார்மில் ஒருவர் தெரிந்த ஆள் போல இருந்திருக்கிறார். நின்று, அவரைப்பார்த்து இங்கிருந்து கை தட்டியிருக்கிறார்.
கை தட்டல். எல்லோரும் திரும்பி பார்த்திருக்கிறார்கள். எதிர் ப்ளாட் ஃபார்மில் போய்க்கொண்டிருந்தவர்கள் மட்டுமில்லாமல் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டிருந்தவர்கள், மற்றும் இவர் நின்ற ப்ளாட்ஃபார்மின் பாதசாரிகளும் நின்று பார்த்திருக்கிறார்கள்.
(ந.முத்துசாமி சொல்வார் “ கைதட்டலுக்கு ராணுவ கட்டளைக்குள்ள பலம் இருக்கு.”)
மீண்டும் எதிர் ப்ளாட்ஃபார்மை பார்த்து பிடில் கை தட்டியிருக்கிறார். எதிர் ப்ளாட்ஃபார்மில் போய்க்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நின்று நானா? நானா? என்று கைச்சைகையால் கேட்டிருக்கிறார்கள். இவர்
‘அந்த குடைக்காரர்’ என்று சைகைகளால் சொல்லியிருக்கிறார். குடைக்காரரும் ’நானா’ கேட்டுக்கொண்டிருந்தவர், மற்றவர்களால் “ உங்களைத்தான்” என்று அறிவுறுத்தப்பட்டு சிரமப்பட்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்த பெரிய ரோட்டை க்ராஸ் செய்து இவரை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார். அவர் பாதி ரோட்டை க்ராஸ் செய்யும் போது பிடில் வாத்தியாருக்கு பகீர் என்று ஆகி விட்டது. அவர் தெரிந்த மனிதர் அல்ல. வேறு யாரோ? உடனே பிடில் ‘Presence of Mind’ வேலை செய்ய ஆரம்பித்தது. கையில் சுளுக்கு போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக பாவத்தில் வேதனை வரவைத்து அவரை நோக்கியே கை தட்டி, மேல் நோக்கி குடை போல் நீட்டி, கை விரல்களை மடக்கி கையை நீவி, நீவி விட்டிருக்கிறார். திரும்ப, திரும்ப கை தட்டி, மேல் நோக்கி நீட்டி, கை தட்டி கையின் முன் பகுதியை நீவி, நீவி விட்டு..
குடைக்காரர் பக்கத்தில் வந்து உற்று பார்த்து விட்டு, மீண்டும் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டே முனகியிருக்கிறார். “ பாவம் கையில சுளுக்கு. அங்க இருந்து பாக்க கூப்பிடுவது போல தெரிஞ்சிருக்கு “
வகுப்பில் பிடில் தலைப்பொட்டில் தட்டிக்காண்பித்து ”ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேணும்டா”
ஸ்கூல் பிக்னிக் ஒன்றிற்காக அதிகாலை ஆறரை மணிக்கு திருச்சி டவுன் ஸ்டேசனில் ரயிலில் ஏறி ஒரு நூறு பேர் உட்கார்ந்திருக்கிறோம். ஒருத்தன் “ டேய் பிடில் பார்றா. வெளிக்கி இருக்குதுடா”
எட்டிப்பார்த்தால் ஸ்டேசனை ஒட்டிய முள் காட்டில் பிடில் வாத்தியார் ‘Nationalize’ பண்ணிக்கொண்டிருந்தார்.
”பிடில் மாமா, பிடில் மாமா இங்க பாருங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க” என்று கோரஸாக பாடும் போது தான் கவனித்து எழுந்து ஒரு முள் மரத்தின் பின் ஒளிந்து மறைந்து கொண்டு ரயிலில் எவனெல்லாம் பாடுறான், சிரிக்கிறான்னு நோட்டம் விட்டார்.
எனக்கு என் அப்பாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் மணியார்டர் வருவதுண்டு. பாக்கெட் மணி. பிடில் பீரியடில் மணியார்டர் வந்தால் தொலைந்தேன். பீரியட் முடிந்ததும் முழங்கைகளை சொறிந்து கொண்டே பிடில் “ சம்பளம் வாங்க கையெழுத்து போடணும். பணம் தேவை”
கணிசமாக என்னிடம் இருந்து பணம் கறந்து விடுவார். இவர் சம்பளம் வாங்க கையெழுத்து போட பணம் தர வேண்டுமா? அதற்கு நான் ஏன் தர வேண்டும்? இப்படி ஒரு எச்சிக்களைத்தனம் பிடிலுக்கு உண்டு. பணத்தை திருப்பி தரவே மாட்டார்.
கோபமாய் அடிக்க வரும்போது அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு எட்டணா போட்டு விட்டால் அடிக்க மாட்டார்.
நீதி போதனை வகுப்பில் ஜெரால்ட் ஒரு பேனாக்கத்தி வைத்திருப்பதை கண்டு பிடித்த ஆசிரியர் ஒருவர் அதை பிடுங்கி மேஜையின் டிராயரை திறந்து உள்ளே வைத்து விட்டார். அடுத்த வகுப்பில் உள்ளே வந்த பிடில் டிராயரை திறந்தவர், கத்தியை நைசாக இடுப்பில் வேட்டியில் செருகிக்கொண்டார். இதை எல்லோருமே பார்த்து விட்டார்கள்.
ஜெரால்ட்டை அடுத்த வகுப்பில் மன்னித்த நீதி போதனை ஆசிரியர் கத்தியை திருப்பி தர ட்ராயரை திறந்தால் கத்தியில்லை. அவர் க்ளாஸ் டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்ய வலியுறுத்தி விட்டு சென்றார். பிடில் வந்ததும் க்ளாஸ் லீடர் சொன்னான். “ சார் எவனோ ட்ராயர்ல இருந்த கத்திய தேட்டா போட்டுட்டான் சார்”
பிடில் நீளமாக அட்வைஸ். கையையும் காலையும் சொறிந்து கொண்டே ”டேய் இந்த வயசில தேட்டைய போடுற புத்தி இருந்தா உருப்பட மாட்ட. மரியாதயா உண்மைய சொல்லு”
குண்டு நஸீருதின் எழுந்து “ அத தேட்டா போட்டவன் கை குஷ்டம் பிடிச்சிடும் சார். அழுகிப்போயிடும்.”
பிடிலுக்கு ஜிவ்வென்று கோபம். ”இங்க வா” மலை போல எழுந்து ஆடி ஆடி முன்னால் வந்த நஸீருதினை அடி வெளுத்து விட்டார். “உன்ன கேட்டனா நான்? அதிக ப்ரசங்கி”
மூக்கு கண்ணாடியை கீழிறக்கி, பிடில் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது “ப்ரசண்ட் சார்” சொல்வதற்கு பதிலாக “ போட்டுக்க சார்” வேகமாக பையன்கள் சொன்னால் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் அவருக்கு புரியாது. ப்ரசண்ட் தான் சொல்கிறான் என்று நினைத்து அட்டென்டண்ஸ் ரிஜிஸ்டரில் மெக்கானிக்கலாக ’டிக்’ அடிப்பார். பேனாக்கத்தி தொலைந்த நிகழ்வுக்கு பிறகு ஊட்டி குண்ணூர் சிரில் வின்சண்ட் “ தேட்டா போடாத சார்” என்று படுவேகமாக சொல்வான். அதற்கும் ‘டிக்’ அடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் சிரிப்பதை கண்டு பிடித்து விட்டார். சிரில் வின்சண்ட் பெயரை சொல்லி விட்டு காதை தீட்டி ஒரு நாள் கவனம் செலுத்தினார். இது எங்க கண்டு பிடிக்கப்போகுது என அன்று சிரில் வின்சண்ட் ரொம்ப அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு வார்த்தையாக, நிதானமாக கொஞ்சம் ராகம் போட்டுசொன்னான் “ தேட்டா.. போடாத.. சார்..”
பிடில் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டரை கீழே வைத்து விட்டு மூக்கு கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு “ இங்க வா” அழைத்தவர் குரலுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் சிரில் வின்சண்ட்டுக்கு. பிடில் அடி வெளுத்து விரிய கட்டி விட்டது.

English Hand writing note bookல் என்ன எழுதப்பட்டுள்ளது என்று வாசிக்காமல் கையெழுத்து போடுவார். ’பிடில் மாமா பிடில் மாமா எங்க போறீங்க, உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க’ என்பதை  இங்க்ளீஷில் அப்படியே fiddle mama fiddle mama enga poreengaன்னு எழுதி நான் கையெழுத்து வாங்கி எல்லோருக்கும் காட்டியிருக்கிறேன்.
மறக்க முடியாத ஆளுமை பிடில் வாத்தியார். நகைச்சுவை உணர்வு மிக அதிகம். வயதானவர் தான். ஆனாலும் பெருமையோடு சொல்வார்.”டேய். உங்க எம்.ஜி.ஆர் என்ன விட வயசில மூத்தவன்.”

பிடில் வாத்தியார் -2

$
0
0

பிடில் வாத்தியார் நல்ல நீலவான நிறத்தில் பளிச்சென்று சட்டை அயர்ன் செய்து அணிந்திருப்பார். கறுப்பு ஃப்ரேம் சின்ன வட்ட சைசில் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். தோளில் ரெண்டாக மடித்த துண்டு ஒரு பகுதியை கழுத்துக்கு அந்தப்புறம் முதுகில் தொங்கும் படி விட்டிருப்பார். தினமும் ஷேவ் செய்திருப்பார். ஒல்லியான உடல் வாகு. நல்ல உயரம். அமிதாப் பச்சனை பற்றி அறிந்திருந்தால் ஒரு வேளை “டேய் உங்க அமிதாப்பை விட நான் ஹைட்டுடா” என்று கட்டை தொண்டையில் சொல்லியிருப்பார். அவருடைய குரல் நிச்சயம் எம்.ஆர் ராதா குரலல்ல என்றாலும் அது விசேஷமான கரகரத்த கணீர் குரல். ரிட்டயர்ட் ஆன பிறகும் பள்ளியில் சில ஆசிரியர்களுக்கு நிர்வாகம் தொடர்ந்து வேலை தருவதுண்டு. அப்படி ஒருவர் தான் பிடிலும்.

தமிழ் வாத்தியார் ஒருவர் ரொம்ப அள்ளி விடுவார். அவர் பெயர் அல்ப்பி.

அல்ப்பி குட்டையாக இருப்பார்.
அல்ப்பியும் பிடிலும் ஒரு வகையான love and hate relationshipபில் எப்போதும் இருப்பார்கள். குட்டையான அல்ப்பியின் தோளில் பிரியத்துடன் கையை போட்டுக்கொண்டு படியில் ஏறி பிடில் வரும் காட்சி கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அல்ப்பி வகுப்பு நடத்தும்போதே அவருடைய நண்பர்கள் அவரை காண வருவதுண்டு. மாணவர்களும் ரசிக்கட்டும் என்று அவர்களிடம் பேசும் போதே ’கவனிங்கடா’ என்று முகத்தை திருப்பி மாணவர்களை பார்த்து சிரிப்பார். வந்த நண்பர்கள் கிளம்பும் போது “ நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க” என்று நாடகத்தனத்துடன் பாடுவார். நான் இது தான் சாக்கு என்று வகுப்பின் முன் வந்து அந்த பாட்டிற்கு டான்ஸ் ஆடுவேன். வந்தவர்கள் எப்போதும் வெட்கப்பட்டு தான் பிரியா விடை பெறும்படி இருக்கும்.

”ஐயா, மல வேதனை, பிரசவ வேதனை, மரண வேதனை இம்மூன்றும் அடக்கவே முடியாது. தாங்க முடியாதது” என்பார். அதனால் அவரிடம் பையன்கள் எப்போதும் வகுப்பில் பாடம் நடத்தும் போது ”ரெண்டுக்கு வருதுய்யா” என்று சொல்லி வெளியேறி சுற்றுவார்கள். வகுப்பு முடியும் வரை வரவே மாட்டார்கள்.

பிடிலுக்கும் அல்ப்பிக்கும் அடிக்கடி மனஸ்தாபம் வந்து விடும். அல்ப்பி தமிழ் வகுப்பில் “ பனை மரம் மாதிரி வளந்தவனுக்கு உடம்பெல்லாம் விஷம். விஷப்பய. அயோக்கிய பய ஒருத்தன நம்புனேன். கழுத்தறுத்துட்டான்.”
பிடில் “ டேய் கள்ளன நம்பலாம். ஆனா குள்ளன நம்பக்கூடாது. வாயில வர்றதெல்லாம் பொய் தான்டா. அவன் புழுத்துத்தான் சாவான்.”
இந்த அரசியல் பற்றி விளக்க எந்த கழுகாரும் தேவையேயில்லை.
பசங்க இடைவேளையில் பேசிக்கொள்வோம். “டேய் பிடிலுக்கும் அல்ப்பிக்கும் சண்டடா. அதான் இப்படி திட்டிக்குதுங்க.”

அடுத்த மாதம் பிடில் அல்ப்பியின் தோளிலும், அல்ப்பி அதே சமயம் பிடிலின் இடுப்பிலும் கை போட்டுக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டே ஃபேகல்ட்டி ரூமில் இருந்து வெளி வருவார்கள்.
பசங்க”டேய், பிடிலும் அல்ப்பியும் மறுபடியும் சேந்துடுச்சிங்கடா”

பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் என்றால் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு மாதத்திற்கு முன்னிருந்து ஆசிரியர்கள் படு சீரியஸ் ஆகி விடுவார்கள். இன்ஸ்பெக்டர் வருகிற தேதியில் இன்று இல்லை. இன்னும் நான்கு நாள் கழித்து வருகிறார் என்று தகவல் வரும். டிரஸ் கோட். வெள்ளை சட்டை, மெரூன் ட்ரவுசர் அயர்ன் செய்து போட்டுக்கொண்டு வரவேண்டும். காலுக்கு ஷாக்ஸ் போட்டு வெள்ளை கான்வாஸ் ஷூ படு சுத்தமாக இருக்க வேண்டும். ப்ளே க்ரவுண்ட்டுக்கு போகிற P.T க்ளாஸ் கூட கேன்சல் ஆகி விடும். இன்ஸ்பெக்டர் வகுப்பறைக்கு தான் வருவார் என்பது வழக்கமாய் இருந்ததாம்.
ஒவ்வொரு சப்ஜெக்ட் டீச்சரும் ரெடிமேடாக சில கேள்வி பதில்களை முதல் தர மாணவர்களை வைத்து தயார் படுத்துவார்கள். இன்ஸ்பெக்டர் வரும்போது வகுப்பறைகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டு ப்ளாக் போர்ட் கறுப்பு சேர்க்கப்பட்டு பிரமாதமாய் இருக்கும். இன்ஸ்பெக்டர் வந்தால் நடக்க வேண்டிய விதம் பற்றி ரிகர்சல் கூட நடத்தப்படும். தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக வந்து ஆசிரியர்களை எச்சரித்துக்கொண்டே இருப்பார். மாணவர்களிடம் கேள்விகள் கேட்பார். இத்தனைக்கும் பள்ளி மிகவும் பெயர் போன பள்ளி. ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வில் நல்ல ரிசல்ட் தரும் பள்ளி.

சரியாக எட்டாம் வகுப்புக்கு பிடில் வாத்தியார் க்ளாசில் தான் இன்ஸ்பெக்டர் வகுப்பறையில் அன்று நுழைந்தார். அவருடன் தலைமையாசிரியர் கூடவே. பையன்கள் அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள். நான்காவது வரிசையில் ஒரு மாணவன் டெஸ்க்கில் தலை வைத்துப் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தான்.
எல்லோரும் எழுந்து நிற்கும்போது ஒருவன் மட்டும் எழுந்து நிற்கவில்லை. அதோடு தூங்கிக்கொண்டும் இருக்கிறான்.

இன்ஸ்பெக்டர் அவனை கவனித்து விட்டார். தலைமையாசிரியர் அவமானத்துடன் பிடிலை கோபப்பார்வை பார்த்தார். அர்த்தம்: ‘யோவ், என்னய்யா க்ளாஸ் நடத்துற.’

அதற்குள் பல மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்தவனை பெயர் சொல்லி ”எழுந்திருடா டேய்” என்கிறார்கள். இரு பக்கத்தில் இருந்த இரு பையன்கள் அவனை தட்டி எழுப்புகிறார்கள். அவன் பதறிப்போய் எழுகிறான்.

பிடில் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் “ டேய் நீ படு, படுறா” என்கிறார். ”பேசாம படு”
பக்கத்தில் நின்று கொண்டிருந்த தலைமையாசிரியர் மெச்சாடோ திகைப்புடன் பிடிலை பார்க்கிறார். “ஃபாதர், அவனுக்கு ஃபீவர். ஹை ஃபீவர். சூசையிடம் ஒரு ரிக்ஷா கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். அவன வீட்டுக்கு அனுப்பனும். இன்ஸ்பெக்ஷன் என்பதால் காய்ச்சலோட ஸ்கூலுக்கு வந்துட்டான் முட்டாப்பய. ஒடம்பு ரொம்ப முடியலன்னா லீவு போட வேண்டியது தானே. இன்ஸ்பெக்ஷன் அன்னக்கி லீவு போடக்கூடாதேன்னு பொறுப்பா வந்திருக்கான். பாவம்”

தலைமையாசிரியர் ஃபாதர் மச்சோடாவுக்கு ஆசுவாசம். பிடில் சமாளிப்பு அவருக்கும் புரிந்தது.
இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார். சில பையன்கள் பதில் சொன்னார்கள். வெரி குட் சொல்லி விட்டு அடுத்த வகுப்பிற்கு கிளம்பினார். தலைமையாசிரியர் ஃபாதர் மெச்சாடோ கிளம்பு முன் தலையை ஆட்டி பிடில் கண்களைப்பார்த்து தன் கண்ணாலேயே நன்றி சொன்னார். நான் நன்றி சொல்வேன் உன் கண்களுக்கு.

தலைமையாசிரியருடன் இன்ஸ்பெக்டர் கிளம்பியவுடன் மாணவர்கள் ஆசுவாசமாக ஆகும்போது பிடிலின் திறனை உணர்ந்து சந்தோசமாக சிரித்தார்கள். பிடில் தன் வலது பக்க நெற்றிப் பொட்டில் கை வைத்து சொன்னார் “ Presence of Mind!”

எல்லா பையன்களும் சிரித்து ரிலாக்ஸ் ஆனோம். நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்த பால் மோகனைப் பார்த்து சிரித்தோம். அவனும் சிரித்தான். ’நான் தான் இன்னக்கி இங்க ஹீரோ’ என்ற தோரணையில் பெருமையாக சிரித்தான். பிடிலைப் பார்த்தும் சிரித்தான். பிடில் “ இங்க வா”. பால் மோகன் தலையை குனிய வைத்து முதுகில் பலமாக சட,சட என அடித்தார். விடவில்லை. அடி வெளுத்து விட்டார்.


ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை

$
0
0
சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து 'சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் 'தொழுகை'கதைதான்.ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்'என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது.
1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலிஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு 'மெய்யுள்'என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார்.
இது 'தளையசிங்கத்தின் பிரபஞ்சயதார்த்தம்'என்ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல்.
22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடம் நான் நோ¢ல் இதுபற்றிக் கேட்டபோது தளைய சிங்கத்தின் சகோதரர் மு. பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாகக் கூறுகிறார்.
இந்த விவரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன்.
ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.
திருச்சியிலுள்ள சபாரத்தினம் என்ற இலங்கை எழுத்தாளர் 'தளைய சிங்கத்திற்கெதிராக போலீசைத் தூண்டி பணம் கொடுத்தவன் கொழும்பில் பாத்திரக்கடை வைத்திருக்கிற தீவுக்காரன்'என்று என்னிடம் தெரிவித்த தகவலை ஜெயமோகனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.
மே 4, 5, 6 தேதிகளில் ஊட்டிநாராயணகுரு குலத்தில் நடக்க இருக்கிற தளையசிங்கம் கருத்தரங்கிற்கு ஜெயமோகனிடம் இருந்து அழைப்பு.
சொல்புதிது 9ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பப்பட்டு கிடைக்கிறது.
ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களில் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளைய சிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருத்தக் கூடிய அளவுக்கு க்ராஃப்ட் மேன்ஷிப்.
தளைய சிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி 'இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி'என்றும் 'செயற்கை இறுக்கம் நிறைந்த நடை'என்றும் குறிப்பிடுகிறார்.
ஊட்டியில்
குடும்பத்துடன் ஜெயமோகன் வருகிறார். கருத்தரங்கத்தின் முதல் அமர்வு. ஜெயமோகனின் முன்னுரை.
நான் பேசிய போது 'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி'என்ற தளைய சிங்கத்தின் கூற்றைப் பற்றி குறிப்பிடுகிறேன்.
வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் 'அப்படியே சொல்கிறாரா''அப்படியே சொல்கிறாரா'என்று கேட்கிறார்.
நான் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலைகீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும், அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸ{டனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும் பங்களதேஷின் கொரில்லாக்களோடும், பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்து கொரில்லாக்களோடும் அண்ணா தி.மு.க அனுதாபிகளை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளைய சிங்கம் எழுதியதையும் அபத்தம் என்று சுட்டிப் பேசினேன்.
உடனே ஜெயமோகன் இப்படி ஒவ்வொரு வரியாக உருவி தளையசிங்கத்தைப் பார்க்கவேண்டாம் என்றார்.
தொழுகை கதை பற்றி பேச ஆரம்பித்த வேதசகாயகுமார் அவருடைய கிறிஸ்துவ பூசை லத்தீன் மந்திரங்களை இளைஞர்கள் பொருத்தமாக கெட்ட வார்த்தை போட்டு பேசிக் காட்டுவதைப் பற்றியும் பாவ மன்னிப்பு கேட்கும்போது பாதிரியாரிடம் ஆபாசமாக விவாரித்துப் பேசி பாதிரியார் இளையவராயிருந்தால் அவர் மிகவும் நெளியவேண்டியிருக்கும் என்பதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
'செக்சுவாலிடி பற்றி பேசலாம் தானே. ஏதும் தடையுண்டா?'என்று நான் கேட்டேன்.
ஜெயமோகன் தன் மனைவி அருண்மொழி நங்கை கலந்து கொண்டுள்ள நிலையிலும் பேசலாம் என்பதாக தலையாட்டினார்.
மதியம் சாப்பிட்டுவிட்டு அரட்டை ஜெயமோகன் அவருடைய உத்தியோகம் செய்யும்போது டெலிபோன் உரையாடல்களைதான் ஓட்டுக் கேட்ட கதைகளை கூறுகிறார்.
குற்றாலத்தில் குமார செல்வாவுக்கும் லட்சுமிமணிவண்ணனுக்கும் நாடார் ஜாதியின் உட்பிரிவு பற்றிய சர்ச்சை காரணமாக நடந்த கைகலப்புச் சண்டையைப் பற்றிக் கூறுகிறார்.
யாரோ ஒரு அரை குறை அமுதா கணேசனையும், குரும்பூர் குப்புசாமியையும் படித்து விட்டு, ஒரு ரொம்பப் பெரிய நாவலை எழுதிக் கொண்டுவந்து ராமஸ்வாமியிடம் (சுந்தர ராமசாமியை ராமஸ்வாமி என்றே ஜெயமோகனும் வேதசகாய குமாரும் குறிப்பிடுகிறார்கள்) படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான்.
ஜெயமோகன் இந்த இடத்தில் தான் ராமஸ்வாமியின் பாய்சனைக் கவனிக்கனும் என்கிறார்.
சுந்தர ராமசாமி எனக்கு வயதாகி விட்டது. ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறது. நீங்க அவரிடம் உங்க நாவலைக் காட்டுங்களேன் என்று ஒரு மூன்றாந்தர பேராசிரியரைக் குறிப்பிட்டு அந்த அரைகுறை எழுத்தாளரை சமாளித்ததை பாய்சன் என்று ஜெயமோகன் விவாரிக்கிறார்.
யாராயிருந்தாலும் ஆர்வக்கோளாறுகளை இப்படித்தானே சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன பாய்சன் இருக்கிறது?
இதைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி என்னிடம் இடைவெளி சம்பத் பற்றி சொன்ன விஷயத்தை குறிப்பிட்டேன். சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்ததையும் அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக 'RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit செய்தால் நன்றாக வரும்'என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு? என்று இந்திரா பார்த்தசாரதியிடம் சொன்னதையும் கூறினேன்.
(இந்த விஷயம் ஜெயமோகனை உறுத்தியிருக்குமோ என்னமோ)
என் கல்லூரி வாழ்க்கையின் போது நடந்த சம்பவம், நான் திரைப்பட உதவி இயக்குனராக இருந்த போது அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை ஐந்தாறு முறை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது நடந்த ஒரே மாதிரியான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
பாக்யராஜீன் ராசுக்குட்டி படத்தில் நான் நடித்து படத்தில் அந்தக் காட்சி இடம் பெறாமல் போனதைப் பற்றி இப்படி... இப்படி
வெங்கட்சாமிநாதனிடம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரனை அவர் கடுமையாக தாக்குவது பற்றி கேட்டேன். க.நா.சுவும், சந்தரராமஸ்வாமியும் நகுலனும் கூட அசோகமித்ரன் பற்றி உயர்வாக எழுதியபோது வெ.சா.வும் பிரமிளும் கடுமையாக அவரை விமர்சித்தது ஏன் என்று கேட்டேன்.
நூலகத்தில் மாலை அமர்வு, கடுங்குளிர். தளையசிங்கத்தின் பேர் ஞான விடுதலை முழுச் சமூகத்திற்கும் சாத்தியமா?
வெ.சா. அப்போது கூறுகிறார். இது சாத்தியப்படாத விஷயம். இன்டிவிஜுவல் சால்வேஷன் சாத்தியம் பரவச விடுதலை முழுச் சமூகத்திற்கு எப்படி ஏற்படும். அப்போது ஸ்தாபனம் ஆகிவிடும். ஸ்தாபனம் என்னும்போது கரப்ட் ஆகிவிடும்.
வெ.சா.வின் இந்தக் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடு. இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்தில் பலமுறை குறிப்பிடுகிற விஷயம்.
வினோபா ஆசிரமத்திற்குப் போய் அங்கே நடந்த அக்கிரமங்களைக்காண சகியாமல் மிரண்டு போய் திரும்பி ஒடிவந்த தன் நண்பர் ஒருவரைப் பற்றி கி.ராஜ நாராயணன் ஒரு முறை என்னிடம் சொன்னதைப் பற்றிக் கூறினேன்.
அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக, எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்க வேண்டும் என்கிறார் தளையசிங்கம்.
அரசியல்வாதிக்கு எதிர் மறை அம்சம் இலக்கியவாதி என்று எனக்குத் தோன்றுகிறது. அதோடு எழுத்தாளர்களுந்தான் எந்த அளவுக்கு நம்பகமானவர்கள்? 1968ம் ஆண்டு நோபல் பரிசு வாங்கும்போது ஜப்பானிய எழுத்தாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை கண்டித்து உரையாற்றிய யசுநாரி கவபட்டா 1972ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று நான் கேட்டேன்.
இந்த இரண்டு அமர்வுகளிலும் நாள் புரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம். ஜெயமோகன் நிறைய பேசுவார். வேதசகாய குமாரும் பேசுவார். அவ்வப்போது ஜெயமோகன் 'நீங்க என்ன சொல்றீங்க'என்று யாரையாவது கேட்பார். அவர் ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ, ஒரு கருத்து அபிப்ராயம் சொன்னதும் தொடர்ந்து ஜெயமோகன் நிறைய பேசுவார். தொடர்ந்து வேத சகாய குமார் பேசுவார். நான் எப்போதும் ஜெயமோகன் கேட்காமலே தான் பேசினேன்.
இரண்டாவது அமர்வு முடியும் போது தொழுகை கதை பற்றி வெ.சா. அருமையான ஒரு கமெண்ட் அடித்தார். ’ஒரு சின்ன லேடி சேட்டர்லீஸ் லவர்’.
நான் அதை உடனே ரசித்து ஆமோதித்தேன்.
கூட்டம் முடிந்த பிறகும் ஜெயமோகன் பேசிக் கொண்டேயிருந்தார்.
பொதுவாகவே ஜெயமோகன் தூங்குகிற நேரந்தவிர மற்ற நேரங்களில் பேசிக் கொண்டேயிருக்கிறார். சாப்பிடும்போது கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
எப்படியோ சாப்பிட்டும் விடுகிறார்.
தூங்குவதற்கு மாத்திரை வேண்டுமா? என்று கேட்டார். எனக்குத் தேவையில்லை என்று சொல்லி விட்டேன்.
ஜெயமோகன் 1986 ல் மனப்பிளவு நிலை பாதிப்புக்குள்ளாகி இரண்டரை வருட காலத்தில் இரண்டாகப் பகுத்துக் கொண்ட மன ஒத்திசைவும் சிதைந்த போது உச்சக்கட்டத்தில் மூன்று மாதம் மன நல சிகிச்சை பெற்றுக் கொண்டவர். சுந்தர ராமசாமிதான் 'எழுதுங்க எழுத்து தான் மருந்து'. "It will cure you"என்று உற்சாக மூட்டி நெறிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாள் மே 5ந் தேதி காலை 6 மணிக்கு அறைக்கு வெளியே உற்சாகமான ஜெயமோகனின் பேச்சு சத்தம். எல்லோரும் வாக் போகிறார்கள். நான் எழுந்து காலைக் கடன் முடித்து குளித்து அறையைவிட்டு வெளியே வருகிறேன். தேவகாந்தனுடன் டைனிங்-கம்-கிச்சன் கட்டிடத்திற்கு செல்லும்போது வெ.சா. குளித்துவிட்டு அவரும் சேர்ந்துகொள்கிறார். கறுப்பு தேநீர் அருந்திவிட்டு எனக்கு பாட்டிலில் நீர் எடுத்துக்கொண்டு வரும்போது வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் பாட்டிலில் நீர் எடுத்து அவர் அறையில் வைக்கிறேன்.
வேத சகாயகுமார் பேசுகிறார். ராமஸ்வாமி (சு.ரா.) இவருக்கு ரொம்ப நெருக்கமாயிருந்தவர். தன்னுடைய படுக்கையில் இவரைப் படுக்கச் சொல்லிவிட்டு அவர் தரையில் படுத்துவிடுவார்.
தொடர்ந்து சு.ரா.வைப் பற்றியும் அவருடைய மகன் கண்ணனைப் பற்றியும் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத படைப்புகளை தொகுத்து காலச்சுவடு பிரசுரம் செய்தது பற்றி கடுமையான அதிர்ச்சியான தகவல் பல லட்சம் பணம் ( 8 லட்சமாம்) கை மாறியது. தமிழவன் தான் மீடியேட்டர். (இன்டர்மீடியட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) தமிழவனே இதைப் பற்றி இவாரிடம் சொன்னார்.
புதுமைப்பித்தனின் 'தமிழைப் பற்றி‘ என்ற முக்கியமான கட்டுரையை சகாயகுமார் தான் கொடுத்தார். கண்ணனை இந்த பல லட்சம் பிரச்னை குறித்து வேதசகாயகுமார் வேறு பலமாதிரி விசாரிக்கிறார். கண்ணன் பிடிகொடுக்கவே யில்லை. ஆனால் யாரிடமோ கண்ணன் இவர் ஏதோ ஒரு லட்சம் ரூபாய் பணம் எதிர்பார்ப்பதாக அவதூறு பேசினார்.
சொல்புதிது ஜெயமோகன் சிரமப்பட்டு நடத்துகிறார். கையைக் கடித்தால் நிறுத்திவிடும்படி இவரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சொல்புதிதுக்கு ஆர்.எஸ்.எஸ் பணம் வருவதாக வதந்தி.
சு.ரா விடமும் கண்ணனிடமும் உள்ள நம்பிக்கையில் தான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்ததைப் பற்றி ஜெயமோகன் சொல்லியிருந்திருக்கிறார். இப்போது 'அந்த விஷயம்'பற்றி இப்படிப் பிரச்சாரம் செய்வது நியாயமா? கண்ணன் பி.ஜே.பி. ஆதரவாளராக இருந்ததில்லையா? இப்படி..... இப்படி .....
நான் 'ஒரு இலக்கியவாதி ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்க முடியுமோ?'என்கிறேன். மார்க்ஸீயவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லையா? என்று வெ.சா. கேட்கிறார்.
ஜெயமோகன் அன் கோ வாக் போய்விட்டு திரும்பி வருகிறார்கள். என்னிடம் 'இப்போதும் சினிமா ஆசை இருக்கிறதா? என்று முகம் கழுவிக் கொண்டே ஜெயமோகன் கேட்கிறார். ’ஃப்ரேமுக்குள் நடிகனாக வர வேண்டும். ஒரு கலைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தாகம் ரொம்ப உண்டு’ என்று பதில் சொல்கிறேன்.
ஜெயமோகன் இன்றும் குளிக்கவில்லை.
யுவன் இரண்டாம் நாள்தான் வருகிறார். சந்திக்கிறேன், கைகுலுக்கல் 'லொயோலா காலேஜா''இல்லை. நான் R.P. ராஜநாயஹம் திருச்சி'யுவனும் நானும் மதுரை அமெரிக்கன் காலேஜ்.
நான் பி.ஏ. இங்கிலிஷ் லிட்ரேச்சர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் டாக்டர் ஃபாஸ்டஸ்.
தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும்.
ஹிந்தி நடிகை தேவிகாராணியை கதாபாத்திரமாகக் கொண்ட 'அழியாதமலர்'பற்றி ஜெயமோகனிடம் பேசுகிறேன். 'சவுக்கு'கதை அசோகமித்திரன் பாணி கதை. (அசோகமித்திரனின் சிறுகதைகளில் வரும் பால்ய நண்பர்கள் முனீர், நரசிம்மன் ஆகியோரை சவுக்கு 'சோட்டேலால்'நினைவு படுத்துகிறான்.) ஆமாம் என்று ஜெயமோகன் ஒத்துக் கொள்கிறார்.
சட்டென்று நான் தளையசிங்கம் கருத்தரங்கம் பற்றி 'உங்கள் கட்டுரை கனமாக இருக்கிறது என்றாலும் எனக்கு வெ.சா. சொல்வதில்தான் உடன்பாடு'என்கிறேன். ஓரிரண்டு விநாடி நிதானித்து ஜெயமோகன் 'அதுசரி. இது உங்கள் அபிப்ராயம்'என்கிறார் சிறிது சலனத்துடன்.
மூன்றாவது அமர்வு.
வேதசகாயகுமார் முதலில் தன் கட்டுரையை வாசிக்காமல் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் கட்டுரையை வாசித்திருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கிறார். வேண்டாம் என்று மீண்டும் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார். விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல ஆகிவிட்டது.
யுவன் கொஞ்ச நேரத்தில் மோகனரங்கனின் சட்டை கைப் பகுதியை பின்னுக்கு இழுத்து முன்னுக்குத்தள்ளி விளையாட ஆரம்பித்துவிடுகிறார். நிர்மால்யாவிடம் 'டீ வருமா'என்று கேட்கிறார். நிர்மால்யா டீ ஏற்பாடு செய்கிறார்.
டீ குடித்தவுடன் யுவன் சிகரெட் பிடிக்க வெளியே செல்கிறார். 'குடிக்க நீர் வேண்டும்'என்கிறார்.
நீர் வந்ததும் எழுந்து போய் குடிக்கிறார்.
திடீரென்று ஜெயமோகன்தான் துப்பறிந்து சாரு நிவேதிதாவின் ஜாதியைக் கண்டுபிடித்ததைப் பற்றி கூறினார். சாரு ஒரு முறை 'தான் மலம் அள்ளுகிற ஜாதி'என்று எழுதியபோது ஜெயமோகன் சாருவின் மேலதிகாரியிடம் அவர் ஜாதிபற்றிய சர்ட்டிபிகேட் நகலைக் கேட்டுப் பெற்றுவிட்டார். சாருநிவேதிதா தலித் அல்ல, செங்குந்த முதலியார் ஜாதி.
பிறகு ஜெயமோகன் கோவிலுக்குப் போன கோவை ஞானிக்கு தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறார். நாஞ்சில் நாடன் 'தான் தாலிகட்டிய மனைவி தீர்க்க சுமங்கலியாக வாழ, குறிப்பிட்ட ஒரு கோவிலில் மீண்டும் தாலிகட்டினால் நல்லது என்று நம்பும்போது ஞானி தன் மனைவியைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மனைவியின் நம்பிக்கையை கெளரவித்து கோவிலுக்குப் போனதில் என்ன தவறு என்கிறார். ஜெயமோகன் மீண்டும் ஞானி செய்தகாரியம் எனக்கு முக்கியம்'என்று கோவிலுக்குப் போனதை ஆட்சேபிக்கிறார்.
யுவன் உடனே 'ஞானி கோவிலுக்குப் போனதில் தவறில்லை. நான் கூட வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுக்கிறேன். அப்போது பூணூல் போடுகிறேன்'என்கிறார்.
இந்த இடத்தில் வேதசகாயகுமார் ஒரு செய்தி சொல்கிறார். அ. மார்க்ஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ நாடார்கள் கூடிப் பேசுவதைப் பற்றி தற்செயலாக 'ஒரு கிறிஸ்தவ நாடார் பேராசிரியர்'சகாயகுமாரிடம் சொல்லியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பது தெரிந்த விஷயம்.
தளையசிங்கத்தின் கதைகள் ரொம்ப சிறப்பானவையாக பாதிக்கக் கூடியவையாக தன்னால் சொல்ல முடியவில்லை என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார்.
'தொழுகை'கதையில் செல்லம்மாள் மேல் கோபம் வருவதில்லை'என்று வேதசகாயகுமார் எழுதியிருப்பதைப் பற்றி நான் கேட்கிறேன். தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும் அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.
நான் கேட்கிறேன் 'வாசிப்பவனுக்கு ஏன் கோபம் வராது?'
.
'எனக்கு என்று இல்லை. வாசிக்கிற எல்லோருக்கும் கோபம் வருவதில்லை என்றுதான் சொல்கிறேன்'என்று மறுக்கிறார் வேதசகாயகுமார்.
'அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள் மீது கோபம் வராது என்று சொல்ல முடியுமா'என்று நான் கேட்டவுடன் வேதசகாயகுமாரின் முகம் இறுகுகிறது. ('எங்கிட்டேயே கேள்வி கேட்கிறாயா, நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையை பற்றி உனக்குத் தெரியாது'என்று அர்த்தம்)
உடன் ஜெயமோகனின் முகமும் இறுகுகிறது('எங்களுடைய அந்தஸ்தென்ன . . . யோக்தை என்ன ..... 'என்று அர்த்தம்).
நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
தத்தனோடு டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை'பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.
போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறான்.
முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா'பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா'பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்'என்று கவிதை எழுதியவன்.
குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....'என்று கேட்கிறான்.
தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க'
கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது. 'தாசு இது கல்யாணி இல்லராசு. கல்யாண சுந்தரம்'என்கிறான் குருவி மண்டையன்.
இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்'என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா'என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது.
தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். வாயரிசம் அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்'என்று சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்'என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.
இதைச் சொல்லிக்கொண்டே வரும்போது இடையிடையே வேதசகாயகுமார் 'என்ன சொல்ல வர்றீங்க', இதுக்கும் தொழுகை கதைக்கும் என்ன சம்பந்தம், 'விஷயத்தை மட்டும் சொல்லுங்க'என்று குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே வந்தார்.
சொல்லி முடித்ததும் வினயசைத்னயா "This is mere a Gossip"என்றார்.
இவர் இரண்டாவது அமர்வில் வெ.சா. சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் வெ.சா ஜாதி பற்றி தவறான எண்ணத்தோடு பேசியதாக வீணான சர்ச்சை செய்தவர். முன்னதாக 'You do Dhabas'என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி ரொம்ப நீளமாக ஒரு தத்துவக் கதையை சொன்னவர்.
(எனக்கு திலீப்குமாரின் திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை கதை ஞாபகத்துக்கு வந்தது. அது நல்ல கதை)
நாராயண குரு குல சுவாமி வினய சைதன்யா 'காசிப்'என்று சொன்னவுடனேயே ஜெயமோகன் என்னைப் பார்த்து 'நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். இதுவரை நடந்த கருத்தரங்கத்தையே நீங்க புரிஞ்சிக்கலை. நீங்க ஊருக்குக் கிளம்பலாம்'என்றார். 'பத்து பேர் உங்க பேச்சைக் கேட்பதால் நீங்க இஷ்டத்துக்குப் பேசுறீங்க, இப்ப நீங்க பேசியதற்கு என்ன பர்ப்பஸ் இருக்கு'என்று கேட்டார்.
'பர்ப்பஸ் இருக்கு என்றேன்
‘ஒரு பர்ப்பஸும் தேவையில்லை. நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள்'என்றார்.
நான் அப்போது என்னை பரதேசியாக உணர்ந்தேன். தி ஜானகி ராமனின் பரதேசி வந்தான் கதை. கடைந்த அமுதத்தைக் குடிக்க வந்த ராகுபோல பந்தியில் அமர்ந்துவிட்ட பரதேசி. தரதரவென்று பாதிபந்தியில் இழுத்துத் தள்ளப்பட்டு தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்த பரதேசி.
நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். யாரும் எதுவும் பேசவில்லை.
எதுவுமே நடக்காதது போல, கருத்தரங்கம் தொடரும்படியாக ஜெயமோகன் பேச ஆரம்பித்துவிட்டார். எல்லோரும் அதை கவனிப்பதான பாவனை.
இது துரியோதன சபை. துரியோதனனும் சகுனியுமாக இயக்கும் சபை. எனக்கு ஆதரவுதர யாரும் கிடையாது. பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா எல்லோரும் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள் பிற இளைஞர்கள் கூட இளம்படைப்பாளிகள் ஜெயமோகனைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள். நான் ஒரு சாதாரண வாசகன். முப்பதாண்டு காலமாக வாசித்துக் கொண்டே இருக்கும் அற்பம். Just a nameless face or a faceless name.
எழுந்தேன் அறைக்கு வந்தேன். பேக் செய்தேன். டைனிங் அறைக்கு வந்தேன். சுவாமி வினய சைதன்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
வினயமாக 'That was not a Gossip I agree. But you have taken a long time''என்றார். நான் 'If you say 'but' I will say 'yet'. That is discussion that is seminar'என்றேன்.
ஜெயமோகன் சொன்னதற்காக நான் ஊருக்குப் போகக்கூடாது என்று வினயசைதன்யா பிடிவாதம் பிடித்தார். நான் ஏற்க மறுத்துவிட்டேன்.
கருத்தரங்கத்தில் நான் பேசியதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடத்திலிருந்து 11 நிமிடத்திற்குள் தான் இருக்கும். மூன்று மணி நேர கருத்தரங்கத்தில் 11 அல்லது 12 நிமிடம் கூட பேசியிருந்தாலும் லாங்டைம் என்று எப்படி சொல்ல முடியம்.
வினயசைதன்யா 'I will fuck the bloody ezhavas. Only to avoid ezhavas we have come all the way from Kerala to Ooty. bastards'என்றார். நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்யபதி ஆகிய மூவரும் ஈழவர்கள் எனக்கு நாக்கிலே சனி. கருத்தரங்க அமர்வில் பேசியது போதாதென்று இவரிடம் நான் தமிழ் ஈழவ இனம் இல்லத்துப் பிள்ளைமார் என்று சொல்லித் தொலைத்துவிட்டேன்.
வினயசைதன்யா நான் சாப்பிட்டுதான் போக வேண்டும் என்று ரொம்ப பிடிவாதம் பிடித்தார். நான் சாப்பிட மறுத்தால் இவர் என்ன செய்வார் என்று சொல்லமுடியாது. சாப்பிடுவதாகப் பேர் பண்ணிவிட்டு எழும்போது கருத்தரங்கம் முடித்து எல்லோரும் சாப்பிட வந்துவிட்டார்கள்.
யாருடைய அட்ரஸையம் நான் வாங்கிகொள்ள முடியவில்லை. தேவதேவன் இ நாஞ்சில்நாடன், யுவன், வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன் ஆகியோரிடம் விடைபெற்றேன் யுவன் 'ஏன்'என்றார். நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆசிபெறுவதற்காக வெங்கட் சாமிநாதன் காலைத் தொட்டபோது அவர் 'நோ நோ'என்றார். சிரித்துக்கொண்டே வெளியேறினேன். இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்.
தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும்.
காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்?
விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம் படி ஆகலாம்.
செல்லமாள் மீது கோபம் வராது என்றால் எப்படி?
முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர் கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான்.
பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்லி கூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.
சும்மா சாருநிவேதிதாவை மிரட்டுவதற்காக 'சாரு தாண்ட வேண்டிய புள்ளி தொழுகைதான் ஆனால் தளையசிங்கம் அவசரமாக அடித்துக்கொல்லப்பட்டார்'என்று அவர் மிகையாகக் கூறிவிட்டபின் நான் தொழுகையை நிர்வாணமாக்கினால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியம். It’s a tale told by an idiot full of sound and fury and signifying nothing.
ஊட்டியை விட்டுக் கிளம்பும்போது மதியம் 2மணி திருச்சி வந்து வீடு சேரும்போது இரவு சரியாக 12 மணி. ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரி பண்ணியிருக்கலாம். There is always trial and error.
சுந்தரராமசாமியின் 'அழைப்பு'கதையில் ஒருவரி 'நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'.
……………………………………
https://rprajanayahem.blogspot.com/2009/08/blog-post.html

தளையசிங்கம் கருத்தரங்கத்தை அடுத்து ராஜநாயஹத்தின் மீதான பின் அரசியல்

$
0
0


சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayahem, I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks. I am being inflicted with peril and mental Agony For the past fifty years by this type of irresponsible remarks.
இந்திரா பார்த்தசாரதி :: I am not surprised that you were treated badly in Ooty. You are too honest to get Along with those who succeed in Life.
D.திலீப் குமார் : உங்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் , உங்கள் கள்ளமற்ற சிரிப்புத் தான் எனக்கு முதலில் நினைவு வரும் !
மிகவும் கஷ்டமாக இருக்கிறது . உங்களை அவர்கள் இப்படி நடத்தியிருக்கக்கூடாது . ஆனால் , என்ன செய்வது . படித்தவர்களிடம் தான் மிக மோசமான சிறுமைகளும் உள்ளன !
சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்'என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூரித்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாகத் துப்பறிந்து எழுதியது ஜெயமோகக் கோமாளியின் உச்சக்கட்ட கொனஸ்டை.
சொல் புதிது 10வது இதழ் தலையங்கத்துக்கு எதிர்வினையாக மனுஷ்ய புத்திரன் 'ராஜநாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள். வெகு ஜன ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற்றி எனக்குத் தெரியும். என்னுடையப் பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனேயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம்'என்று எழுதி ஜெயமோகனின் அரசியல் பற்றிக் கட்டுரை முடிவில் 'இவரை ஜெயலலிதாவோடு மட்டுமே ஒப்பிட முடியும்'என்றும் 'ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒருவிதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும்'என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 'ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை'என்று கடுமையாக மனுஷ்ய புத்திரன் சாடியிருந்தார்.
திருப்பூரில் மத்திய அரிமா சங்கத்தில் 'நெடுங்குருதி'நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு 11-04-2004 அன்று நான் தலைமை தாங்கி நாவல் பற்றிப் பேசினேன். எஸ். ராமகிருஷ்ணன் முன்னதாகத் திருச்சியில் என்னுடைய 'ஊட்டி தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை'கட்டுரை பற்றி 'உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டிங்க இந்த ஒரு கட்டுரையில் - தளைய சிங்கத்தை நினைத்தால் இனி யாரும் ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது. நீங்கப் பாட்டுக்கு உண்மையெல்லாம் எழுதிட்டீங்க அவன் (ஜெயமோகன்) இன்னமும் உங்களைக் கண்டபடி திட்டி தாறுமாறாக இலங்கை பத்திரிகைகளில் கூடப் பேட்டி தருகிறான்'என்று என்னிடம் சொன்னார்.
தொடர்ந்து 11-7-2004 அன்று திருப்பூரில் சாகித்திய அகாதெமி சார்பில் 'கதை அனுபவம்'என்பதாக நடந்தவைபவத்தில் நாஞ்சில் நாடன் நிகழ்ச்சி முடிந்தபின் வலிய வந்து எனக்கு வணக்கம் சொன்னார். குற்றமுள்ள நெஞ்சு. நெஞ்சுவலிக்காரர் என்பதால் நான் அமரிக்கையாக அவருடைய அவதூறுகள் பற்றிக் கேட்டேன். யார் மீதும் சேறடிக்காத எழுத்துத் தன்னுடையது என்று பிரச்சாரம் செய்பவராயிற்றே என்று ஒரு நான்கைந்து கேள்விகள் கேட்டேன். நாஞ்சில் நாடன் 'என்னை மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்'என்று கெஞ்சினார்.
'திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான் நான் தர மறுத்துவிட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. நான் ஒண்ணுக்கு போகனும்'என்று தவித்தவிக்க ஆரம்பித்தார். காலச்சுவடில் கண்ணன் இவருடைய கட்டுரையை எடிட் செய்ததற்கும் கோபப்பட்டார். இவர் இருபத்தி நாலுபேருக்கு ஓட்டு போட்ட விஷயத்தை எடிட் செய்தால் இவருக்குக் கோபம் வராதா என்ன? தொடர்ந்து அவர் செய்த பெரிய சேவை பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். நாச்சார் மட விவகாரம் போல இன்றும் ஆறு வெர்சன் ஜெயமோகன் குழாமிடம் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடக் கூடாது என்று நாஞ்சில் நாடன் தான் தடுத்தாட் கொண்டார். அப்படி மட்டும் தப்பித்தவறி இவர் செய்யலைன்னு வச்சுக்குங்க இவர் தடுத்தாட் கொள்ளலைன்னு வச்சுக்குங்கக்க... எங்கப்பா... அடேங்கப்பா.ஒரு சீனியர் எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை ஒரு ஜூனியர் திருத்தி எழுதிவிட்டான் ஒப்புதல் கடிதமும் கேட்டான் என்று சொல்வதைப் பற்றி இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டுகிறேன். விலங்கும் நாணிக் கண் புதைக்கும் இந்நிகழ்வைக் கேளுங்கள் நண்பர்களே! நாஞ்சில் நாடன் இதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? பகிரங்கப் படுத்தியிருந்தால் யார் மீதும் சேறடிக்காத எழுத்து என்று நிரூபித்திருக்கலாம். பதிலாக என்ன செய்கிறார். ஜெயமோகனோடு ஆறுமாதம் பேசாமலிருக்கிறார். பின்னர் ஜெயமோகன் நூல்கள் வெளியிட்டு விழாவில் ''ஜெயமோகன் என்னய்யா கொலையா செய்துவிட்டார். கூட்டம் சேர்ந்து கிட்டு தாக்குறீங்க"என்று கொக்கரக்கோ கூவல் விடுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நெஞ்சில் நஞ்சு!
இப்படி இன்னொருவர் எழுதியதைத் திருத்தி எழுதிவிட்டு ஜெயமோகன் 'என் நேர்மை ஒருபோதும் ஜயத்துக் குள்ளானது இல்லை'என்று துண்டறிக்கையில் பீற்றிக் கொள்ளுவதை என்னவென்று சொல்வது? இதுதான் அறிவார்ந்த கயமையா? படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஜயோவென்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறான்.எழுத்தாளனையும் சேர்த்துத் தான்.
ஊட்டி கருத்தரங்கத்தில் நடந்தவைகளை அப்படியே சத்தியமாக நான் எழுதிய பின் இவர்களால் என்ன பதில் தரமுடியும் என்று தான் நினைத்தேன். ஆனால் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய செயல்முறை விளக்கம். எல்லோரிடமும் தான் குறியிருக்கிறது. அதை எப்போது கையிலெடுத்துக் கொஞ்சுவது கிடையாதா'என்று புளுகி அவதூறு செய்தபோது நான் உடைந்து போனேன். அங்கே அந்தக் கூட்டத்தில் எனக்கு 'Alienation'ஏற்பட்டுச் சொல்லேர் உழவர்களின் பகைக்கு நான் ஆளானதோடு இப்படி ஒரு கடுமையான அவதூற்றையும் தாங்கும்படியானதற்கு நாஞ்சில் 'நாடன் நானில்லே ஜெயமோகன் தான் இப்படி இஷ்டத்துக்கு எழுதினான்'என்று சாவகாசமாகச் சொல்வதைப் பாருங்கள். இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? முட்டாள்தாசாக நான் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Desease என்ற வார்த்தை தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு'என்கிறான். வட்டார வழக்கில் ஒரு பாத்திரம் பேசுவதற்கு எழுதுபவன் பொறுப்பா? பெண்ணியத்திற்கு எதிராக ராஜநாயஹம் பேசியதாக எழுதியதாகக் குற்றச்சாட்டு.
முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பாதித்திருக்கிறது - 'வடக்குமுகம்'நாடகத்திலும் 'காடன் விளி'சிறுகதையிலும் மிருகப் புணர்ச்சியைக் கொண்டு வருகிறார். 'வடக்கு முகம்'நாடகத்தில் ஒரு குதிரை 'என் தசைகளைக் கண்டு காமம் கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை'என்று சொல்கிறது. இது தான் பெண்ணியத்திற்கு எதிரான வார்த்தை. பீஷ்மரிடம் அம்பைக் காதலுடன் 'குதிரைகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது தனது முதுமையிலும் சளைப்பதில்லை'என்று கூறி பீஷ்மருக்கு குதிரை முகமூடி அணிவித்து அணைத்துக் கொள்கிற காட்சி, 'காடன் விளி கதையில் வரும் எருமைப் புணர்ச்சி' - ஜெயமோகனை முட்டாள் தாஸின் கழுதைப் புணர்ச்சி ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகள்.
'உங்களைப் பார்த்தால் என் சங்கரன்கோவில் நண்பர் நினைவுக்கு வருகிறார்'என்று அரட்டையின் போது என்னிடம் நெகிழ்ந்து போய் நாஞ்சில் நாடனின் வாய் சொல்கிறது. அதே அரட்டை பற்றித் தாறுமாறாய்க் கை எழுதுகிறது. அது எப்படி?
காலச்சுவடில் சுருக்கப்பட்டு என் கட்டுரை வெளியான போது அ. மார்க்ஸ் அவர்களிடமிருந்து இரண்டு கோபமான போன் மிரட்டல் வந்தது மார்க்ஸ் கோபப்பட வேண்டியது வேதசகாயக்குமாரிடம் தான். வேதசகாயக் குமார் அப்படி அ.மார்க்ஸ் பற்றிக் கூறியபோது அங்கே இருபது பேர் இருந்தார்கள். அந்த இருபது பேரும் இதை மறுக்கவே முடியாது. வேதச் சகாயகுமார் என்பவர் எப்போதுமே சில பொய்களைத் திரும்பத் திரும்ப மற்றவர்களிடம் பேசி, கொஞ்ச நாளில், தானே கூட அவற்றை உண்மையென்றே நம்பி விடும் விசித்திரத் தன்மை கொண்டவர் என்பது அவருடன் பழகியவர்கள் அறிந்து சொல்லும் உண்மை. He cannot explain a Prejudice without Getting Mad.
ஊட்டியில் என்னிடம் 'சிநேகாவின் உதட்டைக் கடிச்ச நடிகர் யார் சார்? என்று கேட்ட ஒரு செக்கு மாட்டு விமர்சகனும் சமீபத்தில் என்னிடம் 'காலச்சுவட்'டில் ''ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை ''பிரசுரமாகாமல் 'கனவு'பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது என்று அபிப்ராயப்பட்டான். வெளவால் போல மிருகங்களுடனும் பறவைகளுடனும் சொந்தம் கொண்டாடும் இந்த ஆள் 'வாசகனாக இருப்பதே துரதிருஷ்டம்'என்ற மேட்டிமை குணம் கொண்டவன். நாஞ்சில் நாடன் கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதி, பின் ஒப்புதல் கடிதம் கேட்ட விஷயமும் தனக்குத் தெரியும் என்று என்னிடம் சொன்னான்.
சாப்பிடும் இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டே சப்பாத்தி மாவு பிசையும் இயல்புடைய வினோத மிருகம் வினயசைதன்யா "If you say you are a Tamil Ezhava I will Fuck you. I will Fuck the bloody Ezhavas'என்று என்னிடம் கூப்பாடு போட்ட போது அங்கே சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரமவாசி 'அருள்'என்பவரும் மற்றொரு ஆசிரமவாதியும் மட்டுமே இருந்தனர். தர்ம சங்கடத்துடன் நெளிந்தனர். இந்த விஷயத்தை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் எப்படி மறுத்து எழுத முடிந்தது என்பதும் வினோதம் தான்.
'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்'என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல.'என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.'என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
'நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் 'காதைக் பிளக்கும் மெளனம்'நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று என்று வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.
யமுனா ராஜேந்திரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் 'ஜெயமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில் தான் எழுதி வந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சனையில் ராஜநாயஹம் குறித்து நாஞ்சில் நாடன் பெயரில் ஜெயமோ கட்டுரையை எழுதிப் பிரசூரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு. அந்தக் கட்டுரையைத் தான் எழுதவில்லை எனப்பொது மேடையில் நாஞ்சில் நாடன் ஒப்புக் கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெயமோ தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசூரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. '
இதற்கு ஜெயமோகனின் (அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்) வாய் திறந்து விட்டது. எப்படி?
'அதே கட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சில் நாடனால் அனுப்பப்பட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் (பொருள் மாற்றம் இல்லாமல்) திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன் வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டும் உத்தியாக. அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில் நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறைசர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில் நாடன் ஒதுங்கிக்கொண்டார்.'
"யப்பா பைரவா! நீ யாரு பெத்தபுள்ளையோ உன் உடம்பு பூராவுமே பொய் தானா? சகிக்கலப்பா 'கத்தை கத்தையா ரூபாய் நோட்டு திருடமாட்டேன் சில்லறைக் காசுத் திருடன்தான் நான்'என்பதைக் கூட என்ன நாசுக்காக ஒப்புக்கொள்ள முடிகிறது உன்னால் 'நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்'என்று திண்ணை ஆசிரியர் குழு கட்டை பஞ்சாயத்து செய்தபோது கூட நீ அதை மறுக்கவில்லை உன்வாயிலே கொழுக்கட்டை. இப்போது சில்லறைத் திருட்டை மறுக்கவுமில்லை என்று அண்டப்புளுகை அள்ளி விடுகிறாயே Here is the Rub'
2002ல் நடந்து முடிந்த போன விஷயத்தை R.P. ராஜநாயஹம் இப்போது கிளற வேண்டுமா'என்று கேட்கிறவர்கள் 2005 ஜனவரியில் ஜெயமோகன் இந்த விஷயம் பற்றி பேசுவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். கனடாவிலிருந்து ஒரு இணைய இதழ் அதில் லண்டனிலிருக்கிற யமுனா ராஜேந்திரன் பிப்ரவரி 2005ல் "நாஞ்சில் நாடன் இதனைச் சில்லறை விவகாரம் எனக் கருதுவாரானால் அவர் கனவான் என்றோ அல்லது வேலைப் பளு அதிகம் உள்ளவரென்றோ ஜெயமோ கருதலாம். பிறர் அப்படிக் கருத அவசியமில்லை. நாஞ்சில் நாடன் பேசாது தவிக்கிறார் என்று கருதலாம். ராஜநாயஹம் இன்னும் பேசவிருக்கிறார் என்றுதான் விஷயமறிந்த வாசகன் கருதுவான். பிரச்சினையில் ராஜநாயஹத்தின் தரப்பு உண்மைகள் சிற்றிதழொன்றில் விரிவான கட்டுரையாக வரவிருப்பதாக அறிகிறேன். ஜெயமோ காத்திருப்பது நல்லது"என்று 'விலங்கும் நாணிக் கண்புதைக்கும்'கட்டுரை 'பன்முகம் இதழில் வெளிவர இருப்பதை முன்னறிவிப்பு செய்வது விஷய கனத்தை புரிந்து கொண்டிருப்பதால் தான்.
'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை'கட்டுரை முன் வைத்த முக்கிய பிரச்சினை தளையசிங்கம் மரணம் பற்றிய சர்ச்சை 'தளைய சிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்'என்ற ஜெயமோகனின் பொய் இதன் மூலம் அம்பலமானது. திண்ணையில் இந்த பிரச்னைக்கு மு.பொன்னம்பலம் முத்தாய்ப்பாக எழுதிய குறிப்பில் சுந்தர ராமசாமியின் 'தளைய சிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்'கட்டுரையில் தகவல் பிழை எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம் ஜெயமோகன் ஊட்டி கருத்தரங்கம் நடைபெறுவதற்கு முன்னதாக எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிவிட்டது
நான் சத்தியத்தைச் சார்ந்து நிற்பதால் மேற்சொன்ன விஷயங்களும் காலச்சுவடிலும் திண்ணையிலும் பகுதி பகுதியாக வெளியான விஷயங்களும் 'நீதியான செயல்'தான் என்பதிலும் இதன் வெளியீட்டு நேர்த்தியிலும் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
THE BEAUTY OF A MORAL ACT DEPENDS ON THE BEAUTY OF ITS EXPRESSION.
- JEAN GENET.
....................................................................................
தூங்காம சாப்பிடாம "பீ"பேலாம எழுதின புத்தகம்
ஒரு அனானி 'அவங்க தான் ஒன்னை கண்டுக்கவே இல்லையே. ஏன் அவங்களை பத்தி எழுதுறே'ன்னு மொட்டை ஈமெயில் போடுறான்.
குலைச்சிகிட்டே தானேடா இருக்காங்கே.
சுந்தர ராமசாமி செத்தப்ப ஒருத்தன் தூங்காம , "பீ "பேலாம, சாப்பிடாம ஒரு புத்தகம் எழுதினான்.அதிலே 154 ம்பக்கத்திலே என்னாலே தான் சுந்தர ராமசாமி கூட பகையே வந்ததுன்னு சொல்லியிருக்கான்.
தூங்காம,பேலாம,சாப்பிடாம எழுதினா விளங்குமா?
தளையசிங்கம் கருத்தரங்கம்னு எழுதாம கவிதை பட்டறைன்னு எழுதி ஆரம்பிச்சி அந்த பாரா பூரா பொய் தான். என்னாலே தான் சுரா கூட இவனுக்கு பகை யாம்.
டே .. இந்த ஜெகம் ப்ராடால தானே சுரா மனம் நொந்து செத்தாரு. அவரை எதுத்து இவன் பண்ண அரசியலும் நம்பிக்கை துரோகமும் கொஞ்சமா ?
இதிலே அவர் செத்ததும் இவன் தூங்கலே பேலலே சாப்பிடலே. எழுதிக்கிட்டே இருந்தானாம்.
இன்னொரு காமெடி- வாழ்க்கையிலே முதல் முதலா 'பீர்'குடிச்சிக்கிட்டு 'பீர்'மட்டும் குடிச்சிகிட்டே எழுதினானாம்!
இவனோட பிரதான ஜால்ரா
காஞ்ச காட்டான் ஊம்ப முனி 'கதாசிரியனை கொலை செய்யனுமா ?'கட்டுரையிலே பேடித்தனமா கடைசியிலே உளறி இருக்கான். இவன் வண்ட வாளத்தை தண்டவாளத்தில ஏத்தியாச்சி. இன்னும் காவிய தலைவி சவுகார் ஜானகி மாதிரி உருக்கமா வேட்டியில புல்லழுக்கு,புடுக்குலெ சொறிசிரங்குன்னுஅழுகிறான்.
இதிலே எந்நேரமும் என்னை திட்டிகிட்டே
இருக்கான்னு தகவல் .

பொன்னகர புனிதை

$
0
0
மதுரை சென்ட்ரல் தியேட்டர் சந்தில் sex workசெய்துகொண்டிருந்த அமரர் பாப்புவின் ஆளுகையில் இருந்தவள் தான் கவரி மிளா. காலத்தின் காற்றில் கம்மாக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுதம்மா. போகுமிடம் சேருமிடம் யார் அறியக்கூடுமம்மா.” சீர்காழியின் உருக்கத்துடன் குருவி மண்டையனின் விம்மல்.
ஆட்டு மூக்கனுக்கு மூக்கு நுனியில் வியர்த்து விட்டது. 
ஓசி ஓலு ஒச்சுக்கும் விஷயம் எட்டி விட்டது.
காராச்சேவு, காராபூந்தி என்று வாங்கிக்கொண்டு
கவரி மிளா வீடு ஏகினர். 
வீடென்று எதைச்சொல்வீரோ, அப்படியான இலக்கணத்திற்கெல்லாம் கட்டுப்படாத வீடென்று சொல்ல வேண்டும்.
ஒரு நாள் தொல்லை ( இவனால் பல தொல்லைகள் விளைந்தன என்பதால் தொல்லை எனவே அறியப்பட்டான். இயற்பெயர் யாரறிவாரோ?) அதிகாலையிலேயே அவள் ’வீடு பேறு’ வேண்டிச் சென்றான்.
பொல, பொலவென்று விடிந்து விட்ட பின்னரே ஆட்டு மூக்கன் போனான். கையில் ரண்டு வட்டமான பேக்கரி பன்.
கவரி மிளா “தொல்ல ரொம்ப தொல்ல பண்றாம்ப்பா. இங்க பாரு ஓத்து ஒழுக விட்டு போயிருக்கறத.”
வீட்டு தரையில் விந்து சிந்தியிருப்பதை காட்டினாள். “கஞ்சி வரும் போது உருவி தொடயில விட்டுட்டேன். வீட்டு தரையிலல்லாம் வடிச்சிட்டு ஓடுறான். ஒரு டீக்கு தான் காசு கொடுத்தான். அதா ’ஆ..’ன்னு அவன் முனகும்போதே உருவி சாமான தொடயில விட்டுட்டேன்.”
இவன் பரவால்லப்பா.. நேத்து குருவிமண்டையன் வந்தான். அடுப்படியில குத்த வச்சி பாத்திரம் கழுவிக்கிட்டிருந்தேன். அப்படியே பின்னால நாய் மாதிரி குண்டியில ஏர்றான். மூச்சி எறச்சிக்கிட்டே எந்திரிச்சான். உடனே கவிதை சொல்றான் எங்கிட்ட.
“ குறியினை குதம் விட்டு எடுக்குங்கால் மொட்டில் காண் பித்தளைப்பூண்”னு அவன் சாமான் மொட்டில ஒட்டியிருந்த என் பீயை எனக்கே காட்டுறான்.
பேசிக்கொண்டே ரெண்டு பன்னையும் ஒன்றொன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் வாயில் இவன் சாமான விட்டு இயங்க ஆரம்பித்தான். அவள் சாப்பிட்டுக்கொண்டே சப்பிக்கொண்டும் கன்னல் மொழி பேசினாள் “ இந்த ஒச்சுக்கிட்ட சொல்லிடு. இங்க என்னண்ட வரவே கூடாதுன்னு. அவன் வாயும் கூட நாத்தமான நாத்தம். நாறித்தொலையுது. கொமட்டுது. எம்புட்டு நேரம் மூச்சி பிடிச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டே நான் கிடக்கறது. நாரவாயன் அடுத்த தடவ காசு தர்றேன்னு தான் எப்பவும் சொல்வான்.”
ஆட்டு மூக்கன் வடித்த விந்தை, விந்தையென சொல்லும் விதமே, தான் மென்று கொண்டிருந்த பன்னோடு அய்யரவின்றி கவரி மிளா மடக் மடக் என்று விழுங்கும்போது தொண்டகுழி ஏறி இறங்கியது.

https://www.youtube.com/watch?v=-KILVvA8rgk

மாற்றமில்லா சாசுவத அரசியல்

$
0
0

”தே.மு.தி.க கட்சிய கூட்டணியில சேர்க்க திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பிஜேபி எல்லா கட்சியுமே போட்டி போடுவாங்க!”
2010ல் நான் சொன்னது.’இங்கே நிறைய ஸ்டீபனோக்கள்’ என்ற பதிவில். கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன். இன்றும் நான் சொன்ன வார்த்தைகள் சாசுவத நிலையில் தான்.
இன்றும் 2019ல் அதை அரசியல் கட்சிகள் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். ’உடல் நலம் விசாரிப்பு மத்தாப்பு’
”தே.மு.தி.க அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மக்கள் செல்வாக்கேயில்லாத மற்றொரு குடும்ப கட்சி.
ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி என்று சொல்லி விட்டு, பின்னால் அவர் அரசியல் கட்சிகளை தவிக்க விட்டு நடத்திய சந்தர்ப்ப வாத கூட்டணி கண்ணாமூச்சி..” - இப்படி இந்த வருட ஜனவரி மாதம் ‘விஜய்காந்த்’ பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
கண்ணாமூச்சி இந்த பாராளுமன்ற கூட்டணி விஷயத்திலும் தொடர்ந்திருக்கிறது.
’துரைமுருகன் தான் தே.மு.தி.க மூக்கை அறுத்து விட்டாரே’ என்ற பீற்றல் கேலிக்குரியது.ச்சீ இந்த பழம் புளிக்கும் முக சுளிப்பு.
ஸ்டாலின் தேமுதிக தலைவர் வீட்டுக்கு போனதை, நல்ல பதில் வரும் என்று திமுக காத்திருந்ததை சுலபமாக புறம் தள்ளும் Selective Amnesia.
அதிமுக பாஜக கூட்டணி கதவு தேமுதிக இன்னும் சாத்தப்படவில்லை. (இங்கே எழுதும்போது பா.ம.க பெயர் விடுபட்டது பிரக்ஞைபூர்வமானது தான்.மறதியல்ல.)
தே.மு.தி.கவுக்கு திரி சங்கு நிலை இப்போதும் கிடையாது.
அதிமுக மன்னார்குடி குடும்பத்தில் இருந்து விடுதலை என்பது சரி. ஜெயலலிதா மரணத்திற்கு முன் நினைத்தே பார்த்திருக்க முடியாத விஷயம் தான். அதற்காக மீதியெல்லாம் சரி என்று ஏற்க முடியுமா?
சட்டியில் இருப்பது தான் அகப்பையில். ஸ்டாலின் கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்.

நண்டு வளையில நானும் தான் இருக்கேன்

$
0
0

நிஜமாலுமே கமல் பாராளுமன்ற தேர்தலில் தனி ஆவர்த்தனம் தானா?
’நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நொளச்சி’ அவர் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தயார் என்ற அர்த்தத்தில் சொன்ன வார்த்தைகள் தேர்தல் சலசலப்பில் கவனம் பெற்றதா?
சறுக்கல்.

’எல்லோரையும் போலத்தான் நானும்’னு தானே இதற்கு அர்த்தம். நம்பகத்தன்மையை இழக்கிறார். இவர் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டவர்!

ரஜினி கிட்ட சப்போர்ட் கேட்பேன் என்கிறார். கட்சி சவலப்பிள்ளை போலத்தான். கமலுக்கே புரிந்து விட்டது. தாங்குவார் இல்லன்னு தவித்து தக்காளி விக்கிறார்.
சித்திரக்குள்ளன் சினேகன் கூடவே இருப்பது வேறு அபஸ்வரம் போல தோற்றம் தருகிறதே.

அரசியலுக்கு வந்து பிரசங்கம் ஆரம்பித்த போது மய்யமாக இவர் ஏதோ பேசியதற்கே முகத்தில் அடித்தார் வைகோ “ Mr.Kamal, mind your words.”
யார்,யாரையோ போய் பார்த்த கமல் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் ஒரு புறம் இருக்கத்தான் செய்யும்.
முன்னயே சாரு ஹாசன் ஆசீர்வாதம் கமல் கட்சி ஆரம்பிக்க நினைப்பது பற்றி இளக்காரமாக.
தமிழகத்த முன்னேற்ற முன்னெடுத்த பழைய முயற்சியெல்லாம் இங்கே எடுபட்டதில்லை.
ஆனா ஒன்னு. இந்த தேர்தல்ல நின்னு தோத்து ஓட்டுக்கணக்கு போட்டு, இவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கோம்னு காட்டி அடுத்த சட்ட சபை தேர்தலில் பெரிய கட்சிகளிடம் பா.ம.க. தே.மு.தி.க. ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் போல சீட்டுக்கு சின்ன பேரம் பேச வசதியுண்டு.
மற்றொரு உதிரிக்கட்சி மக்கள் நீதி மய்யம்? இல்ல.இல்ல. மற்றுமொரு கார்ப்பரேட் நிறுவனம்.
Viewing all 1843 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>