Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

ஜி. நாகராஜன் 'துக்க விசாரணை'

$
0
0

 பாலியல் தொழிலாளி


ஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்.


அவளுக்கு கனோரியா. வயித்து வலி வயித்து வலின்னு துடிச்சா. 

ஒரு தடியன் வந்து 'ஏண்டி எனக்குச் சீக்கா வாங்கி கொடுத்தே'ன்னு கேட்டு, செருப்ப களத்தி அடிச்சிருக்கான். அவன் போகவும் ரயிலடிக்குப் போனவ தான். 

ரயில்ல விழுந்து தற்கொலை. பத்திரிகை செய்தி.


சாவை நேருக்கு நேராக துணிந்து சந்தித்த 

ஜி. நாகராஜனின் கனமான கதை. 

..................


”அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும். எது எப்படியிருப்பினும், ’தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன் படுத்த நியாயமே இல்லை.


வேண்டுமென்றால் தி.ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற சிறுகதையையோ அல்லது யூஜின் ஓநீலின் அன்னா கிருஷ்டி நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்… 

பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன.”

- ஜி. நாகராஜன்.


......................


ஜி. நாகராஜன் குறிப்பிடுகிற யூஜின் ஒநீல் மகள்                                                         ஊனா ஓ நீல் தான்

 "Catcher in the rye நாவல் எழுதிய ஜே.டி.சாலிஞ்சருடைய காதலி.


 ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல்  நூல் விட்டுக்கொண்டிருந்தார் சாலிஞ்சர். 


ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த  நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!


நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>