Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

ந. பிச்சமூர்த்தி பற்றி

$
0
0

 காதுகள் நாவலில் எம். வி. வெங்கட்ராம் எழுதியுள்ள விஷயம் : "பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும் அடுத்த இடம் தான் 

நான் கு. ப. ரா. வுக்கு கொடுப்பேன்" 


வெங்கட்ராம் கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரை. 

கு. ப. ரா எழுத்து மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவர் தான். 


என்றாலும் ந. பிச்சமூர்த்தியை தூக்கிப்பிடிக்கிறார். 

அவருடைய வரிசை 

1. ந. பிச்சமூர்த்தி 

2. புதுமைப்பித்தன் 

3. கு. ப. ராஜகோபாலன். 

கு. ப. ரா. வின் மற்றொரு சிஷ்யர் தி. ஜானகிராமன்.   குமுதத்தில் எழுத்தாளர்களுக்கு பிடித்த சிறுகதை கேட்டு வாங்கிய போது தனக்குப் பிடித்த ந.பிச்சமூர்த்தி 'அடகு'கதையைப் பிரசுரிக்கச் செய்தார். 



புதுமைப்பித்தன் பிரச்சினை பற்றி  நான் 

'மேலும்'இதழில் "நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மையெனக் கொண்டாயோ?"கட்டுரை எழுதி 

பிரசுரமாகியிருந்தது. 


திருச்சியில் ஆல் இண்டியா ரேடியோவில் 

கு. ப. ரா பற்றி என் இலக்கியப் பேருரை  ஒலிபரப்பாகி இருக்கிறது. 


ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்ச மூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் 'நூல் பற்றி கருத்தரங்கம். 

நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய 

இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.


ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்

'ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.

ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' 

என்று ஊளை இட்டான்.


இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம்.


 ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.


நான் ஆரம்பித்தேன் "வெங்கட் சாமிநாதன் சொல்வார் -'நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '


 இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.


க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.


லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி

 "உங்களை கவர்ந்த,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?

லா.ச .ரா பதில் "அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "


நான் சொல்கிறேன் . 'கபோதி' ,'காவல் ''அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு

 ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு "என்றேன்.


Induvidual choice. 


இப்போது முக நூலில் சகோதரி பத்மஜா நாராயணன்  எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு 

வருகிறது. ஏனென்றால் அதில் ந. பிச்சமூர்த்தி பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். 

"வாசிக்கத் தெரிந்த அனைவரும் வாசித்தே

 ஆக வேண்டிய சிறுகதை பிச்ச மூர்த்தியின் 

'ஒரு நாள் '. 


மனதில் மேலெழும் இன்னொன்று.

 Associate memory. 

ந. பிச்சமூர்த்தியின் அப்பா பெயர் நடேசன். 


ந. முத்துசாமி தகப்பனார் பெயரும் நடேசன் தான். 


பிச்சமூர்த்தியும், முத்துசாமியும் தங்களின் ஏழாவது வயதில் தகப்பனை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

... 


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>