Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

சுஜாதா

$
0
0

 ராஜேஷ் குமார் அந்தக் கால நாவலுக்கு

 விளம்பரம் - போஸ்டர் கீழ்கண்டவாறு


கல்கிக்கு ஒரு "பொன்னியின் செல்வன் "


தி .ஜானகிராமனுக்கு ஒரு "மோக முள் "


ராஜேஷ் குமாருக்கு ஒரு "ஒரே ரத்தம் "


 கல்கிக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையில் கிடுக்கிப்பிடியில் தி.ஜானகிராமன். 


சுஜாதா ஒரு தமிழில் trend setter. 

அவருடைய சிறுகதைகள். அப்புறம் அந்த 'வானமென்னும் வீதியிலே', 'நைலான் கயிறு'


அதோடு வாசகனுக்கு சீரியஸ் வாசிப்புக்கு 

நல்ல வழிகாட்டி. 

அவருடைய 'விருப்பமில்லாத திருப்பங்கள் 'நாயகன் கையில் பூமணியின் "பிறகு".


கணையாழியின் கடைசிப்பக்கங்கள். 


அறிவியல் கட்டுரைகள்.


அவருடைய பத்தி எழுத்து. 


சுஜாதாவை 'கரையெல்லாம் செண்பகப்பூ '

 டப்பிங் போது அவரை மிக அருகில் இருந்து

 ஒரு இரண்டு மணி நேரம் 

கவனித்துக் கொண்டிருந்தேன்.


 மனோரமா வந்தவர் உடனே 

டப்பிங் பேச ஆரம்பித்தார். 

விளக்கை மீண்டும் போட்டவுடன் மனோரமா சுஜாதாவை பார்த்து விட்டு

 'அய்யோயோ சார் நீங்க இங்கேயா உட்கார்ந்திருந்தீங்க? நீங்க இருப்பது தெரிந்திருந்தா பயத்திலே என்னாலே பேசியிருக்கவெ முடிந்திருக்காது.

உளறி கொட்டியிருந்திருப்பேன் 'என்றார். 


பச்சை கட்டம் போட்ட சட்டை

 போட்டிருந்தார் சுஜாதா. 

மனோரமாவிடம் அவர் பார்த்த

 'திருமலை தென்குமரி 'படத்தில்

 அவருடைய நடிப்பில் 

ஒரு குறிப்பிட்ட இடம் பற்றி

 "ஒரு எழுத்தாளருக்குடைய அப்சர்வேசன் அது"என பாராட்டினார்.


மனோரமா எப்போதும் போல் பரவசமாகி 

'சார் உங்க கிட்ட பாராட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்.'என்றார். 


டப்பிங்குக்காக 

லூப்களை பின்னோக்கி ஓட்டும்போது 

ரிவர்சில் நடிகர்கள் அபத்தமாக விகாரமாக செய்கைகள் மாறுவது பற்றி

 "கொடுமை, கொடுமைங்க. சம்பந்தபட்டவங்க பார்க்கும்போது நொந்து போயிடுவீங்களே"என்று மனோரமா, ஸ்ரீப்ரியா, தப்புத்தாளங்கள் சுந்தர் ஆகியோரை கிண்டல் செய்தார். 


நான் அவரிடம் பேசவே இல்லை.

 இரண்டு மணி நேரமும் அவரை அப்சர்வ் செய்துகொண்டிருந்தேன். 

அவரோடு வாசகனுக்கு பேசும் சூழல் 

இல்லை அது. 

சினிமாக்காரர்கள் சூழ 

சினிமா கனவுகளுடன் அந்த சுஜாதா. 


மேலும் நானும் அப்போது அவரை (அதுவரை அவர் எழுதியிருந்த அத்தனையும் )முழுமையாக படித்திருந்த போதும் ரொம்ப சின்னவயது. 


அன்று அதன் பின் எனக்கு ஒரு ஓட்டை சமாதானம் செய்து தேற்றி கொண்டேன். ஒரு நொண்டி சாக்கு.

அவருடைய வார்த்தைகள் "உண்மையான ரசிகர்கள், வாசகர்கள் நேரில் சந்திக்கிற, 

பேசுகிற ஜாதியில்லை."


... 




Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>