ஒரு காலை.
கொய்யாப்பழம், சப்போட்டாப்பழம்
ஒரு தள்ளு வண்டியில் வைத்து
பழக்காரர் ஒருவர் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.
அரைக்கிலோ கொய்யாப்பழம், அரைக்கிலோ சப்போட்டாப்பழம் வாங்கினேன்.
ஐம்பது ரூபாயை கொடுத்தேன்.
முதல் போணி.
தள்ளுவண்டிக்காரர் ரொம்ப பக்திமான்.
ஐம்பது ரூபாயை வானத்தில் உயர்த்தி
ஒரு முறை சுற்றினார்.
மீண்டும் ஐம்பது ரூபாயை கண்களில் ஒற்றினார். பின் மீண்டும் வானத்தைப் பார்த்து
உரக்க கூவினார்: “ முருகா, முதல் போணி.”
பழங்களை என் கையில்
அவர் கொடுக்கும் போதும் “ முருகா” என்றார்.
இந்த வியாபாரியை கனப்படுத்த
உடனே,உடனே முடிவு செய்தேன்.
பழங்களை கையில் வாங்கியவுடன்
நான் கண்மூடி வானத்தைப்பார்த்து
“ ஆண்டாளே, பெருமாளே” என்று கூவினேன்.
பின் பழங்களை கையில் வைத்து இன்னொரு கையையும் இணைத்து கும்பிட்டு
நல்ல சத்தமாக ஒரு கூப்பாடு
“ ஆண்டாளே, பெருமாளே,
இன்னைக்கு இவருக்கு அமோகமா
வியாபாரம் நடக்கணும்.
ஆண்டாளே, ரங்கமன்னாரே”
....