கண்ணதாசன் பிறந்த சிறுகூடல் பட்டியில்
ஒரு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்
கவிஞருக்கு நடந்த விழாவில் பேசிய
இளைய ராஜா
"இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
அதில் மறைந்தது சிலகாலம்
முடிவும் அறியாது, தெளிவும் புரியாது
மயங்குது எதிர் காலம் "என்ற
கண்ணதாசன் வரிகளைக் குறிப்பிட்டுப்
பேசிய போது தேம்பியழுதார்.
...
கமல் ஹாசன் மட்டும் கட்டாயம் சட்டசபைக்கு போயிருக்கனும்.
மனசு ஆறவே மாட்டேங்குது.
சிவாஜி கணேசன் திருவையாறுல்ல தோத்தாரு.
முப்பத்து ரெண்டு வருஷம் கழிச்சி
கோவை தெற்குல அது போல ஒரு முக்கிய தோல்வி.
திருவையாற விட இது பல மடங்கு சோகம்.
....