தியாகராஜ பாகவதர் இரண்டாவது மனைவி ராஜம்மா குடும்ப மகள் வழி பேரப்பிள்ளைகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி செய்திருக்கிறார்.
இந்த சூளைமேடு சாய்ராம் குடும்பத்திற்கு எம்ஜியார் உயிரோடு இருந்தவரை உதவியிருக்கிறார்.
சில காலம் முன் ராஜம்மா குடும்பம் பற்றி குமுதத்தில் பேட்டியோடு செய்தி வந்திருந்தது. அப்போது சிவகுமார், பார்த்திபன் உதவி செய்த தகவலும் தெரிய வந்தது.
முதல் தாரத்துக்கு ஒரே மகன். அவர் பெயர் ரவீந்திரன்.
இவருடைய பேட்டி இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தது.
அவரை பத்திரிகை பேட்டி எடுத்த விஷயம் கூட அதிசயம்.
திருச்சியில் தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான பங்களாவில் பால்யத்தில் விளையாடிய குழந்தை ரவீந்திரன்.
ரவீந்திரன் சென்னையில் தன்னை யாரென்றே ஒரு போதும் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்.
ஏதோ ஒரு கம்பெனியில் போர்மனாக வாழ்க்கையை ஓட்டியவர்.
வில்லிவாக்கத்தில் வீட்டை ஒட்டி அக்கம் பக்கத்தினர் யாருக்கும் இவர் பாகவதர் மகன் என்பது யாருக்கும் தெரியாது.
வீட்டில் தியாகராஜ பாகவதர் புகைப்படம் கூட சுவரில் தொங்க விடவில்லை.
தன் தந்தை இன்னார் என்ற பிரமை கிஞ்சித்தும் அவரிடம் இல்லாமல் இருந்திருக்கிறார்.
பேட்டி படித்து பல வருடங்கள் ஆனதால் எவ்வளவு யோசித்துப்பார்த்தும் ரவீந்திரன் குறித்து வேறு எதுவும் தெரியவில்லை.
ராஜம்மாள் குடும்பம் போல கமலம்மாள் மகன் ரவீந்திரன் தன்னை எம் ஜி ஆர் அறியச் செய்திருப்பாரா? நடிகர் சிவகுமார், பார்த்திபன் இவரை அறிந்திருப்பார்களா?
இப்போது தியாகராஜ பாகவதர் மகன்
ரவீந்திரன் உயிரோடு இருக்கிறாரா?
https://youtu.be/5yr52veB_EI
http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_16.html?m=0
..