Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

Poramboke

$
0
0

 Poramboke


Catamaran மாதிரி Poramboke என்கிற வார்த்தையும் ஆங்கில அகராதியில் இடம்பெற நேரலாம். 

கட்டுமரம் - Catamaran. 

புறம்போக்கு - Poramboke.


நம் தனித்தமிழ் coffeeயை கொட்டை வடிநீர் என்றே பிடிவாதமாய் சொல்லியும் தனித்தமிழ் புலவரே 'காப்பி'என்று தான் சொல்லும்படியாகி விட்டது. 


'ஹிந்து 'பத்திரிகையில் புறம்போக்கு நிலம் பற்றி Poramboke என்றே தான் குறிப்பிடுகிறார்கள்.


 உயர்ந்த நீதிபதி பி டி தினகரன் கதை  


இந்த land grabbing (197acres in Kaverirajapuram,Tiruvallur Dt.)கதையில்,

கலெக்டர்,

மேஜிஸ்ட்ரேட் துவங்கி

 வி.ஏ.ஒ வரை 

தினகரனின் அசகாயசூரத்தனம் பற்றி 

சொல்லி விட்டார்கள்.


 காவேரிராஜபுரம் கிராமத்தார் பெரும்பான்மையோருக்கு 

அவர்கள் வீடு உள்ள இடத்திற்கே

 இன்னும் பட்டா கிடைக்கவில்லை. 


இந்த பி.டி.தினகரனை நான் சிலவருடங்களுக்கு முன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.


நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது. அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது.


 அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்

08-07-2006 அன்று என் எம்.டி சார்பில் 

ஆஜர் ஆக நான் போயிருந்தேன். 


அங்கே பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய தினகரனும் இருந்தார். 


எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார். 

கேஸ் அபாண்டமான பொய் கேஸ்! 

இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார்.

 தினகரன் என்னிடம் "இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம்.

 பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார். அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார். ஒத்துக்கொள்ளுங்கள் "என்று கறாராக வற்புறுத்தினார்.


 அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் "பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம்.''என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார். 


நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம். தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் 'என உறுதியாக சொல்லி விட்டேன். 


மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது. 


வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம். 


அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது 

தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள். 


அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ்.அசோக் குமார் (கருணாநிதி நள்ளிரவு கைதில் 

போலீசை கிண்டியெடுத்த 

அதே நீதிபதி தான் )அவர்கள்

 தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.


.... 


மீள் பதிவு 2009


Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>