Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1850

கவி கா. மு. ஷெரீப்

$
0
0

 கவி கா. மு. ஷெரீப் 


'டவுன் பஸ் 'படத்தில் கண்ணப்பா -அஞ்சலிதேவி வாயசைத்து நடித்த "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமோ? துயரம் நிலை தானா? உலகம் இது தானா?" 


எஸ்.எஸ்.ஆர் நடித்த பாடல்கள் "ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே, என்னருமை காதலியே என்னைக்கொஞ்சம் பாரு நீயே "


"பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, 

இதை பார்த்து அறிந்து நடக்காதவன்

 மனிதன் இல்லே " - எழுதியவர் கா.மு.ஷெரிப்.


சிவாஜி கணேசனுக்கு கா.மு.ஷெரிப் எழுதிய பாடல்கள்

"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் -வையகம் இது தானடா "


"பாட்டும் நானே, பாவமும் நானே "கா. மு. ஷெரீப் எழுதியது தான் என்று ஜெயகாந்தன் தன்னுடைய

 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்'நூலில் எழுதியிருக்கிறார்.


அவருக்கு முன்னரே அப்படி 

ஒரு பேச்சு இருந்திருக்கிறது. 


ஆனால் கண்ணதாசன் இதற்கு பதிலாக கண்ணதாசன் அன்று 'போயும் போயும் வயிற்றுழவுக்காரன் மலத்தையா தின்பான்' 

என்றார். 


கவிஞர் ஷெரீப்பிடம் இந்த பாடல் கண்ணதாசன் எழுதியதாக ஆகிப்போனதே என்று இது பற்றி கேட்ட போது வெள்ளந்தியாக "அதனால என்ன? பாட்டு நல்லாருக்குல்ல"என்றாராம்.


தம்பி எம். எம். அப்துல்லாவின் உறவினர் 

கவி. கா. மு. ஷெரீப். 

அவரிடம் 'பாட்டும் நானே பாவமும் நானே'தான் எழுதிய பாடல் தான் என்று கவி சொல்லியிருக்கிறார். 


சினிமாப்பாடல் எழுதியவர் தான் என்றாலும் 

இவர் ஒரு Man of principles.


யாராவது கொஞ்சம் பெரிய மனுஷன் பழக்கம் இருந்தா அதை வைத்து எப்படி

Exploit பண்ணலாம்னு தவிக்கிற உலகம் இது . மந்திரிகுமாரி படத்தினால் கருணாநிதி ,எம்ஜியார் , பாட்டெழுதிய ஷெரிப் ...எவ்வளவு காலப்பழக்கம்!


ஒரு முறை கருணாநிதி முதல்வராய் இருந்த போது கவி கா.மு. ஷெரிப்பின் மனைவி பார்க்கப்போயிருந்தார். 

B.E. படித்த தங்கள் மகனுக்கு, அப்போது வேலையில்லாததால் கோபாலபுரத்திற்கு போயிருக்கிறார்.

கருணாநிதி அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார். மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்ட தாயைப் பார்த்து சொன்னாராம் :

 "நான் சிபாரிசு பன்றதை கவிஞர் விரும்பவே மாட்டார். சிபாரிசு செஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்.அவரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு வந்தீங்கன்னா நான் சிபாரிசு பண்றேன் "


இந்த அம்மா வீட்டுக்கு வந்து கணவரிடம் நடந்ததை சொன்னாராம் ."ஏன் நீ அங்கே போனே?"ன்னு கடுமையா கோபப்பட்டிருக்கிறார் கா.மு.ஷெரிப். 


"அவர் முதல்வர் பதவி வகிக்காத போது மட்டும் தான் நானே அவரைப் பார்ப்பேன். நீ இப்படி செய்யலாமா? பையன் அவனா வேலை தேடிக்கட்டும்"என்றாராம். 


"பூவாளூர் சந்தையிலே ஒங்க பொட்டி யோட என் பொட்டி ஓரசிக்கிச்சே .. ஞாபகம் இல்லையா !"ன்னு ஈ ன்னு இளிச்சி ஈசிண்டு உறவு கொண்டாடி ஓட்டப்பார்க்கிற உலகத்திலே 

இப்படி ஒரு பைத்தியக்கார பிரகிருதி!


கா.மு.ஷெரிப்பும், மருத காசியும் இணைந்து சில திரைப் பாடல்கள் எழுதியிருக்கிறார்களாம். 

அவை எந்தெந்த பாடல்கள் என்று தெரியாமல்                        குழப்பம் இருக்கிறது.


....


Viewing all articles
Browse latest Browse all 1850

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>