‘தம்பி வாடா அடிச்சது யோகம். தங்க காசு அள்ள வா..வா..வா.. தம்பி வாடா அடிச்சது யோகம்.’ இந்தப்பாடல் நினைவில் நின்றவள் என்ற முக்தா சீனிவாசன் படத்தில் இடம்பெற்றது.
சோ வசனம் எழுதிய படம்.
இதில் அசிஸ்டண்ட் டைரக்டராய் இருந்த சி.என்.முத்து எழுதி வி.குமார் இசையில், டி.எம்.எஸ், சுசிலா, தாராபுரம் சுந்தர்ராஜன் பாடி, ரவிச்சந்திரன்,கே.ஆர்.விஜயா, நாகேஷ் நடித்த பாடல்.
இதில் அசிஸ்டண்ட் டைரக்டராய் இருந்த சி.என்.முத்து எழுதி வி.குமார் இசையில், டி.எம்.எஸ், சுசிலா, தாராபுரம் சுந்தர்ராஜன் பாடி, ரவிச்சந்திரன்,கே.ஆர்.விஜயா, நாகேஷ் நடித்த பாடல்.
பின்னால் இந்த சி.என்.முத்து உதவி இயக்குனாராக எஸ்.பி.முத்துராமனிடம் பல படங்களில் இருந்தார்.
ஜி.என்.ரங்கராஜன், சி.என்.முத்து இருவருமே எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள். பின் இருவரும் இயக்குனர்களானார்கள்.
சி.என்.முத்து “சொன்னது நீ தானா?” படம் விஜயகுமாரை வைத்து இயக்கினார்.
ஜி.என்.ரங்கராஜன் “கல்யாணராமன்” படம் கமலை வைத்து இயக்கினார்.
இதிலேயே யார் வெற்றி பெற்றார் என்று சொல்லத்தேவையில்லை.
'சொன்னது நீ தானா'படத்தில் “வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது.” ஜெயச்சந்திரன் பாடல் உண்டு.
படத்தின் டைட்டிலில் ‘புரட்சி கலைஞர்’ என்ற தன் பட்டத்தை ஏன் போடவில்லை என்று விஜயகுமார் கேட்ட போது சி.என் முத்து பதில் ‘ படத்தில் நீங்க எந்த புரட்சியும் செய்யலையே விஜி!’
ஆமாம். விஜயகுமார் கூட பெரிய மார்க்கெட் வால்யூ எதுவும் இல்லாத போதிலும் ரொம்ப நினைப்பில் தான் இருந்திருக்கிறார். பின்னால் இந்த ‘புரச்சி கலைங்கர்!” பட்டம் விஜய காந்த் படங்களில் பயன்படுத்தப்பட்டது.
எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து வெளி வந்த ஜி.என். ரங்கராஜன் நேரம் சரியாய் இருந்ததால் கமல் கிடைத்து கல்யாணராமன் என்று கொடி கட்டி விட்டார். அப்போது கமல் குமுதத்தில் “ களத்தூர் முதல் கல்யாணராமன் வரை” என்ற தொடர் எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கல்யாண ராமன் நூறாவது நாள் விழாவில் பாலசந்தர் கமலை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டார்.
பின்னே அந்த தலைப்பில் கமல் குறிப்பிடுகிற களத்தூர் கண்ணம்மாவும் கல்யாணராமனும் பாலசந்தர் படம் கிடையாது எனும்போது கோபம் வருமா?வராதா?
“ ஏன்டா! நீ சுயசரிதை எழுதுற அளவுக்கு உனக்கு வயசாயிடுச்சா? ரொம்ப சாதிச்சிட்டதா நினச்சிட்டியா? கல்யாணராமனோடு உன் சாதனை முடிஞ்சிடுச்சா?”
அந்தத்தொடர் குமுதத்தில் நிறுத்தப்பட்டது.
ஜி.என்.ரங்கராஜன் கல்யாணராமன் வெற்றியைத் தொடர்ந்து சரிதாவை வைத்து‘ருசி கண்ட பூனை’ சின்ன பட்ஜெட்டில் செய்து விட்டு மீண்டும் கோகிலா,கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம் என்று கமலை வைத்து மூன்று படங்கள் செய்து கொண்டு இருந்தார். ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சுஜாதா கதையை பிரதாப் போத்தன்,ஸ்ரீப்ரியா. இப்படி படு பிஸியாக ஜி.என்.ரங்கராஜன் இருந்த நேரம் சி.என்.முத்து நிலைமை பரிதாபம். நேரம் சரியில்லாத நிலையில் ‘மாட்டுக்கார முத்தம்மா’ என்னத்தையோ இழு,இழு என்று இழுத்துக்கொண்டிருந்தார்.கேட்கிற ஆளிடம் எல்லாம் ‘மாட்டுக்கார முத்தம்மா’ பண்ணிக்கிட்டு இருக்கேன்’ன்னு பெருமைக்கு எருமை மேச்சிக்கிட்டிருந்தார். தவித்து, தத்தளித்து, தக்காளி வித்து...
சும்மா தேங்கா மூடிப்படம்!தேங்காமூடி படம் என்றால் பூஜையோடு மட்டும், அல்லதுஒரு ஆயிரம் அடி,ரெண்டாயிரம் அடி மட்டும் ஷூட் பண்ணி, அல்லது ஒரு ஷெட்யூலோடுநிறுத்தப்பட்டு விடும் படங்கள்.
ஆனால்சம்பந்தப்பட்டவர்கள்(தயாரிப்பாளர்,இயக்குனர்,கதாநாயகநடிகர்) ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.படம் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என்றுமற்றவர்களையும் தங்களையும் கூட ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஃபைனான்ஸ்ரெடி பண்ணிக்கிட்டிருக்கோம், அடுத்த மாசம் அவுட் டோர் ஷுட்டிங்போப்போறோம்,மூணே மாசத்தில ரிலீஸ் பண்ணிடுவோம்னு அஞ்சாறு வருசம் சலிக்காமசொல்லித்தான் ஓய்வார்கள்!
நான் கீழ்பாக்கம் ஈகா தியேட்டருக்குப் பின்னால் எம்.இ.எஸ் ஹாஸ்டலில் இருந்த போது இந்த சி.என்.முத்துவை அந்தப்படத்தின் கதாநாயகன் அழைத்து வந்த சோகம். “இந்தப்படம் வந்தா பதினாறு வயதினிலே கமல் மாதிரி பேரு வாங்குவேன்!” சி.என்.முத்துவின் கதாநாயகனுக்கு இப்படி நம்பிக்கை.
சி.என்.முத்துவுக்கு கடன் கொடுத்த மெர்கண்டைல் பேங்க் தியாகராஜன் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து விட்டார். பதில் நோட்டீஸ் ஒன்று வக்கீல் அனுப்பி விடவேண்டியிருந்தது. என் கஸின் ஆர் சண்முகசுந்தரத்திடம் நான் ரெகமெண்ட் செய்தேன். வக்கீல் ஃபீஸ் கொடுக்க சி.என் முத்துவுக்கு வழியில்லை. என் கஸின் ஸ்ட்ராங்க்காக ஒரு பதில் அனுப்பினார்.
‘தம்பி வாடா! அடிச்சது யோகம்! தங்கக்காசு அள்ளவா வா வா’ என்று பாட்டு 1967ல் எழுதிய 1981ல் சி.என்.முத்துவுக்கு இந்த சிக்கலான நிலை.
சினிமாக்காரன் நம்பிக்கை அளப்பரியது. ஃபீஸ் கொடுக்க முடியாத அந்த நிலையிலும் சி.என்.முத்து ‘இந்தப்படம் ரிலீஸ் ஆனா நாளைக்கு நான் பெரிய டைரக்டரா நிக்கத்தான் போறேன்.சினிமாவில எப்ப என்ன நடக்கும்னு சொல்ல முடியாது!’ என்று சொல்லிக்கொண்டு தான் இருந்தார்.
சினிமாக்காரன் நம்பிக்கை அளப்பரியது. ஃபீஸ் கொடுக்க முடியாத அந்த நிலையிலும் சி.என்.முத்து ‘இந்தப்படம் ரிலீஸ் ஆனா நாளைக்கு நான் பெரிய டைரக்டரா நிக்கத்தான் போறேன்.சினிமாவில எப்ப என்ன நடக்கும்னு சொல்ல முடியாது!’ என்று சொல்லிக்கொண்டு தான் இருந்தார்.
http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_26.html
http://rprajanayahem.blogspot.in/…/normal-0-false-false-fal…
...............................................................