கலாப்ரியாவின் 'மற்றாங்கே'தொகுப்பு பற்றி
ஒரு இளம் தமிழ் ஆசிரியரிடம் பேசிய போது
அவர் கோபத்துடன் மூச்சிறைத்தார்.
அவன் இவன் என்று ஏக வசனம்.
கலாப்ரியாவின் 'சலுகை'கவிதை
"அழகாயில்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்."
ரொம்ப ஆத்திரத்துடன் அவர் சொன்னார்."அழகாயில்லாத பெண் எனக்கு தங்கை என்று வக்கிரமாக எழுதலாமா?"
தன்மை ஒருமையில் கவிதை எழுதப்பட்டுள்ளதால் இது கவிஞரின் வாக்குமூலம் என்று
தமிழாசிரியர் உறுதியாக கருதி மூச்சிறைத்துக்கொண்டு திரிகிறார்
என்று தெரிந்தது.
An incorrigible Tamil Teacher.
இது நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
...........