டாக்டர் பிரபா ஆத்ரேயே. இந்த வருடம்
பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள ஹிந்துஸ்தானி கிரானா கரானா பாடகி.
சகோதரி கஸ்தூரி சுமதி மகத்தான சங்கீத ரசனை கொண்டவர்.
பிரபா ஆத்ரேயை புனா போய் பேட்டி
எடுத்து தமிழின் பிரபல வார இதழில் பிரசுரமாகியதுண்டு.
வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் சுமதி.
டாக்டர் பிரபா ஆத்ரேயே. இந்த வருடம்
பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள ஹிந்துஸ்தானி கிரானா கரானா பாடகி.
சகோதரி கஸ்தூரி சுமதி மகத்தான சங்கீத ரசனை கொண்டவர்
சுமதியின் தந்தை கஸ்தூரி அவர்கள் S.V. சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் நடிகர்.
பாஞ்சாலி சபதம் முழுமையாக சரளமாக, தங்கு தடையின்றி
நடித்துக் காட்டக்கூடிய திறமையான நடிகர்.
விருது பெற்ற'கல் மண்டபம்'என்ற சுமதியின் நாவலை இப்போது கூட சரவணன் மாணிக்கவாசகம் விமர்சித்திருக்கிறார்.
சுமதி அனுப்பிய பிரபா ஆத்ரேயேயின்
சந்திரகௌன்ஸ்
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
இந்த சந்திரகௌன்ஸ் ராகம்
பிரபா ஆத்ரே பாடக்கேட்ட பின் இறந்தே விடலாம் என்று சுமதி சொல்வது ஏதோ மிகையானதல்ல என்பதை நான் உணர்கிறேன்.
நேற்று இரு முறை கேட்டேன். இன்றும் இரு முறை. நாளையும் கேட்பேன்.