Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

கிருஷ்ணா - விஜய நிர்மலா

$
0
0


அலேக் நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா.
இவர் நடித்த 'ஜாக்பாட் ஜாங்கோ'டப்பிங் படம் முப்பத்தைந்து வருடங்கள் முன் தமிழ்நாட்டில் பிரபலம். 



விஜய நிர்மலா 'இலந்தப் பயம் 'பாட்டு 'பணமா பாசமா ' 
(1968 )படத்தில் இடம் பெற்று இவரை அலேக் நிர்மலாவாக பிரபலமாக்கியது.

 அலேக் நிர்மலாவுக்கு அப்போதே கல்யாணமாகி பத்து வயதில் 
பெண் குழந்தை இருந்தது.
 ஒரு மகனும் கூட. 

 தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் ( அவருக்கும் கூட திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் )விஜய நிர்மலாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.
முதல் கணவர் பெயர் ராமகிருஷ்ணா.

அந்த மகன் நரேஷ். 
இன்றைய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் step brother.

நரேஷை தெலுங்கு கதாநாயகனாக அலேக் விஜய நிர்மலா 1981லேயே தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார்.

தமிழில் 1985ல் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்து மௌலி இயக்கிய 'பொருத்தம்'படத்தில் கூட நரேஷ் தான் கதாநாயகனாக நடித்ததுண்டு.


2006ல் இவர்  தாயார் பெயரை 
தன் பெயரோடு இணைத்து
 விஜய நரேஷ் என்று மாற்றிக் கொண்டார்.


தினமலர் வாரமலர் இதழ் ஒன்றில் 'கந்தசாமி 'விக்ரம் படம் பற்றி கலைப்புலி தாணு பேட்டி கொடுத்திருக்கிறார். 
அதில் கந்தசாமி படம் பற்றிய பெட்டி செய்தி குறிப்புகளில் ஒன்று. கந்தசாமி படத்தில் விக்ரம் உடன் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சி .பி . ஐ . ஆபீசராக நடித்திருக்கிறார் என்பது. இது சரிதான்.
 தமிழ் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இது பிழையான தகவல். 
 நாற்பது வருடங்களுக்கு முன் பணமா பாசமா வெளி வந்த அதே 1968வருடத்தில் வந்த 'குழந்தைக்காக 'என்ற தமிழ்ப் படத்தில் பேபி ராணிக்கு அப்பாவாக கிருஷ்ணா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

அந்த படம் பார்த்த தமிழ் ரசிகர்கள் இவரை அப்போது"ரவிச்சந்திரன் மாதிரி இருக்கான்"என்றார்கள்.

இப்போது கிருஷ்ணா மறைவுக்கு நடிகை வாணிஸ்ரீ இரங்கல் தெரிவித்திருக்கிறதை தினத்தந்தியில் பார்க்க முடிந்தது.
"அவருடன் நடிக்கும் நடிகைகளை 
ஒரு சகோதரி போல நடத்துவார்."

அலேக் நிர்மலா இவருடனான இரண்டாவது திருமணத்தின் போது பேட்டியொன்றில்  'ஒரு தெலுங்கு படத்தில் கடலில் குளிக்கிற காட்சி படப்பிடிப்பில் கடல்நீரில் கட்டிப்பிடித்து அலைகளில்  உருளும் போது இருவருமே தங்கள் காதலை உணர்ந்ததாக'குறிப்பிட்டிருந்தார்.

ஏ.வி. எம். ஸ்டுடியோவில்
ஒரு தெலுங்கு பட ஷூட்டிங் பார்த்த ஞாபகம் இப்போது வருகிறது.
அலேக் நிர்மலா தன் கணவரை இயக்கிக்கொண்டிருந்தார்.
சுபாஷிணியுடன்
 டூயட் பாடல் காட்சி அது.
சுபாஷிணியை விட இயக்குநர் அலேக் நிர்மலா அழகாக தெரிந்தார்.

அலேக் நிர்மலாவின் நெருங்கிய உறவுப்பெண்கள் ஜெயசுதாவும் சுபாஷினியும்.

நடிகை சுபாஷிணிக்கு தலையில் நிறைய பொடுகு இருப்பதாக 
சுசிலா என்ற ஹேய் ட்ரஸ்ஸர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.



விஜய நிர்மலா தமிழ் படங்களில்
 சில பாடல்களால் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

"சந்திப்போமா, சந்திப்போமா
தனிமையில் நம்மைப்பற்றி சிந்திப்போமா?"

"தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம் "

"வாழைத்தண்டு போல ஒடம்புல அலேக்
நீ வாரியணச்சா வழுக்கிறியே நீ
 அலேக் "

"சவாலே சமாளி, தனிச்சி நின்று துணிச்சலோடு சமாளி"

"கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்,
நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்"
....

Photos

1. அலேக் நிர்மலா

2. கிருஷ்ணா

3, 4. அலேக் நிர்மலா மகன் நரேஷ்

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>