30.11.2022
சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல Pearl City Express ல் இரவு பயணம்.
அறுபத்தொரு வயது தங்கம் என்ற அம்மாள். பாமரத் தோற்றம்.
முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி, இடம் பெற்ற நடிகர் நடிகைகள் பற்றி தெளிவாக வரிசையாக நினைவில் வைத்திருக்கிறார்.
அவருடைய தங்கை தான் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி இவருக்கு சொல்லியிருக்கிறார்.
அந்த தங்கைக்கு உடனே, உடனே மொபைலில் கூப்பிட்டு
முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு 'சினிமா எனும் பூதம்'நிகழ்ச்சி நடத்தும் ராஜநாயஹம் ரயிலில் வருவது பற்றி உற்சாகமாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.
ஞாயிறு காலையில் சில சமயம் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போயிருக்கிறது என்று வருத்தப்பட்டார்.
திருமுல்லைவாயிலில் இருக்கிற மகள் வீட்டில் இருந்து தூத்துக்குடி புதிய முத்தூருக்கு மகன் வீட்டிற்கு பயணப்பட்ட அம்மையார் தங்கம்.
தங்கம் பெர்த்துக்கு மேலே அப்பர் பெர்த்தில் படுத்துக்கொண்டு இருந்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன்
திருவண்ணாமலை குமரேசன். ஆந்திராவில் வேலை.
திருச்செந்தூர் கோவிலுக்கு போவதற்காக ரயில் பயணம்.
குமரேசன் "சார், நான் உங்க 'அரசியல் பிழைத்தோர்' 'மணல் கோடுகளாய்'
ரெண்டு புத்தகமும்
படித்திருக்கிறேன் '
...
https://www.facebook.com/100006104256328/posts/3486535571559884/?mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=3484088925137882&id=100006104256328&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=3484925341720907&id=100006104256328&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=3485135498366558&id=100006104256328&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=3483496918530416&id=100006104256328&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=3481537428726365&id=100006104256328&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=3483352031878238&id=100006104256328&mibextid=Nif5oz