Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1850

மஹ்ஹான்

$
0
0

A news in Times of India 15-05-2014
The troubled relationship Gandhi had with his eldest son Harilal.
காந்தியார் 1935ம் ஆண்டில் தன் மூத்த மகன் ஹரிலாலுக்கு சில கடிதங்கள் குஜராத்தி மொழியில் எழுதியிருந்திருக்கிறார்.
“ நம் தேச விடுதலையை விடவும் உன்னுடைய பிரச்னை எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.”
ஹரிலாலின் மகள் மனு அப்போது சபர்மதி ஆசிரமத்தில் தன் தாத்தா காந்தியாருடன் வசிக்க வந்திருந்தாள்.
காந்தி ஒரு கடிதத்தில் சொல்வது: “ மனு உன்னைப் பற்றி பயங்கரமான விஷயங்களைச் சொல்கிறாள். நீ எட்டு வருடங்களுக்கு முன் அவளைக் கற்பழித்திருக்கிறாய். இதனால் அவள் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, சிகிச்சை தேட வேண்டியிருந்திருக்கிறது.”
..........................................

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்

எழுந்ததும் கணைத்தார்;மெல்ல
சொற்பொழிவாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
’விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
’பாழ் பட்டு நின்ற’ என்றார்;
’வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
- ஞானக்கூத்தன் கவிதை
……………………………………………………………………………


காந்தியார் மரணம்- தி.ஜா 'மோகமுள்'நாவலில்

மோகமுள் நாவலில் கதைநாயகன் பாபுவும் கதைநாயகி யமுனாவும் காந்தி மரணம் மீதான உணர்வுகளை பேசுகிறார்கள்.
பாபு : மனுஷன் போய் எட்டுமாதமாகி விட்டது... இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதில் இருந்து வேண்டியவர்களைப் பார்க்கிற போதெல்லாம் அழுகை குமுறி,குமுறி வந்தது . டவுனில் ( சென்னை ) தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண , "அண்ணா "என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான் .திடீரென்று வாத்யம் , பாட்டு எல்லாம் நின்று விட்டது . "காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா "என்று விசித்து அழத்தொடங்கி விட்டான் .
"என்னது "
"எப்ப "
"என்னடாது .... ஏய் பாலு .."
"யார்ரா சொன்னா ?"
"ரேடியோவிலே அண்ணா ''
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள் .பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது .
யமுனா : ஆமாம் பாபு . நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு , கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம் .திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார் . பந்தல் முழுக்க எழுந்து விட்டது . ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.
பாபு : புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர் . பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம் . கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது . இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.
..................................................................


Viewing all articles
Browse latest Browse all 1850

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>