மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்றை மு. நடேஷிடம் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமஸ்வாமி.
”நீரடியில் கிடக்கிறது கொலை வாள்
இன்று ரத்த ஆறு எதுவும் ஓடவில்லை
எனினும் இடையறாத நதியின் கருணை
கழுவி முடிக்கட்டும் என்று
நீரடியில் கிடக்கிறது கொலை வாள்”
இன்று ரத்த ஆறு எதுவும் ஓடவில்லை
எனினும் இடையறாத நதியின் கருணை
கழுவி முடிக்கட்டும் என்று
நீரடியில் கிடக்கிறது கொலை வாள்”
கவிதையால் கிளர்த்தப்பட்ட ஓவியர் நடேஷ் ஒரு வருடமாக இந்த Conceptual abstraction painting (அரூபமான ஓவியம்) வரைந்து கொண்டிருக்கிறார். ஆமாம்! ஒரு வருடமாக!
மகத்தான உன்னத கலைஞன் மு. நடேஷ்.
மகத்தான உன்னத கலைஞன் மு. நடேஷ்.
ந.முத்துசாமியின் ’காண்டவ வன தகனம்’ நாடகத்தை கூத்துப்பட்டறைக்காக பிரசன்னா ராமஸ்வாமி இயக்க இருக்கிறார்.
பிரசன்னா இந்த மனுஷ்யபுத்திரன் கவிதையையும் மு. நடேஷ் வரைந்து கொண்டிருக்கும் ஓவியத்தையும் முன் வைத்து ஒரு Workshop நடத்தக்கூட உத்தேசித்துள்ளார்.
…………………………………………..