Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1853

இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?

$
0
0

காஸ்மோ பாலிட்டன் க்ளப் பஸ் அரசரடியிலிருந்து கிளம்பும். பஸ்சில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும், லேடி டோக், மீனாட்சி காலேஜ், ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் தான் தினம் காலையில் பயணம்.
கண்டக்டர் ஒரு பெரியவர். அடிக்கடி ஒரு ஜோக் அடிப்பார். ’தயவு செய்து ப்ளாக்ல டிக்கட் எடுக்காதீங்க. ஆளுக்கு ஒரு டிக்கட் தான் தருவேன்.’
என் ப்ரிய ஸ்நேகிதி முகத்தில் பவுடர் அதிகமாய் இருந்தால் நான் “புதுசா லக்மே தயாரிக்கறாங்களே, எக்ஸோடிக்கா டால்க், அது பொழுதெல்லாம் கம,கம,கம, கம,கம,கம” என்பேன். உடனே புரிந்து அவசரமாய் அவள் முகத்தை கர்ச்சீப்பால் துடைத்து, துடைத்து,,,
“ அடி What அடி ராக்mummy What what thoughtsஸு.
My chest Shakeக்குதடி, சிறு Eyeஆடி Noseகுத்தி,
மாணிக்க red, மச்சானை pullலுதடி.
Five,six rupeesஸுக்கு மணிgarland
Your neckக்குக்கு suitableலடி
அடி our city மீனாட்சி seeத்தாலும்
அவ Eyesக்கு sorrowவடி
அடி without fail I youவை jail எடுப்பேன்.
Single double ஆக இருக்கட்டுமே
அட Aunti, அவ பெத்த U-foam மெத்தை
அட ராக்mummy Marriage வைபோகமே!
Decorative மெஜுராவில் this story, daily daily Walkக்குதடி.”
நான் பாடும்போது மற்றவர்கள் கைதட்டி தாளம்.
கண்டக்டர் “ தயவு செய்து ப்ளாக்ல டிக்கட் எடுக்காதிங்க”
பிரிய ஸ்நேகிதி “ இதுகள போலவே கண்டக்டரும் லூசு தான்”
எங்கள் ஏரியாவில் ஒரு பிச்சைக்காரன் எப்போதும் எல்லா வீடுகளுக்கும் வருவான். அவனோடு அவன் மனைவி சொர்ணவள்ளி.
அவன் “ துனியாமே கோணுமாரா, துனியாமே கோணுமாரா” என்று பாடிவிட்டு, வாயாலே உச்சு கொட்டி தாளம் போட்டு மூணு ரவுண்டு சுற்றி ஆடுவான். ஆடி முடித்ததும் அதிகாரமாக மனைவியைப்பார்த்து சொல்வான் “ சொர்ணவள்ளி! சோறு வாங்கு”
இந்த பாட்டை பஸ்ஸில் நான் பாடுவேன். சிரிப்பலை.
உடனே ப்ரிய ஸ்நேகிதி சொல்வது “ அசல் பிச்சக்காரன் மாதிரியே இருக்குல்ல”
நான் “ சொர்ணவள்ளி என்ன சொல்லுது?”
ஒரு நாள் பஸ் ஸ்டாப்பில் புத்தகப்பையை வைத்து விட்டு அவசரமாக என் தோழி பஸ் ஏறி பஸ் கிளம்பியவுடன்
“ஐய்யய்யோ, என் புக்ஸு,”
நான் என்ன ஆர்ப்பாட்டம் செய்து பஸ்சை நிறுத்தச்சொல்லியிருப்பேன் என்று சொல்லவும் வேண்டுமோ?
திரும்ப கீழே இறங்கி அவள் புக்ஸை எடுத்துக்கொண்டு மீண்டும் பஸ் ஏறியதும் நான் “ Was this the face that stopped the Cosmopolitan Bus??”
க்றிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸ்.
” Was this the face that launched the thousand ships
And burnt the topless towers of Ilium?
Oh, Sweet Helan! Make me immortal with a Kiss.
All is dross that is not Helena.”
மூவியில் ஃபாஸ்டஸாய் ரிச்சர்ட் பர்ட்டன். எலிசபெத் டெய்லரை பார்த்து சொல்லும் வசனம்.
என் ப்ரிய தோழி என் ஜோக்குக்கு குலுங்கி, குலுங்கி சிரிக்கும் அழகு என் கண்ணுக்குள்ளேயே இன்னும் இருக்கிறது.
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை.
…………………………………………………..


Viewing all articles
Browse latest Browse all 1853


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>