தேவாலயம் என்பது படப்பெயர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா நடித்தார்கள். இது கே.ஆர்.விஜயாவுக்கு முதல் படம் என்று சொன்னால் ’சீ தப்பு..கற்பகம் தான்’ என்பீர்கள். ஆனால் இந்தப்படத்தில் தான் கே.ஆர்.விஜயா முதலில் நடித்தார். படம் முடிக்கப்படவுமில்லை. அதனால் ரிலீஸ் ஆகவுமில்லை. இந்த தேவாலயம் தான் மாஸ்டர் பிரபாகருக்கும் முதல் படம்.
All great performances have a ridiculous beginning.மதுரை சௌராஷ்ட்ரா குடும்பம். பதினொரு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவர்.
கே.எஸ்.ஜி இயக்கி பத்மினி நடித்த ’சித்தி’ தான் பிரபாகருக்கு முதல் படம். ’சித்தி கொடுமை பண்ணுவா’ என்று சுந்தரி பாய் பயமுறுத்தியதை நம்பி சித்தி பத்மினியை பார்த்ததும் நடுங்கும் குழந்தைகளில் பிரபாகரும் ஒருவர்.
குழந்தை நட்சத்திரங்களில் படு பிசியானவர் பிரபாகர். பால்ய காலம் முழுக்க சினிமாவுலகம் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்திபடங்களில் கூட நடித்த பால நடிகர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்திபடங்களில் கூட நடித்த பால நடிகர்.
மறக்கமுடியுமா? மறக்க முடியாத காட்சிகள். காகித ஓடம், கடலலை மேலே மறக்க முடியாத பாடல்.
திருவருட்செல்வரில் திருஞானசம்பந்தர் பாத்திரம் பிரமாதமானது.
மாஸ்டர் பிரபாகரை பயன்படுத்திய முக்கிய இயக்குனர்கள் என்றால் ஏ.பி.நாகராஜனும், கே.பாலச்சந்தரும் தான்.
ஸ்டைல் காட்டி நடித்த சுட்டிப்பையன் மாஸ்டர் பிரபாகர்.
பாமாவிஜயம் “வரவு எட்டணா, செலவு பத்தணா” பாடலில் டான்ஸ்.
பாமாவிஜயம் “வரவு எட்டணா, செலவு பத்தணா” பாடலில் டான்ஸ்.
இருகோடுகள் படத்தில் புத்திசாலி சுட்டியாக துறுதுறு தனத்துடன்.
’புன்னகை மன்னன், பூவிழி கண்ணன் பாட்டின்’ பல்லவி ஆரம்பிக்கு முன் பாலகிருஷ்ணனை வா வா என்று வரவேற்று அழைத்து வரும் அழகு.
தேவரின் ’நேர் வழி’யில் கௌபாய் குதிரை சவாரி, சிங்கத்தின் மீதே உட்கார்ந்த காட்சிகள்.
’வா ராஜா வா’ இன்று உள்ள குழந்தைகளுக்கு கூட பிடித்த படம். மஹாபலிபுரம் பார்க்க போகிறவர்கள் இந்த வா ராஜா வா நினைவில் மூழ்காமல் இருக்கமாட்டார்கள். அதில் கதாநாயகனாக பிரபாகரை நடிக்க வைத்தார் ஏ.பி.நாகராஜன்.
’ராமன் எத்தனை ராமனடி’யில் சிவாஜியை “டேய் சாப்பாட்டு ராமா” என்று கூப்பிடும் சிறுவன். அன்று இது கண்டு பிரமிக்காதவர்கள் கிடையாது.
’எங்க மாமா’ குழந்தைகள் செல்லக்கிளிகளில் ஒன்றாக.
திருமலை தென்குமரியிலும் பிரபாகர் உண்டு.
இளைஞனாக மலையாளப்படம் ’ஈநாடு’.
இன்று சொன்னால் ஆச்சரியம். மொத்தம் 185 படங்கள்.
ஆனால் ஒரு சிறுவனாக ரொம்ப ரசித்து சந்தோஷமாகத் தான் இத்தனை படங்களிலும் அனுபவித்து நடித்திருக்கிறார்.
ஆனால் ஒரு சிறுவனாக ரொம்ப ரசித்து சந்தோஷமாகத் தான் இத்தனை படங்களிலும் அனுபவித்து நடித்திருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ரோல் மாடலாக மாஸ்டர் பிரபாகரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவருடைய தங்கை சுமதி இன்று கனடாவில் இருக்கிறார்.
இன்று வடக்கு உஸ்மான் ரோட்டில் மாஸ்டர் ராஜ்குமார் (ராமு) வீட்டிற்கடுத்த க்ரீன் ஹோமில் பெரிய ஜெராக்ஸ் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார்.