The theatre is so endlessly fascinating because it’s so accidental. It’s so much like life.” – Arthur Miller
ஆர்தர் மில்லர் பிரபலமான அமெரிக்க நாடகாசிரியர் என்று முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.
மர்லின் மன்றோவுக்கு
ஒரு ஐந்து வருடம் வீட்டுக்காரர். புருஷன்.
நாடகாசிரியராக புலிட்சர் விருதெல்லாம்
வாங்கிய கலைஞர்.
கூத்து நாடகம் என்பது இருக்க
நாடகம் மேடையேற்றத்தில் நடக்கும்
விபரீத விபத்தாக நடந்த கூத்து ஒன்றை
மா. அரங்கநாதனின் 'அசலம்'சிறுகதையில் காணலாம்.
ராமன் வேடங்கட்டிய முத்துக்கறுப்பன் அந்த கூத்தை தன் எண்பதாவது வயதில் சாட்சாத் ஸ்ரீ ராமனிடம் சொல்கிறார்.
"நான் அந்த இடத்தில் ( குடிசைகள் உள்ள குப்பம்)
இராமன் வேடங்கட்டி சீதா கல்யாணம் நாடகம் போட்டிருக்கேன்..
அடுத்த வருசமே அந்த நாடக வாத்தியாரு செத்துப் போனாரு - சீதையா நடிச்சது யாரு தெரியுமா - மேலத்தெரு ஆவுடையப்பன் - இன்னும் இருக்கான்.
என்ன பண்ணினான் தெரியுமில்லே. இராவணன் கழுத்திலே மாலையைப் போட்டுட்டான். "
இராவணன் வில்லை ஒடிச்சுச் தொலைச்சிட்டான்.
லேசா அதைத் தொட்டு கீழே வைக்க வேண்டியது தானே - வித்தையெல்லாம் காட்டி நடிச்சான் - வில்லு படார்னு ஒடிஞ்சது. சீதை என்ன செய்வா - சொல்லிக் குடுத்த மாதிரி
ஒடிச்சவனுக்கு மாலையிட்டா"
"வாத்யாரு நேரே வந்து மேடைன்னு கூட பாக்காம அந்த ஆவுடையப்பன அடிச்சாரு பாரு - நான் வந்து வெலக்கினேன் - கொன்னு போட்டிருப்பாரு "
"பொறகு ஒரு வழியா வில்லை திரும்பவும் கட்டி வச்சு இராவணன் ஒடிச்சது வேற வில் - சரியான வில்லு இது தான்னு சனக மகாராசா சொல்லி, நான் ஒடிக்க வந்தேன். என்ன ஆச்சுங்கறே -
அந்த மாதிரி இருகக் கட்டி வச்சா யார் தான் ஒடிக்க முடியும்.. ? சீதைக்குக் கிடைச்சது எனக்கும் திரை மறைவிலே கிடைச்சது"
https://m.facebook.com/story.php?story_fbid=2737865726426876&id=100006104256328
....