கரு பழனியப்பன் இன்று செல் பேசினார். என்னுடைய 'சினிமா எனும் பூதம்'நூல் பற்றி பாராட்டி பேசினார்.
நெகிழ்ச்சியான உரையாடல்.
என் நினைவு பார்த்திபன் கனவுக்கு போய் விட்டது.
2003 ம் ஆண்டு.
திருப்பூருக்கு கிளம்ப சில நாட்கள் இருந்தன.
எப்படியாவது திருச்சியிலேயே
இருந்து விட மாட்டோமா என்று
நானும் அம்மா(என் மனைவி) வும் தவித்தோம்.
வேறு வழியில்லை என்றாகிப் போனது.
தேம்பி அழுதோம். திக்கற்ற நிலை.
அந்த நேரத்தில் கரு. பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' பார்க்க ஆசைப்பட்டேன்.
அம்மாவும் நானும் திருச்சியில் கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் பார்த்திபன் கனவு.
அந்த துயரமான நேரத்தில் பல மாதங்களாக சினிமா பற்றி நினைத்ததேயில்லை.
ஏனென்றால் தரமில்லாத மோசமான படம் பார்க்க நேர்ந்தால் மன உளைச்சல் அதிகமாகி விடும்.
பார்த்திபன் கனவு துயர மனநிலைக்கு
பெரு நிவாரணமாயிருந்தது.