பெரியப்பா.
நாகையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக இருந்த போது Night patrolling போது
நடந்த சம்பவம்.
வருடம் 1978
நல்ல நள்ளிரவு நேரம்.
நாகையை விட்டு தொலைவில்
பெரியப்பா ஜீப்பில் உட்கார்ந்திருக்கிறார்.
ஒரு கார் வருகிறது.
இன்ஸ்பெக்டர்கள் இருவர்
ரோட்டோரமாக நிற்கிறார்கள்.
காரை நிறுத்தியிருக்கிறார்கள்.
காரில் இருந்து ஒரு கடுமையான சத்தம்.
'Sivaji Ganesan is on his way to Madras.'
ஜீப்பில் உட்கார்ந்திருந்த பெரியப்பாவுக்கு இந்த வார்த்தைகள் தெளிவாக கேட்கிறது.
உடனே கேட்கிறார். "What if?"
ஜீப்பை விட்டு இறங்கி காரை நோக்கி நடக்கும் போதே மீண்டும் கேட்கிறார் : "What if?"
கடும் அமைதி.
காருக்குள் இருட்டு.
அந்த குரல்
சிவாஜியுடையதும் அல்ல.
பெரியப்பா கமாண்டிங் வாய்ஸில்
"Switch on the light"
காருக்குள் விளக்கு எரிந்த அதே நொடியில்
அந்த விசேஷ குரலுடன்
தலையை நளினமாக ஆட்டியவாறு சிவாஜி
"Yes, I'm GANESAN "
லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, ஆக்சன் என்றவுடன் எத்தனை காலமாக இயங்கிய சட்டென்று இயங்கிய தேர்ந்த கலைஞன்.
'Please do check'மிக கனிவாக கணேசனின் அடுத்த வார்த்தை.
முன் சீட்டில் ஒருவர். அவர் தான் காரை நிறுத்தியவுடன் முதலில் கடுமையாக சீறியிருக்கிறார்.
சிவாஜியை பெரியப்பா 1962ல்
திண்டுக்கல் அங்கு விலாஸ் முத்தையா பிள்ளை இல்ல திருமண விழாவில் சந்தித்திருக்கிறார்.
அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படம்
பெரியப்பா வீட்டிலும், எங்கள் வீட்டிலும் இருந்தது.
சிவாஜி வேட்டி, அரைக்கை சட்டையுடன். (அந்தக் காலத்தில் சிவாஜி தான் வேட்டி சட்டையில் எவ்வளவு அழகாக தோற்றம் தருவார்)
பெரியப்பா பேன்ட், சர்ட்டில் 'இன்'செய்து பெல்ட் போட்டு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு
பேசுகிற போது,
போட்டோ ஃப்ளாஷுக்கு கணேசன் சற்று எதிர் பாரா ஆச்சரிய பாவங்காட்டி கண் விரிக்கிற அந்த புகைப்படம் கண்ணுக்குள்ளேயே இன்றும் இருக்கிறது.
1980களில் கூட எங்கள் வீடுகளில் இருந்தது. எத்தனை தடவை சிறுவனாக அதை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
எவ்வ்வ்வளவு விசேஷ புகைப்படங்கள் இன்று காணக்கிடைக்காமல்
தொலைந்து போய் விடுகின்றன.
பெரியப்பா 1972ல் ஒரு ஸுட்டிங்கில் சிவாஜியை சந்தித்ததுண்டு.
Patrolling போது இதையெல்லாம்
பெரியப்பா நினைவு கூர்ந்து
அந்த நள்ளிரவு நிகழ்வு
சிவாஜியுடன் ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு.
https://m.facebook.com/story.php?story_fbid=2775950852618363&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=2775854145961367&id=100006104256328