மஹி ஆதிரன் கவிதை
நிஜத்திலிருந்து நெசத்திற்கு
இன்றொரு விரல் சாலையில் கிடந்தது
கால் சற்று தொலைவில்
தலை சக்கரங்கள் இடையே
ரத்த ச் சாலை கவுச்சி மணம்
குப்பை கொட்ட சாலை கடந்தவனின்
மூளை மிக மிகச் சின்னது
அவனது உள்ளங்கை அளவு
அப்பன் அடித்த அடியில்
சிதறிக் கிடக்கும்
குழந்தையை மறந்து விட்டாள்
பால் சுரப்பிகள் வெறும் உறுப்பு
தானாய் ஒழுகுகிறது
இன்றிரவு அவள் முலைகளுக்கு
காவலிருப்பாள் கொற்றவை
வெயிலின் பொருட்டு
பாலும் குருதியும் ஒன்றாய் மணக்கிறது
அந்த குழந்தை உடலுக்கு ஆம்புலன்ஸ்
மிகப் பெரியது
நின்று போன மழைக்கு ஒரு மயிரும் அறிவில்லை
பிணச் சாலையில்
அம்மா என்ற ஒரு குரலை
ஒரு கவ்வியால் பிடுங்கி
நீர் நிறைந்த பாத்திரத்தில் இடும்
மருத்துவர்
சாவதற்கு பதில் இருமுகிறார்
எனது குளியலறையில்
சம்பவத்திற்கு ஒரு பகா எண்ணை
ஒதுக்கும் நானே அந்த சிறு குழந்தை.
https://m.facebook.com/story.php?story_fbid=2818560615024053&id=100006104256328
மஹி ஆதிரன் கவிதை
"நகங்களை
கடித்து
உங்கள்
மேல்
துப்புகிறான்
கவிஞன்
நிலவுத் துணுக்குகள்
என்று பதறும்
திருவாசகர்
உள்ளாடை
மறந்து
குதிக்கின்றனர்
கவிஞன்
திருவாசகர்
தனித்திருக்க
கரையில்
வேட்டியுடன்
சாலையோரச் சிறுமியின்
தலையில்
முத்தமிட்டு
தனதுதட்டின்
ரத்தத்தைத் துடைக்கிறது
வாழ்வு."