ஜூலியன் அசாஞ்சே
விரக்தி நிலை
Auditory hallucination பாதிப்புக்குள்ளாகி
தன்னையே கொல்கிற மனநிலையில்.
நூறு முறைக்கு மேல் தற்கொலை முயற்சியில்.
ராணுவ ரகசியங்களை கசிய விட்டதற்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சூழலில்
முற்றிலும் மனமுடைந்திருக்கும் அசாஞ்சே.
இரண்டு மாதங்களுக்கு முன்பு Single Cell ல போடப்பட்ட பின் மனச்சிதைவு
காதுகளுக்குள் 'நீ குப்பைடா, நீ செத்த,
இந்தா வர்ரோம்டா'
எம். வி. வெங்கட்ராம் இதனால்
கொஞ்சம் பாடா பட்டார்.
அருமையான 'காதுகள்'நாவலாக
அவருடைய துயரம் பரிமளித்தது.
"பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம்.
பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.
வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய்
விளம்பரம் செய்து கொண்டு வரும்.
ஊரில் நிமிர முடியாத படி
தலையில் ஓங்கிக் குட்டும்.
சேர்ந்தாற் போல் சில ஆண்டுகள்
நான் நிம்மதியாக இருந்ததாய்க் கூற முடியுமா?
மனிதனைப் புழுவாய் நெளியவும் துடிக்கவும் வைக்க வறுமை ஒன்று போதாதா?
அது போதாது என்று
புலன்களையும் மனத்தையும் குழப்பும்
இந்த மர்மமான தாக்குதல்."
- எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' நாவலில்.
https://m.facebook.com/story.php?story_fbid=2729770660569716&id=100006104256328