Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

அதிமுகவின் மூலதனம் கருணாநிதி மீதான கடும்பகை மட்டுமே

$
0
0

இதை 2008 செப்டம்பர் மாதத்தில் நான் என் ப்ளாக்கில் எழுதியுள்ளேன்.
அதை அப்படியே கீழே தந்துள்ளேன்
நேற்று வெளி வந்துள்ள 2.2.2015 தேதியிட்ட குமுதத்தில் மணா நான் சி,டி.ராஜகாந்தத்தை பற்றி குறிப்பிட்டுள்ள விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.




"ஜெயலலிதா தான் கருணாநிதிக்கு மரியாதை கொடுப்பதில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் ரொம்ப மரியாதை கொடுத்தார் என்ற அர்த்தத்தில் இப்போது அடிக்கடி சொல்லப்படுகிறது.

ஆனால் மேடையில் எம்.ஜி.ஆர் எப்போதும் ”கருணாநிதி” என்று பெயர் சொல்லி தாக்கித்தான் பேசிக்கொண்டிருந்தார். சட்டசபையில் கருணாநிதியை பி.ஹெச்.பாண்டியன் “ நீ ஒரு கொலைகாரன்” என்று ஏக வசனத்தில் பேசிய போதும்,கருணாநிதியை சட்டசபையில் பொன்னையன் அடிக்கவே பாய்ந்தபோதும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்கவே இல்லை.
ஆண்டவனே என்று எம்.ஜி.ஆர் கருணாநிதியை மட்டுமல்ல, திருச்சி லோகநாகனின் மாமியார் சி.டி.ராஜகாந்தத்தைக்கூடத்தான் விளித்துப் பேசுவார்!

அவரோடு 1940களில் அறிமுகமான பலரையும் எம்.ஜி.ஆர் உரையாடும்போது ’ஆண்டவனே’ என்று தான் விளிப்பார்.
இன்று ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல,எம்.ஜி.ஆருக்கும் அன்று மிக நன்றாகத் தெரியும். ’கருணாநிதி மீதான கடும்எதிர்ப்பு அரசியல்’ மட்டுமே தான் அதிமுகவின் மூலதனம் என்பது.
இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது! என்ன செய்ய? What you don't know can't hurt you! Ignorance is Bliss!"
.....................................

எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டு ,கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின் ஜெயலலிதா தான் தி.மு.கவிற்கு soft target ஆனார். அப்போது ஜெயலலிதா அரசியலில் இல்லை. "ஜெயலலிதாவிடம் போய் கணக்கு கேளு"என்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங் கோவாவில் நடந்த விஷயத்தையும் "இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கோவாவில் ஜெயலலிதாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தாய் நீ"என்றும் தி.மு,க தலைவர்கள் மதுரை முத்து துவங்கி கீழ் மட்ட தொண்டன் வரை அரசியல் பேசினார்கள்.
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு விலக்கவேண்டும் என்று கருணா நிதியிடம் வாதாடி அவசரமாக தானே எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றுசெய்தி கொடுத்தவர் நெடுஞ்செழியன். மதுரையில் அன்பழகன் திலகர் திடலில் பேசிய போது அது பெரிய பாதிப்பை மதில் மேல் பூனையாயிருந்தவர்களிடம் ஏற்படுத்தவில்லை. ஆனால் அடுத்தவாரம் நாவலர் பேச்சைக் கேட்ட பின் தான் தி,மு.க கொடியை எரித்த தொண்டர்கள் பலர் தி.மு.கவிற்கே திரும்பினார்கள். அந்த அளவுக்கு கட்டம் கட்டப்பட்ட எம்,ஜி.ஆர் பற்றி பேசியவர் நெடுஞ்செழியன்.

எம்.ஜி.ஆர் கணக்கு கேட்ட போது யாரெல்லாம் தி.மு.கவில் கோபப்பட்டு கருணாநிதியுடன் கை கோர்த்து நின்றார்களோ, எம்.ஜி.ஆரை கடும் நிந்தனை செய்தார்களோ, அவர்கள் எல்லோரையுமே, மதுரை முத்து,நெடுஞ்செழியன், மாதவன், பண்ருட்டி ராமச்சந்திரன், க.ராஜாராம், ப.உ.சண்முகம்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று இன்னும் பலரையும் ஞானஸ்நானம் கொடுத்து எம்.ஜி.ஆர் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு, தான் கணக்கு கேட்டதற்கே அர்த்தமில்லாமல் ஆக்கினார். அதாவது கருணாநிதியை தனிமைப்படுத்துவது தான் அதிமுகவின் அரசியல் என்றானது ஒரு கேலிக்கூத்து!
இந்திய அரசியலில் கருணாநிதிக்கு முதுகில் விழுந்த குத்து, நம்பிக்கை துரோகம் போல வேறெந்த அரசியல்வாதிக்கும் நடந்தது கிடையாது. ஆனால் இது Blessing in disguise ஆகியதால் 'தி.மு.க'அந்த கட்சித்தலைவரின் 'sole property' !

தொடர்ந்த எதிர்மறை விளைவு அழகிரி நான் தான் பட்டத்து இளவரசன் என்று ஸ்டாலினுடன் மோதியதும், என் மகள் கனிமொழி பங்கு என்ன என்பதான ராஜாத்தியம்மாள் தனியாவர்த்தனமும்.
............................................

http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_18.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1581612448718882




Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>