அகராதி : "புறநகரின் கட்டட அடுக்குகளிடையே எழுத்தாளர் ஒருவரை எதிர்பார்க்கவில்லை. பார்த்தவுடன் அடையாளம் கண்டு (புக் ஃபேர்ல நானும் என் வைஃபும் பாத்தோம். நீங்க பாக்கல) இயல்பாகவும் இனிதாகவும் பேசினார். வீட்டுக்குச் சென்றால் அவர் மனைவியும் அதே இயல்பு இனிது என்றிருக்கிறார்!
ராஜநாயஹத்திடம் அனுபவக் கிடங்குகள் உண்டு. மனிதர் அத்தனை பரிட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார். மத்திய அரசு வேலையை கால்கடுதாசியில் தூக்கிப்போட்டு வந்திருக்கிறார் என்றால் பாருங்கள்..புனைவின் பக்கம் காலெடுத்து வைத்தால் அதகளம்தான்.. பேசும்போது நாலு வரிகளுக்கு ஒரு முறை சரவணன் பிரசன்னமாகிறார். அழகான நட்பு! சந்தோஷமாக இருக்கிறது.❤️"